குறைந்த செலவில் பேமிலி கார் வாங்கலாம்.. டாப் 5 பட்ஜெட் கார்கள் இவைதான்.. நோட் பண்ணுங்க
பெட்ரோல் விலை உயர்வால், குறைந்த செலவில் எஸ்யூவி அனுபவம் தரும் கார்கள் பிரபலமாகி வருகின்றன. 2025-ல் இந்திய சந்தையில் கிடைக்கும், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் சிறந்த மைலேஜ் கொண்ட டாப் 5 பட்ஜெட் எஸ்யூவி கார்களை பார்க்கலாம்.

பட்ஜெட் எஸ்யூவி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு குறைந்த செலவில் எஸ்யூவி அனுபவம் தரும் கார்கள் தான் இன்றைய தேவை. கார் வாங்கும் போது விலை மட்டும் அல்ல; மைலேஜ், பராமரிப்பு செலவு, நம்பகத்தன்மை, தினசரி பயன்பாட்டுக்கான வசதி ஆகிய அனைத்தும் முக்கியமான காரணிகளாக மாறியுள்ளன. அந்த வகையில், 2025-ல் இந்திய சந்தையில் பட்ஜெட்டுக்கு ஏற்ற, குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட டாப் 5 எஸ்யூவி (Top 5 SUV) கார்களை இங்கே பார்க்கலாம்.
நடுத்தர வர்க்க கார்கள்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நிசான் மேக்னைட் (Nissan Magnite). குறைந்த விலையில் கிடைக்கும் உண்மையான எஸ்யூவி அனுபவம் இதன் பலம். ரூ.6 லட்சம் வரம்பில் தொடங்கும் இந்த கார், 50,000 கி.மீ வரை ஓட்டினால் பராமரிப்பு செலவு சுமார் ரூ.19,500 மட்டுமே. நவீன டிசைன், நல்ல மைலேஜ் மற்றும் விசாலமான கேபின் காரணமாக, முதல் கார் வாங்குபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக உள்ளது.
குடும்ப எஸ்யூவி
ரெனால்ட் கைகர் (Renault Kiger) இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக, மோசமான சாலைகளிலும் இந்த கார் நம்பிக்கையுடன் செல்லும். ரூ.6.15 லட்சத்தில் தொடங்கும் கைகர், 50,000 கி.மீ பராமரிப்பிற்கு சுமார் ரூ.22,000 மட்டுமே செலவாகும். குறைந்த உதிரிபாக செலவு, ஸ்டைலான தோற்றமும் இதன் முக்கிய பிளஸ் ஆகும்.
பேமிலி கார்
மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) உள்ளது. நகர்ப்புற பயனர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்த கார், ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுக்காக அறியப்படுகிறது. ரூ.7.94 லட்சத்தில் தொடங்கும் வென்யூவின் 50,000 கி.மீ பராமரிப்பு செலவு ரூ.20,000 அளவிலேயே உள்ளது. ஹூண்டாயின் பரந்த சர்வீஸ் நெட்வொர்க் இதனை மேலும் ஈர்க்கும் தேர்வாக மாறுகிறது.
மலிவு விலை கார்கள்
டாடா பஞ்ச் நான்காவது இடத்தில் உள்ளது. மைக்ரோ எஸ்யூவி பிரிவில் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற கார் இது. 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், உறுதியான கட்டமைப்பு மற்றும் ரூ.23,600 மட்டுமே உள்ள பராமரிப்பு செலவு காரணமாக, பாதுகாப்பையும் பட்ஜெட்டையும் முக்கியமானது கருதுபவர்களுக்கு இது சரியான கார்.
மைலேஜ் கார்
இந்த பட்டியலை நிறைவு செய்வது மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ (S-Presso). குறைந்த பட்ஜெட்டில் எஸ்யூவி போல தோற்றம் தரும் இந்த கார், பராமரிப்பில் மிக மலிவானது. 50,000 கி.மீக்கு வெறும் ரூ.17,800 மட்டுமே செலவாகும். அதிக மைலேஜ், மாருதியின் நம்பகத்தன்மை மற்றும் பரந்த சர்வீஸ் வசதி காரணமாக, தினசரி பயணத்திற்கு இது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக உள்ளது.

