MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Road Safety Report: நைட் டிராவலா? இந்த ‘டேஞ்சர் டைம்’ நோட் பண்ணிக்கோங்க! ஷாக் ரிப்போர்ட்!

Road Safety Report: நைட் டிராவலா? இந்த ‘டேஞ்சர் டைம்’ நோட் பண்ணிக்கோங்க! ஷாக் ரிப்போர்ட்!

Road Safety Report: ச‌மீபத்தில் வெளியான 'இந்தியா சாலைப் பாதுகாப்பு அறிக்கை-2026' ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைப் போட்டுடைத்துள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வண்டி ஓட்டுவதுதான் மிகவும் ஆபத்தானது. அது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 27 2026, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இரவில் இந்த நேரத்தில் வண்டி ஓட்டுவது ஆபத்து
Image Credit : Asianet News

இரவில் இந்த நேரத்தில் வண்டி ஓட்டுவது ஆபத்து

இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 'ஜூனோ ஜெனரல் இன்ஷூரன்ஸ்' வெளியிட்ட 'இந்தியா சாலைப் பாதுகாப்பு அறிக்கை-2026' (IRSR) படி, இரவு 9 மணி முதல் 10 மணி வரை வண்டி ஓட்டுவதுதான் மிகவும் ஆபத்தான நேரம் எனத் தெரியவந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
காரணம் என்ன தெரியுமா?
Image Credit : Gemini Ai

காரணம் என்ன தெரியுமா?

இந்த அறிக்கைப்படி, 80% விபத்துகளுக்குச் சாலையின் நிலையை விட, ஓட்டுநர்களின் நடத்தையும், பழக்கவழக்கங்களுமே முக்கியக் காரணம். இரவு 8 மணிக்கு மேல் ஓட்டுநர்களின் கவனம் சிதறுவதால், இந்த நேரத்தில் விபத்துகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை வண்டி ஓட்ட மிகவும் பாதுகாப்பான நேரம்.
35
பெண்கள் பெஸ்ட்
Image Credit : Asianet News

பெண்கள் பெஸ்ட்

பெண்கள் ஆபத்தான முறையில் வண்டி ஓட்டுவார்கள் என்ற பொதுவான நம்பிக்கையை இந்த அறிக்கை உடைத்துள்ளது. பெண் ஓட்டுநர்களின் சராசரி டிரைவிங் ஸ்கோர் 92.86% ஆகவும், ஆண்களின் ஸ்கோர் 92.43% ஆகவும் உள்ளது. இதன்மூலம், ஆண்களை விட பெண்கள் ஓட்டுவதில் சற்று கவனமாக இருப்பது தெரிகிறது. ஜூனோ நிறுவனத்தின் 'ஸ்மார்ட் டிரைவ்' ஆப் மூலம் 17 மாநிலங்களில் சுமார் 45 லட்சம் பயணங்களின் டேட்டாவை ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
45
ஓட்டுநர்களின் பலவீனங்கள் என்ன?
Image Credit : Asianet News

ஓட்டுநர்களின் பலவீனங்கள் என்ன?

இந்திய ஓட்டுநர்களிடம் காணப்படும் மிகப்பெரிய பலவீனம், சரியான நேரத்தில் பிரேக் பிடிக்காததுதான். இதற்கு வெறும் 87 ஸ்கோர் மட்டுமே கிடைத்துள்ளது. அதோடு, அதிவேகமாகச் செல்லும்போது திடீரென வேகத்தை இன்னும் அதிகரிப்பதும் விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மழைக்காலம் அல்லது குளிர்காலப் பனி போன்ற வானிலை மாற்றங்கள், ஒட்டுமொத்த டிரைவிங் ஸ்கோரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதாவது, வானிலையை விட ஓட்டுநரின் முடிவுகளே இங்கு முக்கியம்.
55
பயங்கரமான புள்ளிவிவரங்கள்
Image Credit : X

பயங்கரமான புள்ளிவிவரங்கள்

இந்த அறிக்கைப்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.73 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். உலகளாவிய சாலை விபத்து மரணங்களில் இந்தியாவின் பங்கு 11% ஆகும். இந்த விபத்துகளால் நாட்டின் ஜிடிபியில் (GDP) 3 முதல் 5% வரை பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மொத்த மரணங்களில் 44% இருசக்கர வாகன ஓட்டிகளும், 19% பாதசாரிகளும் இருப்பது கவலைக்குரிய விஷயம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Electric Cycles for Women: பெண்களுக்கு ஏற்ற பெஸ்ட் எலக்ட்ரிக் சைக்கிள்கள்! விலை, ரேஞ்ச், மாடல் முழு விவரம்
Recommended image2
Nissan Magnite Price Hike: கார் வாங்க போறீங்களா? நிசான் மேக்னைட் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Denza Z9 GT: 600 கி.மீ ரேஞ்ச்.. இந்திய சாலைகளை கலக்க வரும் புதிய எலக்ட்ரிக் கார்.. டெஸ்லாவுக்கு கடும் போட்டி
Related Stories
Recommended image1
EV vs CNG: புது கார் வாங்க போறீங்களா? எலெக்ட்ரிக் vs சிஎன்ஜி! எது பெஸ்ட் சாய்ஸ்?
Recommended image2
Automatic Cars: கியர் மாத்த தேவையில்லை! செம மைலேஜ்! ரூ.10 லட்சத்துக்குள் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved