MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Maruti Suzuki Eeco : ரூ.5.21 லட்சத்துக்கு 6 சீட்டர் கார்.. 26.78 கிமீ மைலேஜ்.. மாருதியின் புதிய அவதாரம்

Maruti Suzuki Eeco : ரூ.5.21 லட்சத்துக்கு 6 சீட்டர் கார்.. 26.78 கிமீ மைலேஜ்.. மாருதியின் புதிய அவதாரம்

ரூ.5.21 லட்சம் ஆரம்ப விலையில், 26.78 கிமீ வரை மைலேஜ் தரும் 6 சீட்டர் மாருதி கார் புதிய அவதாரத்தில் அறிமுகமாகியுள்ளது. குறைந்த செலவில் குடும்ப பயணத்துக்கு ஏற்றது இந்த மாடல் ஆகும்.

2 Min read
Author : Raghupati R
Published : May 09 2026, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாருதி சுசுகி ஸ்டார் எடிஷன்
Image Credit : Asianet News

மாருதி சுசுகி ஸ்டார் எடிஷன்

குறைந்த விலையில் ‘பிரீமியம்’ டச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், மாருதி சுசுகி தனது பிரபலமான மாருதி சுசுகி ஈகோ வாகனத்திற்காக புதிய ‘ஸ்டார் எடிஷன்’ அசெசரி தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.19,999 என்ற விலையில் இந்த பேக்கேஜ், வாகனத்தின் தோற்றத்தையும் உள் வசதிகளையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. முக்கியமாக, இந்த தொகுப்பு டீலர் மூலம் தனியாக பொருத்தப்படும் விருப்ப அம்சமாக வழங்கப்படுகிறது. முன்பு ரூ.37,000 ஆக இருந்த இந்த அசெசரி பேக்கேஜின் விலை, இப்போது ரூ.19,999 ஆக குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குறைந்த விலை கார்
Image Credit : Asianet News

குறைந்த விலை கார்

இந்த ‘ஸ்டார் எடிஷன்’ தொகுப்பு, 5 சீட்டர் ஏசி மற்றும் 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி மாடல்களுக்கு மட்டும் கிடைக்கிறது. வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைக்கு கூடுதலாக இந்த தொகுப்பு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தொகுப்பின் முக்கிய அம்சம், வெளியக மற்றும் உள்புற டிசைன்களில் செய்யப்படும் மேம்பாடுகளாகும். வெளியகத்தில் ரியர் ஸ்பாய்லர், ஃபாக் லேம்ப்கள், வீல் கவர், டோர் வைசர், மட் ஃபிளாப் மற்றும் குரோம் பேட்ஜிங் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், மெட்டாலிக் கிலிஸ்டனிங் கிரே மற்றும் மெட்டாலிக் ப்ரிஸ்க் ப்ளூ நிறங்களில் பாடி கலர் பம்பர் வசதியும் வழங்கப்படுகிறது.

34
ஈகோ வேனில் புதிய அம்சங்கள்
Image Credit : Asianet News

ஈகோ வேனில் புதிய அம்சங்கள்

உள்புறத்தில் ஸ்டைலிங் கிட் மற்றும் புதிய சீட் கவர்கள் இணைக்கப்பட்டுள்ளன. வசதிகளின் தரப்பில், ஈகோ ஏற்கனவே பல முக்கிய அம்சங்களுடன் வருகிறது. 6 ஏர்பேக், ஏபிஎஸ் உடன் ஈபிடி, ஈஎஸ்பி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரைம்டர், எஞ்சின் இமோபிலைசர், ஹாலஜன் ஹெட்லைட்ஸ், மேனுவல் ஏசி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ஸ்லைடிங் டோர் போன்ற அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பு மற்றும் பயண சுகாதாரத்தை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளன.

44
புதிய ஈகோ விலை
Image Credit : Asianet News

புதிய ஈகோ விலை

எஞ்சின் பகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 1.2 லிட்டர் DualJet பெட்ரோல் எஞ்சின், 80 bhp சக்தி மற்றும் 104.4 Nm டார்க் வழங்குகிறது. CNG முறைமையில் இது 71 bhp மற்றும் 95 Nm ஆக குறைகிறது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.5.18 லட்சம் முதல் ரூ.6.36 லட்சம் வரை விலை கொண்ட ஈகோ, ‘ஸ்டார் எடிஷன்’ மூலம் ரூ.5.21 லட்சம் தொடக்க விலையில் புதிய தோற்றத்துடன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சி உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி
மாருதி சுசூகி
குறைந்த விலை கார்
குடும்ப கார்கள்
வாகனம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra Sales: 31 நாட்களில் 1.31 லட்சம் வாகனங்கள் விற்பனை! ஸ்கார்பியோ, தார், XUV கார்களுக்கு மவுசு
Recommended image2
ஹோண்டா ஆக்டிவா vs டி.வி.எஸ் என்டார்க் 125: குடும்பத்திற்கு எது சிறந்தது? இளைஞர்களுக்கு எது மாஸ்?
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Related Stories
Recommended image1
ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கார்களில் மெகா சலுகை.. நம்ப முடியாத ஆஃபர்
Recommended image2
அச்சச்சோ..! ஸ்கூட்டர் விலை அதிரடி உயர்வு.. யமஹாவின் புதிய விலைப்பட்டியல் உள்ளே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved