MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Electric Scooters: லைசென்ஸ் வேண்டாம்.. பெண்களுக்கேற்ற டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

Electric Scooters: லைசென்ஸ் வேண்டாம்.. பெண்களுக்கேற்ற டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

Electric Scooters: டிரைவிங் லைசென்ஸ் எடுக்காமல் பெண்கள் எளிதாக ஓட்டக்கூடிய டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், அவற்றின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 22 2026, 07:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெண்கள் எளிதில் ஓட்டக்கூடிய ஸ்கூட்டர்கள்
Image Credit : AI

பெண்கள் எளிதில் ஓட்டக்கூடிய ஸ்கூட்டர்கள்

வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஸ்கூட்டர்கள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. ஆனால், டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் ஆர்டிஓ (RTO) அலுவலக அலைச்சல்களால் பலரும் ஸ்கூட்டர்கள் வாங்கத் தயங்குகிறார்கள். ஆனால், இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலேயே ஓட்டக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன.

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி, 250 வாட்ஸ்க்கும் குறைவான மின் திறன் கொண்ட மோட்டார் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் இல்லை. இந்த ஸ்கூட்டர்கள் குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta)
Image Credit : Google

1. ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta)

குடும்பப் பயன்பாட்டிற்கும், பெண்களின் வசதிக்கும் பெயர்போன ஏத்தர் நிறுவனத்தின் இந்த மாடல், மிகச்சிறந்த இடவசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. தினசரி மார்க்கெட் செல்வதற்கும், அலுவலகம் சென்று வருவதற்கும் இது மிகவும் வசதியானது. இதன் நவீன தோற்றம் மற்றும் எளிமையான இயக்கம் பெண்களுக்குப் பிடித்தமானதாக அமையும். இதன் ஆரம்ப விலை தோராயமாக ரூ.75,000 முதல் தொடங்குகிறது.

35
2. ஓலா கிக் (Ola Gig)
Image Credit : Google

2. ஓலா கிக் (Ola Gig)

நம்பகமான நிறுவனத்தின் தயாரிப்பான இந்த ஸ்கூட்டர் குறைந்த தூரப் பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. நீங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 112 கிலோமீட்டர் வரை எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கலாம். மற்ற ஸ்கூட்டர்களுக்கு இணையாக இதில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. இதன் குறைந்த எடை, பெண்கள் சுலபமாக கையாண்டு ஓட்ட உதவுகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.39,999-ல் இருந்து தொடங்குகிறது.

45
3. டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube - Low Speed Variant)
Image Credit : TVS

3. டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube - Low Speed Variant)

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ்-ன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அதன் உறுதியான கட்டமைப்புக்குப் பெயர் பெற்றது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சமச்சீரான எடையைக் கொண்டுள்ளது. தினசரிப் பயணங்களுக்கு மிகவும் நம்பகமான தேர்வாக இது இருக்கும். இதன் விலை தோராயமாக ரூ.80,000-ல் இருந்து தொடங்குகிறது.

55
4. ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் எல்.எக்ஸ் (Hero Electric Flash LX)
Image Credit : our own

4. ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் எல்.எக்ஸ் (Hero Electric Flash LX)

இந்தியாவில் நம்பகமான, உறுதியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுபவர்களுக்கு ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் எல்.எக்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் எல்இடி லைட் மோட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த வண்டியின் பராமரிப்புச் செலவு மிகக் குறைவு. பெண்களுக்குக் கையாள மிகவும் எளிதான ஸ்கூட்டர் இதுவாகும். இதன் விலை தோராயமாக ரூ.64,000 ஆகும்.

5. யூலு வின் (Yulu Wynn)

இது ஒரு காம்பாக்ட் மற்றும் ஸ்டைலான ஸ்கூட்டர் ஆகும். நகர்ப்புற கூட்ட நெரிசலில் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்க இந்த ஸ்கூட்டர் உதவுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் பேட்டரியைக் கழட்டி வீட்டிற்க்கே கொண்டு சென்று சார்ஜ் செய்து கொள்ளலாம். ஓட்டுவதற்கு சைக்கிள் போல மிக எளிதாக இருப்பதால், பெண்கள் ஓட்டுவதற்கு மிகவும் பொருத்தமான ஸ்கூட்டராக இது இருக்கும். யூலு வின் மாடலின் விலை ரூ.60,000 ஆகும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Maruti Baleno Vs Tata Altroz: 6 லட்ச ரூபாயில் எந்த கார் பெஸ்ட்? மைலேஜ் முதல் ரீசேல் வேல்யூ வரை ஒரு அலசல்
Recommended image2
Scooter Sales : இந்தியாவில் அதிகம் விற்பனையான 10 ஸ்கூட்டர்கள்! ஆகஸ்ட் மாத விற்பனையில் யார் டாப்?
Recommended image3
Maruti Suzuki CNG: ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் CNG கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
Top 5 EV Scooters : இனி சார்ஜ் ஏத்தும் கவலையே வேண்டாம்! பேட்டரி மாற்றும் வசதி கொண்ட பெஸ்ட் 5 ஸ்கூட்டர்கள் இதோ!
Recommended image2
Best Selling Scooters: ஆகஸ்டில் அதிகம் விற்ற ஸ்கூட்டர்கள் எவை? வாங்கும் முன் இந்த டாப் 5 லிஸ்ட்டை பாருங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved