MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Automatic Cars: கியர் மாத்த தேவையில்லை! செம மைலேஜ்! ரூ.10 லட்சத்துக்குள் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!

Automatic Cars: கியர் மாத்த தேவையில்லை! செம மைலேஜ்! ரூ.10 லட்சத்துக்குள் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!

Automatic Cars: இந்தியாவில் ஆட்டோமேட்டிக் SUV கார்களுக்கு தொடர்ந்து மசுவு அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கும்  நிசான் மேக்னைட், ஹூண்டாய் எக்ஸ்டர் உள்ளிட்ட ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம். 

2 Min read
Author : Rayar A
Published : Jun 22 2026, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரூ.10 லட்சத்துக்குள் ஆட்டோமேட்டிக் கிடைக்கும் கார்கள்
Image Credit : AI

ரூ.10 லட்சத்துக்குள் ஆட்டோமேட்டிக் கிடைக்கும் கார்கள்

இந்தியாவில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து நெரிசலில் வண்டி ஓட்டுவது பெரும் சவாலாக உள்ளது. இவர்களுக்கு கியர் மாத்த தேவையில்லாத ஆட்டோமேட்டிக் கார்கள் கைகொடுக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நிசான் மேக்னைட் (Nissan Magnite)
Image Credit : Autocar

நிசான் மேக்னைட் (Nissan Magnite)

இந்த பட்ஜெட்டில் நிசான் மேக்னைட், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ், டாடா பஞ்ச் போன்ற கார்கள் நல்ல மைலேஜ், சிறந்த வசதிகள் மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்குகின்றன. இதில் முதலாவது இடம்பிடிப்பது நிசான் மேக்னைட். இந்த கார் இப்போதைக்கு நாட்டிலேயே மிகவும் மலிவான ஆட்டோமேட்டிக் SUV. இதன் என்ட்ரி லெவல் விசியா AMT வேரியன்டில் ஆறு ஏர்பேக்குகள், TPMS, கேபின் ஏர் பியூரிஃபையர் மற்றும் ஹாலோஜன் ஹெட்லைட்கள் உள்ளன. இதில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் AMT கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.21 லட்சம் மட்டுமே.

36
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)
Image Credit : stockPhoto

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)

அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர், 83 குதிரைத்திறன் சக்தியை உருவாக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இதன் HX3 ட்ரிம் வேரியன்டில் இருந்து 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் கிடைக்கிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களின் ஆரம்ப விலையை ஹூண்டாய் குறைத்துள்ளது. எக்ஸ்டர் AMT மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.72 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

46
ரெனால்ட் கைகர் (Renault Kiger)
Image Credit : Renault Kiger

ரெனால்ட் கைகர் (Renault Kiger)

ரெனால்ட் கைகர், 10 லட்ச ரூபாய்க்குள் இரண்டு விதமான ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களைக் கொடுப்பதன் மூலம் தனித்து நிற்கிறது. வாடிக்கையாளர்கள் 72 குதிரைத்திறன் கொண்ட 5-ஸ்பீடு AMT இன்ஜின் அல்லது 100 குதிரைத்திறன் கொண்ட டர்போ-பெட்ரோல் CVT இன்ஜின் என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். கீலெஸ் என்ட்ரி, பின்பக்க ஏசி வென்ட்கள், LED டெயில் லேம்ப்கள் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இதன் AMT மாடல் ARAI சான்றிதழின்படி 19.03 கிமீ மைலேஜும், CVT மாடல் 18.24 கிமீ மைலேஜும் தருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

56
மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் (maruti suzuki fronx)
Image Credit : x/Mugdha Mishra Anand

மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் (maruti suzuki fronx)

மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. இதன் உயர் வகை வேரியன்ட்களில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கிறது. ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், நான்கு ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 8.19 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

66
டாடா பஞ்ச் (Tata Punch)
Image Credit : X@basedauto

டாடா பஞ்ச் (Tata Punch)

டாடா பஞ்ச் காரின் பெரும்பாலான வேரியன்ட்களில் 88 குதிரைத்திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதன் ப்யூர்+ வேரியன்டில் இருந்து 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் தொடங்குகிறது. இதில் உள்ள ஒரு முக்கிய சிறப்பு என்னவென்றால், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் CNG-AMT வேரியன்ட் கிடைக்கிறது. டாடா பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7.60 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
தானியங்கி கார்கள்
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top Selling Cars In India: குறிப்பிட்ட கார்களை மட்டும் போட்டிப்போட்டு வாங்கி குவிக்கும் இந்தியர்கள்
Recommended image2
Hyundai Bayon SUV: வென்யூ, கிரெட்டாவுக்கு நடுவில் புது ஹூண்டாய் எஸ்யூவி.. ஹூண்டாய் பாயோன் புக்கிங் ஓபன் ஆயிடுச்சு
Recommended image3
EV Cars : ₹15 லட்சத்துக்குள் 5 எலெக்ட்ரிக் கார்கள்! பட்ஜெட்டுக்கு ஏற்ற கார் எது? ரேஞ்ச், விலை முழு லிஸ்ட்
Related Stories
Recommended image1
Top 5 Automatic Cars: கியர் மாற்றும் டென்ஷன் இல்லை.. புதிய ஓட்டுநர்களுக்கான டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Recommended image2
Car AC: மேனுவல் ஏசி vs ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் - உங்க காருக்கு எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved