அதிரடியாக உயர்ந்த விலை.. TVS Apache RTX BTO வேரியண்ட் விலை எவ்வளவு தெரியுமா?
சமீபத்தில் அறிமுகமான TVS Apache RTX பைக்கின் BTO (Built-To-Order) மாடல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச தர சஸ்பென்ஷன் மற்றும் TPMS போன்ற அம்சங்களைக் கொண்ட இந்த மாடலின் விலை உயர்ந்துள்ளது.

TVS Apache RTX
சமீபத்தில் வெளியான TVS Apache RTX க்கு பின், BTO (Built-To-Order) மாடலின் விலை ரூ. 5,000 உயர்ந்துள்ளது. இப்போது BTO வேரியண்ட் ரூ. 2.34 லட்சம் (எக்ஸ்ஷோரூம், பெங்களூரு) ஆகும். ஆரம்ப விலை 1.99 லட்சம் முதல் 2.29 லட்சம் வரை இருந்தது. BTO வேரியண்ட் மட்டுமே விலை மாற்றம் பெற்றுள்ளது. Base மற்றும் Top வேரியண்ட்கள் இதற்குப் பிறகு மாற்றமில்லை.
BTO variant
BTO மாடல் சர்வதேச தரத்திற்கேற்ற சஸ்பென்ஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் (TPMS) போன்ற அம்சங்களுடன் வருகிறது. Apache RTX 299cc RT-XD4 இன்ஜினுடன் இயங்குகிறது. 36 ஹார்ஸ் பவர் மற்றும் 28.5Nm டார்க் வழங்கும் இந்த லிக்விட் கூல்டு, சிங்கிள் சில்லிண்டர் என்ஜின், TVS இரண்டாவது சக்திவாய்ந்த மோட்டார். இது ஆஃப்ரோடுக்கு அல்ல, அதிகம் டூரிங் மற்றும் கம்போர்ட் பயணத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Price hike
முழு ரைடு அனுபவத்தை சீராக, பாதுகாப்பாக, மற்றும் கம்போர்ட்டானதாக உணர இந்த வேரியண்ட் சிறந்த தேர்வு. புதிய விலை மாற்றம் வாங்கும் பயனாளர்களுக்கு முன்பே அறிவிக்கபட்டது, மற்ற வேரியண்ட்கள் விரைவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.