Car AC: மேனுவல் ஏசி vs ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் - உங்க காருக்கு எது பெஸ்ட்?
Car AC:கார்ல மேனுவல் ஏசி நல்லதா, இல்ல ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் நல்லதா? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம், எதுல என்ன ப்ளஸ், என்ன மைனஸ்னு இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Manual AC vs Automatic Climate Control
ஆட்டோமொபைல் டெஸ்க்: வெயில் கொளுத்தும் போது, காருக்குள் ஏறி உட்கார்ந்ததும் நாம தேடுறது ஏசி பட்டனைத்தான். கார் கேபின் சில்லுனு ஆனாதான் நிம்மதியா இருக்கும். இப்போதெல்லாம் மார்க்கெட்டுக்கு வர்ற எல்லா கார்களிலும் இரண்டு விதமான ஏசி சிஸ்டம் வருது. ஒண்ணு மேனுவல் ஏசி, இன்னொன்னு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்.
புதுசா கார் வாங்கப் போறவங்களுக்கு இதுல ஒரு பெரிய குழப்பமே இருக்கும். மேனுவல் ஏசி போதுமா, இல்ல ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் இருக்கிற காரை வாங்கலாமான்னு யோசிப்பாங்க. இந்த ரெண்டு ஏசி சிஸ்டத்துக்கும் என்ன வித்தியாசம், எதுல என்ன ப்ளஸ், என்ன மைனஸ்னு வாங்க சிம்பிளா பார்க்கலாம்.

மேனுவல் ஏசி எப்படி வேலை செய்யுது?
மேனுவல் ஏசி சிஸ்டம் இருக்கிற கார்களில், நீங்கதான் டெம்ப்ரேச்சர் மற்றும் காத்தோட வேகத்தை கையால அட்ஜஸ்ட் பண்ணனும். இதுல மூணு கண்ட்ரோல் நாப் இருக்கும். ஒண்ணு டெம்ப்ரேச்சர், ரெண்டாவது ஃபேன் ஸ்பீடு, மூணாவது காத்து வர்ற திசை. இந்த சிஸ்டம், காருக்குள் இருக்கிற சூடான காத்தை கூலிங் யூனிட் மூலமா குளிர்விச்சு, ப்ளோயர் வழியா கேபினுக்கு அனுப்பும்.
நன்மைகள்
பட்ஜெட்டுக்கு ஏற்றது: ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தை விட மேனுவல் ஏசி சிஸ்டம் விலை குறைவு. அதனால, பட்ஜெட்டுக்குள்ள ஒரு நல்ல ஏசி கார் வாங்க நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வா இருக்கும்.
பராமரிப்பு சுலபம்: மேனுவல் ஏசி சிஸ்டத்தில் பாகங்கள் குறைவு. அதனால, மெக்கானிக்குகளுக்கு இதை ரிப்பேர் பண்றது ரொம்ப சுலபம். பராமரிப்பு செலவும் பெருசா இருக்காது.
குறைகள்
வெப்பநிலை ஏற்ற இறக்கம்: மேனுவல் ஏசியில் ஒரே சீரான வெப்பநிலையை மெயின்டெயின் பண்றது கொஞ்சம் கஷ்டம். சில சமயம் ரொம்ப குளிரும், சில சமயம் சூடா இருக்கும். இது பயணத்தின்போது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
அடிக்கடி அட்ஜஸ்ட் செய்யணும்: நீண்ட தூரம் பயணம் செய்யும்போது, டெம்ப்ரேச்சரையும், ஃபேன் ஸ்பீடையும் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கணும். இது டிரைவருக்கு எரிச்சலைத் தருவதோடு, அவங்க கவனத்தையும் சிதறடிக்க வாய்ப்பிருக்கு.
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி எப்படி வேலை செய்யுது?
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஒரு ஸ்மார்ட் ஏசி சிஸ்டம் மாதிரி. இது காருக்குள் இருக்கிற வெப்பநிலையை தானாகவே கண்ட்ரோல் பண்ணும். நீங்க ஒரு தடவை டெம்ப்ரேச்சரை செட் பண்ணிட்டா போதும், அதுல இருக்கிற சென்சார்கள் அதே வெப்பநிலையை மெயின்டெயின் பண்ணிக்கும். நீங்க அடிக்கடி கண்ட்ரோல்களை மாத்த வேண்டிய அவசியமே இல்லை.
நன்மைகள்
பாதுகாப்பு: ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி இருக்கிற கார்களில், டிரைவர் அடிக்கடி ஏசியை அட்ஜஸ்ட் பண்ணத் தேவையில்லை. இதனால அவங்க கவனம் சிதறாது, டிரைவிங்ல முழு கவனமும் இருக்கும்.
சிறந்த மைலேஜ்: இந்த சிஸ்டம், தேவையில்லாம ஏசி ஓடுவதைத் தடுக்கும். இதனால எரிபொருள் மிச்சமாகும், வண்டி நல்ல மைலேஜ் கொடுக்கும்.
குறைகள்
ரிப்பேர் செலவு அதிகம்: ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசியில் நிறைய சென்சார்கள் மற்றும் பாகங்கள் இருக்கும். இது மேனுவல் ஏசியை விட சிக்கலானது. அதனால, ஒருவேளை இது ரிப்பேர் ஆச்சுன்னா, செலவு அதிகமாகும்.
பயன்படுத்துவதில் சிக்கல்: சிலருக்கு, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோலில் உள்ள பட்டன்களைப் புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். முதல்முறை பயன்படுத்துறவங்களுக்கு இந்த செட்டிங்ஸ் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

