MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பெட்ரோல் விலைக்கு குட்பை.. அதிக ரேஞ்ச் தரும் டாப் 5 பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!

பெட்ரோல் விலைக்கு குட்பை.. அதிக ரேஞ்ச் தரும் டாப் 5 பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Top 5 Budget Electric Cars: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில், அதிக ரேஞ்ச கொடுக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம். 

2 Min read
Author : Rayar A
Published : May 02 2026, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அதிக ரேஞ்ச் தரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்
Image Credit : AI

அதிக ரேஞ்ச் தரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உச்சத்தில் சென்று வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் (EV) பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர். பராமரிப்பு செலவு குறைவு, சத்தமில்லாத பயணம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதது என்பதால் மின்சார கார்களுக்கு செல்வாக்கு கூடிக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் இப்போது அதிக ரேஞ்ச கொடுக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
எம்ஜி கோமெட் இவி (MG Comet EV)
Image Credit : Gemini

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV)

குறைவான விலையில் சூப்பரான எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு எம்ஜி கோமெட் மாடல் சிறந்த தீர்வாகும். இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 17.3kWh பேட்டரி கொண்ட இந்த கார் 41.43 bhp பவரையும், 110 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கி.மீ வரை செல்லும் என்று ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடலின் விலை ரூ.7.62 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.: 'BaaS' (Battery as a Service) திட்டத்தின் கீழ் பேட்டரியை வாடகைக்கு எடுத்தால், வெறும் ரூ.4.99 லட்சத்திற்கே இந்த காரை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

36
டாடா டியாகோ (Tata Tiago EV)
Image Credit : our own

டாடா டியாகோ (Tata Tiago EV)

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் டியாகோ எலெக்ட்ரிக் கார் நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த மாடல் 19.2kWh மற்றும் 24kWh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல் அதிகப்பட்சமாக 315 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

46
டாடா பன்ச் (Tata Punch EV)
Image Credit : Tata Motors website

டாடா பன்ச் (Tata Punch EV)

பட்ஜெட் விலையில் ஒரு எஸ்யூவி கார் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு டாடா பன்ச் சரியான சாய்ஸ் ஆக இருக்கும். இந்த காரில் 30kWh மற்றும் 40kWh ஆகிய இரு பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 420 முதல் 468 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கிறது. இந்த மாடலின் விலை ஆரம்ப விலை ரூ.9.69 லட்சம் ஆகும். 'BaaS' மூலம் வாங்கினால் ரூ.6.49 லட்சத்துக்கே பெற முடியும்.

56
சிட்ரோன் இசி3 (Citroen eC3)
Image Credit : our own

சிட்ரோன் இசி3 (Citroen eC3)

சிட்ரோன் இசி3 கார் அதிக இடவசதி மற்றும் சொகுசுக்காக பெயர் பெற்றது. 29.2kWh அதிக அடர்த்தி கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளதால் 320 கி.மீ வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூ.11.99 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

66
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV)
Image Credit : Google

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV)

மாடர்ன் லுக் மற்றும் அதிரடி பெர்ஃபார்மென்ஸ் விரும்புபவர்களுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எலெக்ட்ரிக் கார் ஏற்றதாகும். 39.4kWh பெரிய பேட்டரி பேக் கொண்ட இந்த கார் ஒரு முழு சார்ஜில் 400 கி.மீ முதல் 450 கி.மீ வரை ரேஞ்ச் கொடுக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.13.89 லட்சத்திலிருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மின்சார கார்
ஆட்டோ
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra Sales: 31 நாட்களில் 1.31 லட்சம் வாகனங்கள் விற்பனை! ஸ்கார்பியோ, தார், XUV கார்களுக்கு மவுசு
Recommended image2
ஹோண்டா ஆக்டிவா vs டி.வி.எஸ் என்டார்க் 125: குடும்பத்திற்கு எது சிறந்தது? இளைஞர்களுக்கு எது மாஸ்?
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Related Stories
Recommended image1
ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சீப் அண்ட் பெஸ்ட் 7-சீட்டர் கார்கள் என்னென்ன?
Recommended image2
டாடா டூ எம்.ஜி.. விலை கம்மி.. அதிக ரேஞ்ச்.. நடுத்தர மக்களுக்கான டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved