MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Electric Cars: 10 ஆண்டுகள் பேட்டரி வாரண்டி.. மிரளவிடும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Electric Cars: 10 ஆண்டுகள் பேட்டரி வாரண்டி.. மிரளவிடும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Top 5 Electric Cars in India: இந்தியாவில் 10 ஆண்டுகள் பேட்டரி வாரண்டி வழங்கும் மிரள வைக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 09 2026, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
10 ஆண்டுகள் பேட்டரி வாரண்டி கொடுக்கும் எலெக்ட்ரிக் கார்கள்
Image Credit : AI

10 ஆண்டுகள் பேட்டரி வாரண்டி கொடுக்கும் எலெக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்துக்கு சென்று வருவதால் பலரும் எலெக்ட்ரிக் கார்களை வாங்கி வருகின்றனர். இதனால் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. எலெக்ட்ரிக் கார் வாங்க நினைப்பவர்களின் மனதில் இருக்கும் மிகப்பெரிய கேள்வி, 'பேட்டரி எத்தனை ஆண்டுகள் உழைக்கும்?' என்பதுதான். ஏனெனில் காரின் விலையில் பெரும் பகுதி பேட்டரிக்கே செலவிடப்படுவதால் அதன் பாதுகாப்பு மற்றும் வாரண்டியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் 10 ஆண்டுகள் வாரண்டி வழங்கும் எலெக்ட்ரிக் கார்கள் குறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
எம்ஜி வின்ட்சர் EV (MG Windsor EV)
Image Credit : Google

எம்ஜி வின்ட்சர் EV (MG Windsor EV)

இந்தியாவில் முதன்முறையாக எலெக்ட்ரிக் கார் பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி (Lifetime Warranty) அறிவித்தது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தான். அதாவது வின்ட்சர் EV காரை வாங்கும் முதல் உரிமையாளருக்கு பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி வழங்கி வருகிறது. இந்த காரில் பேட்டரி வாடகைத் திட்டம் (BaaS) இருப்பதால், ஆரம்ப விலை குறைவாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டரி உழைக்கும் என்ற நம்பிக்கையை இது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.

Related Articles

Related image1
Best Selling Cars : ஏப்ரல் மாதத்தில் விற்ற டாப் 5 கார்கள்.. முதல் இடம் இந்த காரா? முழு லிஸ்ட் இங்கே
Related image2
பெட்ரோல் விலைக்கு குட்பை.. அதிக ரேஞ்ச் தரும் டாப் 5 பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!
35
டாடா பஞ்ச் EV (Tata Punch EV)
Image Credit : Google

டாடா பஞ்ச் EV (Tata Punch EV)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க 15 ஆண்டுகள் வரை பேட்டரி வாரண்டி கொடுக்கிறது. அந்த வகையில் டாடா பஞ்ச் EV காரின் புதிய மாடலுக்கு பிரீமியம் பேக்கேஜ் மூலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பேட்டரி வாரண்டியை வழங்குகிறது. டாடா பஞ்ச் நடுத்தர மக்களின் தேர்வாக உள்ளது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தடையின்றி பயணம் செய்ய முடியும்.

45
டாடா நெக்ஸான் EV (Tata Nexon EV)
Image Credit : Google

டாடா நெக்ஸான் EV (Tata Nexon EV)

இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் காரான டாடா நெக்ஸான் EV வாடிக்கையாளர்களின் நற்மதிப்பை பெற்றுள்ளது. இந்த காருக்கு பொதுவாக 8 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்பட்டாலும், டாடா நிறுவனத்தின் சிறப்பு நீட்டிக்கப்பட்ட வாரண்டி (Extended Warranty) திட்டத்தின் மூலம் இதை 10 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ வரை உயர்த்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நெக்ஸான் இந்தியாவில் அதிக சார்ஜிங் நிலையங்களைக் கொண்ட நிறுவனம் ஆகும்.

55
பிஒய்யுடி ஆட்டோ 3 (BYD Atto 3)
Image Credit : BYD website

பிஒய்யுடி ஆட்டோ 3 (BYD Atto 3)

சீனாவின் பிஒய்யுடி நிறுவனம் இந்தியாவில் 8 ஆண்டுகள் ஸ்டாண்டர்ட் வாரண்டி வழங்குகிறது. மேலும் கூடுதல் சந்தா திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகள் வரை பேட்டரி பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா EV (Hyundai Creta Electric)

இந்திய சாலைகளின் ராஜா என்று அழைக்கப்படும் கிரெட்டா நிறுவனத்தின் ஹூண்டாய் கிரெட்டா EV கார் வாடிக்கையாளர்களிடம் அமோக ஆதரவை பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ வாரண்டியுடன், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய 'வொரி-ப்ரீ' (Worry-Free) பேக்கேஜை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ
மின்சார கார்
டாடா கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Selling Cars : ஏப்ரல் மாதத்தில் விற்ற டாப் 5 கார்கள்.. முதல் இடம் இந்த காரா? முழு லிஸ்ட் இங்கே
Recommended image2
Sunroof Car : ரூ.10 லட்சத்துக்குள் பனோரமிக் சன்ரூஃப் உடன் உள்ள தரமான SUV கார் பற்றி தெரியுமா?
Recommended image3
Maruti Suzuki Eeco : ரூ.5.21 லட்சத்துக்கு 6 சீட்டர் கார்.. 26.78 கிமீ மைலேஜ்.. மாருதியின் புதிய அவதாரம்
Related Stories
Recommended image1
Best Selling Cars : ஏப்ரல் மாதத்தில் விற்ற டாப் 5 கார்கள்.. முதல் இடம் இந்த காரா? முழு லிஸ்ட் இங்கே
Recommended image2
பெட்ரோல் விலைக்கு குட்பை.. அதிக ரேஞ்ச் தரும் டாப் 5 பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved