குழந்தைகளுக்கான Vida Dirt.E K3 எலக்ட்ரிக் டர்ட் பைக் இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா, குழந்தைகளுக்காக Dirt.E K3 என்ற புதிய எலக்ட்ரிக் டர்ட் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் பாதுகாப்பு அம்சங்கள், பெற்றோருக்கான ஸ்மார்ட்போன் செயலி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் பைக்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார வாகன பிரிவான விடா, குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் டர்ட் பைக் Dirt.E K3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 4 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டார்ட் பைக்கிங் உலகில் பாதுகாப்பாக நுழைய உதவும் வகையில் இந்த மாடல் உள்ளது. கடந்த ஆண்டு EICMA 2025 கண்காட்சியில் அறிமுகமான இந்த பைக், விடாவின் டார்ட் பைக் குடும்பத்தின் முதல் மாடலாகும்.
ஹீரோ மோட்டோகார்ப்
Dirt.E K3-யின் முக்கிய சிறப்பு அதன் அட்ஜஸ்டபிள் வடிவமைப்பு. குழந்தையின் உயரம் மற்றும் பயிற்சி நிலையைப் பொறுத்து வீல்பேஸ், ஹேண்டில் பார் உயரம் மற்றும் ரைடு ஹைட்டை மாற்றிக்கொள்ள முடியும். சிறிய, நடுத்தர, பெரிய என மூன்று அமைப்புகளில் கிடைக்கும் இந்த பைக்கின் சீட் உயரம் முறையே 454 மிமீ, 544 மிமீ மற்றும் 631 மிமீ ஆக உள்ளது. இதனால் குழந்தை வளர வளர பைக்கும் அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். இதன் மொத்த எடை 22 கிலோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
விடா டர்ட் பைக்
பாதுகாப்பு அம்சங்களில் Dirt.E K3 கவனம் செலுத்துகிறது. நடந்து செல்லும் பயிற்சிக்காக ரிமூவபிள் ஃபுட்பெக்ஸ், விபத்து நேரங்களில் பாதுகாப்பளிக்கும் ஹேண்டில் பார் செஸ்ட் பேட், மேக்னடிக் கில் ஸ்விட்ச் மற்றும் ரியர் மோட்டார் கவர் போன்ற அம்சங்கள் உள்ளன. இயல்பாக ரியர் பிரேக் மட்டும் வழங்கப்படுகின்றது. தேவையெனில் முன்புற பிரேக், பெரிய சக்கரங்கள், கூடுதல் சஸ்பென்ஷன் மற்றும் ரோடு-ஸ்பெக் டயர்கள் போன்றவை விருப்ப உபகரணங்களாக பெறலாம்.
குழந்தைகள் ஆஃப்-ரோடு பைக்
இந்த எலக்ட்ரிக் டர்ட் பைக் 500W மின்மோட்டாருடன் 360Wh திறன் கொண்ட ரிமூவபிள் லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. குறைந்த, நடு, உயர் என மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பயிற்சியாளர்கள் படிப்படியாக தன்னம்பிக்கை பெறும் வகையில் வேக கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குறுகிய பயிற்சி சவாரிகள் மற்றும் தொடக்க நிலை ஆஃப்-ரோடு அனுபவங்களுக்கு இது ஏற்றதாகும்.
எலக்ட்ரிக் டர்ட் பைக்
பெற்றோர்கள் குழந்தையின் சவாரியை கண்காணிக்க உதவும் ஸ்மார்ட்போன் கனெக்டெட் ஆப் இதில் வழங்கப்படுகிறது. வேக வரம்பு, ஆக்சிலரேஷன் மற்றும் ரைடு விவரங்கள் இதில் கட்டுப்படுத்தலாம். வடிவமைப்பு மற்றும் எர்கோனாமிக்ஸ் சிறப்பு சர்வதேச Red Dot Award-ஐ பெற்றுள்ள இந்த Dirt.E K3, இந்தியாவில் அறிமுக விலையாக ரூ.69,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

