- Home
- Auto
- பெட்ரோல் பங்க் பக்கமே போக வேண்டாம்.. 28 கிமீ மைலேஜ் + 1 லட்சம் தள்ளுபடி.. Toyota Hyryder அதிரடி சலுகை!
பெட்ரோல் பங்க் பக்கமே போக வேண்டாம்.. 28 கிமீ மைலேஜ் + 1 லட்சம் தள்ளுபடி.. Toyota Hyryder அதிரடி சலுகை!
Toyota Hyryde Discounts: டொயோட்டா ஹைரைடர் காருக்கு 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா ஹைரைடர் தள்ளுபடி
இந்தியாவில் அதிக மக்கள் விரும்பி வாங்கும் கார்களில் டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder Discount) உள்ளது. செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்த கார், ஒரு லிட்டருக்கு 27.97 கி.மீ. மைலேஜ் தருகிறது. இந்த நிலையில், இந்த காருக்கு 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காருடன் 5 வருட சாலையோர உதவி (+Roadside Assistance+) நன்மையும் கிடைக்கிறது.
என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
டொயோட்டா நிறுவனம் பிப்ரவரி 16 முதல் மார்ச் 31, 2026 வரை இந்தச் சிறப்பு விற்பனை முகாமை நடத்துகிறது. ஹைரைடர் கார் விற்பனையில் 2 லட்சம் யூனிட்களைக் கடந்த சாதனையை முன்னிட்டு இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது ரொக்கத் தள்ளுபடி, பழைய கார் பரிமாற்ற போனஸ், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை இதில் அடங்கும்.
டொயோட்டா ஹைரைடர் சிறப்பம்சங்கள்
டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27.97 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இது 'செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட்' சிஸ்டத்துடன் வருகிறது. 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், THS மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மோட்கள் உள்ளன.
டொயோட்டா ஹைரைடர் விலை என்ன?
இந்த காரின் விலை ரூ.10,99,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. டாப் மாடலை வாங்க விரும்பினால், ரூ.20,19,000 (எக்ஸ்-ஷோரூம்) செலவாகும். இந்த எஸ்யூவியில் 55 கனெக்டட் அம்சங்கள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளன.

