2026ல் 100 நாட்களுக்கு மேல் லீவு.. ஆர்பிஐ வெளியிட்ட வங்கி விடுமுறை பட்டியல் இதோ
இந்திய ரிசர்வ் வங்கி 2026 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய, மத மற்றும் மாநில விடுமுறைகள் உட்பட 100 நாட்களுக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 வங்கி விடுமுறைகள் பட்டியல்
2026 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தேசிய விடுமுறைகள், முக்கிய மத விழாக்கள் மற்றும் மாநில அளவிலான பிராந்திய விடுமுறைகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. 2026 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் வங்கிகள் 100 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் முன்கூட்டியே தங்கள் நிதி நடவடிக்கைகளை திட்டமிடுவது அவசியமாகிறது. வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அனைத்து நாட்களிலும் அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை இல்லை. உங்கள் அருகிலுள்ள வங்கி கிளையுடன் உறுதி செய்து கொள்வது நல்லது.
2026 – மாதம் வாரியாக முக்கிய வங்கி விடுமுறைகள்
ஜனவரி 2026
ஜனவரி 1 – புத்தாண்டு / கான்-ஙாய்
ஜனவரி 2 – புத்தாண்டு கொண்டாட்டம் / மன்னம் ஜெயந்தி
ஜனவரி 3 – ஹஸ்ரத் அலி பிறந்தநாள்
ஜனவரி 12 – சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்
ஜனவரி 14 – மகர சங்கராந்தி / மக் பிஹு
ஜனவரி 15 – உத்தராயண புண்யகாலம் / பொங்கல் / மாகே சங்கராந்தி
ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 – உழவர் திருநாள்
ஜனவரி 23 – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி / சரஸ்வதி பூஜை
ஜனவரி 26 – குடியரசு தினம்
பிப்ரவரி 2026
பிப்ரவரி 18 – லோசர்
பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி மகாராஜ் பிறந்தநாள்
பிப்ரவரி 20 – மிசோரம் & அருணாசலப் பிரதேச மாநில தினம்
மார்ச் 2026
மார்ச் 2 – ஹோலிகா தஹன்
மார்ச் 3 – ஹோலி / துலாண்டி / டோல் ஜாத்ரா
மார்ச் 4 – ஹோலி (துவெலட்டி) / யாஓசாங்
மார்ச் 13 – சாப்சார் குட்
மார்ச் 17 – ஷப்-ஏ-கத்ர்
மார்ச் 19 – குடி பட்வா / உகாதி / தெலுங்கு புத்தாண்டு
மார்ச் 20 – ஈத்-உல்-பித்ர் / ஜுமாத்துல் விடா
மார்ச் 21 – ரம்ஜான் ஈத் / சர்ஹுல்
மார்ச் 26 - ஸ்ரீ ராம நவமி
மார்ச் 27 – ராம நவமி (சைதே தசைன்)
மார்ச் 31 – மகாவீர் ஜெயந்தி.
வங்கி மூடப்படும் நாட்கள்
ஏப்ரல் 2026
ஏப்ரல் 1 – வங்கி ஆண்டு முடிவு (ஆண்டு நிறைவு)
ஏப்ரல் 2 – மவுண்டி த்ரஸ்டே
ஏப்ரல் 3 – குட் ஃபிரைடே
ஏப்ரல் 14 – அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு / வைசாகி / போஹாக் பிஹு
ஏப்ரல் 15 – பெங்காலி புத்தாண்டு / விஷு / ஹிமாச்சல் தினம்
ஏப்ரல் 16 – போஹாக் பிஹு
ஏப்ரல் 20 – பசவ ஜெயந்தி / அக்ஷய திரிதியை
ஏப்ரல் 21 – காரிய பூஜை
மே 2026
மே 1 – மகாராஷ்டிரா தினம் / புத்த பூர்ணிமா / தொழிலாளர் தினம்
மே 9 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்
மாநில மே 16 – சிக்கிம் தினம்
மே 26 – காஜி நஸ்ருல் இஸ்லாம் பிறந்தநாள்
மே 27–28 – ஈத்-உல்-அதா (பக்ரீத்)
ஜூன் 2026
ஜூன் 15 – YMA தினம் / ராஜா சங்கராந்தி
ஜூன் 25–26 – முஹர்ரம் / ஆஷூரா
ஜூன் 29 – கபீர் ஜெயந்தி
ஜூன் 30 – ரெம்னா-நி.
வங்கி விடுமுறை பட்டியல்
ஜூலை 2026
ஜூலை 22 - கார்ச்சி பூஜை (அகார்தலா - திரிபுரா மட்டும்)
ஆகஸ்ட் 2026
ஆகஸ்ட் 4 – தெய்வ வழிபாட்டு தினம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் / பார்சி புத்தாண்டு
ஆகஸ்ட் 19 – மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் பிறந்தநாள்
செப்டம்பர் 2026
செப்டம்பர் 4 – கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 12 – ஸ்ரீமந்த சங்கரதேவ் தினம்
செப்டம்பர் 14 – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 15 – சம்வத்சரி / நுவகாய்
செப்டம்பர் 21 - ஜனோஸ்வ்
செப்டம்பர் 22 – கர்மா பூஜை
செப்டம்பர் 23 – மகாராஜா ஹரி சிங் ஜெயந்தி
செப்டம்பர் 25 - இந்திர ஜாத்ரா
அக்டோபர் 2026
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 10 – மகாளய அமாவாசை
அக்டோபர் 17 – மகா சப்தமி
அக்டோபர் 19–23 – தசரா / துர்கா பூஜை
அக்டோபர் 26 – லக்ஷ்மி பூஜை / வால்மீகி ஜெயந்தி
அக்டோபர் 29 – கர்வா சௌத்
அக்டோபர் 31 – சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தி.
மாநில வாரியான விடுமுறைகள்
நவம்பர் 2026
நவம்பர் 9–11 – தீபாவளி / கோவர்தன் பூஜை / பாய் தூஜ்
நவம்பர் 13 – வங்காலா திருவிழா
நவம்பர் 16 - சத் பூஜை
நவம்பர் 23 – செங் குட் ஸ்நெம்
நவம்பர் 24 – குரு நானக் ஜெயந்தி
நவம்பர் 27 – கனகதாசர் ஜெயந்தி
டிசம்பர் 2026
டிசம்பர் 1 – பூர்வீக நம்பிக்கை தினம்
டிசம்பர் 3 – செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் திருவிழா
டிசம்பர் 9–11 – லோசோங் / நாம்சோங்
டிசம்பர் 12 – பாவோ டோகன் நெக்மிஞ்சா நினைவு தினம்
டிசம்பர் 18 – உசோசோ தாம் நினைவு தினம்
டிசம்பர் 19 – கோவா விடுதலை தினம்
டிசம்பர் 24–26 – கிறிஸ்துமஸ் ஈவ் & கிறிஸ்துமஸ்
டிசம்பர் 30 – உ கியாங் நாங்பா நினைவு தினம்
டிசம்பர் 31 – புத்தாண்டு முன்னிரவு.
பண பரிவர்த்தனை, செக் கிளியரன்ஸ், முக்கிய வங்கி பணிகளுக்கான விடுமுறை நாட்களுக்கு முன் முடித்துக் கொள்ளுங்கள். ஆன்லைன் வங்கி சேவைகள் பெரும்பாலும் செயல்படும். அவசர தேவைகளுக்கு முன்பே திட்டமிடுவது பாதுகாப்பானது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

