MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.6 லட்சத்துக்குள் பெஸ்ட் மைக்ரோ எஸ்யூவி எது? பன்ச் vs எக்ஸ்டர் - எதை வாங்கலாம்?

ரூ.6 லட்சத்துக்குள் பெஸ்ட் மைக்ரோ எஸ்யூவி எது? பன்ச் vs எக்ஸ்டர் - எதை வாங்கலாம்?

டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய இரண்டு மைக்ரோ எஸ்யூவிகளும் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வுகளாக உள்ளன. செயல்திறன், விலை மற்றும் அம்சங்களில் எது சிறந்தது? என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Dec 22 2025, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
6 லட்சத்துக்குள் எஸ்யூவி
Image Credit : Google

6 லட்சத்துக்குள் எஸ்யூவி

ஆறு லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் ஒரு ஸ்டைலான, மைக்ரோசாஃப்ட் எஸ்யூவி வாங்க நினைப்பவர்களுக்கு டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் இரண்டு முக்கிய தேர்வுகளாக உள்ளன. நகரப் பயணம் முதல் சிறிய குடும்ப தேவைகள் வரை பூர்த்தி செய்யும் வகையில் இந்த இரண்டு மாடல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தோற்றம், அம்சங்கள், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் எது பணத்திற்கு சிறந்த மதிப்பை தருகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
டாடா பன்ச்
Image Credit : our own

டாடா பன்ச்

இன்ஜினைப் பொறுத்தவரை, டாடா பன்ச் பையூர் வேரியண்டில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது 86.5 ஹார்ஸ்பவர் மற்றும் 115 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த மாதலுக்கு, 18.82 கிமீ/லிட்டர் மைலேஜ் என நிறுவனம் தெரிவிக்கிறது. மறுபுறம், ஹூண்டாய் எக்ஸ்டர் EX வேரியண்டில் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 81.8 ஹார்ஸ்பவர் மற்றும் 113.8 Nm டார்க் வழங்குகிறது. 2025 ஏப்ரலில் இந்த வேரியண்டிலும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

Related Articles

Related image1
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300-க்கு செம வரவேற்பு… குறைந்த விலையில் ஹை-டெக் அட்வென்ச்சர் பைக்
Related image2
20 மாதங்களில் 2 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர்.. இந்திய சாலைகளில் வலம் வருது.. எது தெரியுமா?
34
ஹூண்டாய் எக்ஸ்டர்
Image Credit : our own

ஹூண்டாய் எக்ஸ்டர்

விலை விவரங்களைப் பார்க்கும்போது, ​​டாடா பன்ச் அடிப்படை வேரியண்ட் ரூ.5.49 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. மிட் வேரியண்ட்கள் ரூ.6.5 முதல் ரூ.8 லட்சம் வரை செல்கின்றன. டாப் வேரியண்ட் ரூ.10.5 லட்சம் வரை விலை பெறுகிறது. சிஎன்ஜி மற்றும் ஏஎம்டி வேரியண்ட்களும் போட்டி விலையில் கிடைக்கின்றன. ஹூண்டாய் எக்ஸ்டர் அடிப்படை வேரியண்ட் ரூ.5.48 லட்சத்திலிருந்து ஆரம்பமாகி, டாப் வேரியண்ட் ரூ.10.75 லட்சம் வரை செல்கிறது. மிட் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்கள் பன்சை விட சற்று உயர்ந்த விலையில் உள்ளன.

44
டாடா பன்ச் vs ஹூண்டாய் எக்ஸ்டர்
Image Credit : Google

டாடா பன்ச் vs ஹூண்டாய் எக்ஸ்டர்

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில், டாடா பன்ச் ப்யூர் வேரியண்டில் ரியர் பார்க்கிங் சென்சார், சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோக்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற நடைமுறை அம்சங்கள் உள்ளன. 2021-ல் குலோபல் என்சிஏபி-யில் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்றது இதன் பெரிய பலம். ஹூண்டாய் எக்ஸ்டர் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 6 ஏர்பேக்குகள், ஈபிஎஸ், ஐபிடி உள்ளிட்ட 26 பாதுகாப்பு அம்சங்களை தரமாக வழங்குகிறது. பாதுகாப்பில் பன்ச் முன்னிலை வகிக்கிறது, அம்சங்களில் எக்ஸ்டர் கவனம் பெறுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாடா கார்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர்
வாகனம்
SUV (விளையாட்டு பயன்பாட்டு வாகனம்)
குடும்ப கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVS Jupiter 125: அசத்தலான ரெண்டு புது கலர்ல வந்துருச்சு! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
Recommended image2
Budget CNG Cars: குறைந்த பட்ஜெட், சூப்பர் மைலேஜ்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை CNG கார்கள்
Recommended image3
500 கிமீ ரேஞ்ச்..! மிரட்டும் New-Gen VinFast VF8 EV.. கலக்கப்போகும் அல்ட்ரா ஸ்மார்ட் SUV..!
Related Stories
Recommended image1
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300-க்கு செம வரவேற்பு… குறைந்த விலையில் ஹை-டெக் அட்வென்ச்சர் பைக்
Recommended image2
20 மாதங்களில் 2 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர்.. இந்திய சாலைகளில் வலம் வருது.. எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved