MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Best Selling Cars : ஏப்ரல் மாதத்தில் விற்ற டாப் 5 கார்கள்.. முதல் இடம் இந்த காரா? முழு லிஸ்ட் இங்கே

Best Selling Cars : ஏப்ரல் மாதத்தில் விற்ற டாப் 5 கார்கள்.. முதல் இடம் இந்த காரா? முழு லிஸ்ட் இங்கே

ஏப்ரல் 2026 விற்பனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து, 23,000க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்று சாதனை படைத்திருக்கிறது. ஏன் இந்த கார் மீது மக்கள் இவ்வளவு ஈர்க்கப்படுகிறார்கள்? ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்ற டாப் 5 கார்கள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : May 09 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிகம் விற்ற கார்கள் பட்டியல்
Image Credit : Maruti Suzuki

அதிகம் விற்ற கார்கள் பட்டியல்

இந்திய கார் சந்தையில் 2026 ஏப்ரல் மாதமும் மாருதி சுசுகி தனது ஆதிக்கத்தை தெளிவாகத் தொடர்ந்துள்ளது. அதிகம் விற்பனையான முதல் 5 கார்கள் பட்டியலில் நான்கு மாடல்கள் மாருதியின் வசம் சென்றுள்ளன. இதன் நடுவில் டாடா பஞ்ச் இரண்டாவது இடத்தை பிடித்து வலுவான போட்டியை வழங்கியது. மேம்பட்ட அம்சங்கள், நம்பிக்கை மற்றும் அதிகரித்த தேவையால் இந்த மாடல்களின் விற்பனை மிகவும் உயர்ந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மாருதி சுசுகி டிசைர்
Image Credit : Google

மாருதி சுசுகி டிசைர்

முதல் இடத்தை பிடித்தது மாருதி சுசுகி டிசைர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 23,000க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையானது. புதிய டிசையர், ஸ்டைலான வடிவமைப்பு, வசதியான கேபின் மற்றும் சிறந்த மைலேஜ் காரணமாக குடும்பங்களுக்கும் இளம் வாடிக்கையாளர்களுக்கும் பிடித்த தேர்வாக மாறியுள்ளது. சன் ரூஃப், மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஏர்பேக் போன்ற அம்சங்கள் இதன் கவர்ச்சியை மேலும் உயர்த்துகின்றன.

Related Articles

Related image1
அச்சச்சோ..! ஸ்கூட்டர் விலை அதிரடி உயர்வு.. யமஹாவின் புதிய விலைப்பட்டியல் உள்ளே
Related image2
Maruti Suzuki Eeco : ரூ.5.21 லட்சத்துக்கு 6 சீட்டர் கார்.. 26.78 கிமீ மைலேஜ்.. மாருதியின் புதிய அவதாரம்
35
சுசுகி டிசைர் அம்சங்கள்
Image Credit : Google

சுசுகி டிசைர் அம்சங்கள்

ரூ.6.26 லட்சம் தொடக்க விலையில் கிடைக்கும் டிசைர், 1.2 லிட்டர் Z-சீரிஸ் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. 80 PS பவர் வழங்கும் இந்த கார், சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. மைலேஜ் தரப்பில், பெட்ரோலில் சுமார் 25.7 kmpl மற்றும் சிஎன்ஜியில் 33.7 km/kg வரை வழங்குவதால், குறைந்த செலவில் அதிக பயன் தேடும் பயணிகளுக்கு இது ஒரு சரியான தேர்வாக இருக்கிறது.

45
டாடா பஞ்ச்
Image Credit : Tatamotors

டாடா பஞ்ச்

இரண்டாவது இடத்தில் இருக்கும் டாடா பஞ்ச், கடந்த ஆண்டை விட 50 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது. வலுவான உடல் அமைப்பு, 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் எஸ்யூவி போன்ற தோற்றம் ஆகியவை இதன் முக்கிய பலமாகும். மூன்றாவது இடத்தில் இருக்கும் மாருதி சுசுகி Ertiga, பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பரந்த இடவசதி மற்றும் நம்பகத்தன்மையால் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

55
மாருதி சுசுகி பிராங்க்ஸ்
Image Credit : maruti suzuki

மாருதி சுசுகி பிராங்க்ஸ்

மேலும் மாருதி சுசுகி பிராங்க்ஸ் மற்றும் மாருதி சுசுகி வேகன்ஆர் மாடல்களும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பிராங்ஸ் இன் ஸ்டைலான லுக் மற்றும் டர்போ என்ஜின் இளைஞர்களை ஈர்க்கிறது. வேகன்ஆர் இன் குறைந்த விலை, எளிதான ஓட்டம் மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருந்தால் சிறிய குடும்பங்களுக்கு பெரிய ஆதரவாக அமைந்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி கார்
டாடா கார்கள்
குறைந்த விலை கார்
குடும்ப கார்கள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunroof Car : ரூ.10 லட்சத்துக்குள் பனோரமிக் சன்ரூஃப் உடன் உள்ள தரமான SUV கார் பற்றி தெரியுமா?
Recommended image2
Maruti Suzuki Eeco : ரூ.5.21 லட்சத்துக்கு 6 சீட்டர் கார்.. 26.78 கிமீ மைலேஜ்.. மாருதியின் புதிய அவதாரம்
Recommended image3
ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கார்களில் மெகா சலுகை.. நம்ப முடியாத ஆஃபர்
Related Stories
Recommended image1
அச்சச்சோ..! ஸ்கூட்டர் விலை அதிரடி உயர்வு.. யமஹாவின் புதிய விலைப்பட்டியல் உள்ளே
Recommended image2
Maruti Suzuki Eeco : ரூ.5.21 லட்சத்துக்கு 6 சீட்டர் கார்.. 26.78 கிமீ மைலேஜ்.. மாருதியின் புதிய அவதாரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved