TVS Apache RTR 160 4V: டிரைவர் சொன்னா அப்பாச்சி கேக்கும் வசதிகளுடன் அறிமுகமான அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்!
கோவாவில் நடந்த 2023 டிவிஎஸ் மோட்டோசோல் கண்காட்சியில் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TVS Apache RTR 160 4V
நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலமாக புதிய புதிய அம்சங்கள் கொண்ட பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பைக்குகளில் அப்பாச்சியும் ஒன்று. அந்த வகையில், தற்போது புதிய வரவாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி என்ற மாடல் கொண்ட பைக் அப்டேட் செய்யப்பட்டு சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TVS Apache RTR 160 4V1
கோவாவில் கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடந்த டிவிஎஸ் மோட்டோசோல் 3.0 கண்காட்சியில் இந்த புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்படி இதில் என்ன அம்சங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
TVS Apache RTR 160 4V
புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,34,990 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பைக்கின் புதிய அம்சமாக ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பைக்கை ஓட்டிச்செல்லும் பைக்கரின் குரல் மூலமாக செயல்படும் இந்த அட்வான்ஸ்டு தகவல் தொடர்பு உதவி தொழில் நுட்பத்தின் மூலமாக பயணத்தின் போது பைக்கில் வழிகாட்டியை பெற முடியும்.
Apache RTR 160
அதுமட்டுமின்றி மொபைல் போனுக்கு போனோ அல்லது மெசேஜோ எது வந்தாலும் அதனை பைக்கில் இருக்க கூடிய திரையில் பார்க்கலாம். இவ்வளவு ஏன், வண்டி விபத்திற்கு உள்ளாகினாலோ அல்லது வேகமாக ஓட்டப்பட்டாலோ அது குறித்த இண்டிமேஷன் எல்லாமே பைக்கின் ஓனர் யாரோ அவருக்கு தெரியப்படுத்திவிடும். பெட்ரோல் இருக்கா, இல்லையா என்ற குழப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் பெட்ரோல் குறைந்தாலோ இந்த தொழில் நுட்பம் உங்களுக்கு எச்சரிக்கை கொடுத்துவிடும். எடையோ 2 கிலோ குறைவு தான்.
TVS Apache RTR 160 4V
தோற்றம் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம், ஆனால், வண்டியில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கின் முன்பக்கத்தில் டிஆர் எல் உடன் எல் இ டி ஹெட்லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் பெரிய அளவில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கில் செல்லும் போது கூடுதலாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக டியூயல் சேனல் ஏபிஎஸ் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளது. மேலும், 159.7 சிசி, ஆயில் கூல்டு, 4 வால்வு என்ஜின், சிங்கிள் சிலிண்டர், ஃப்யுல் இன்ஜெக்டட் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.