மாதம் ரூ.10,000 மட்டும் கட்டினால் போதும்.. டாடா நெக்சான் காரை வீட்டுக்கு கொண்டு வரலாம்
இந்தியாவின் பிரபலமான காம்பாக்ட் SUV-யான டாடா நெக்சான், அதன் பாதுகாப்பு, பிரீமியம் அம்சங்கள் உடன் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது. இந்தகாரை நீங்கள் மாதம் சுமார் ரூ.10,000 இஎம்ஐ செலுத்தி எளிதாக வாங்க முடியும்.

டாடா நெக்சான் இஎம்ஐ
டாடா நெக்சான் தற்போது இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காம்பாக்ட் SUVகளில் ஒன்றாக உள்ளது. இதன் பரந்த உள்ளமைப்பு, சுகமான சீட் கம்ஃபர்ட், அசத்தலான வடிவமைப்பு என்பவை பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. மேல் மாடல்களில் பனோராமிக் சன்ரூஃப், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் போன்ற பிரீமியம் அம்சங்கள் கிடைக்கின்றன. பாதுகாப்பு தரத்தில் BNCAP 5-ஸ்டார் ரேட்டிங்கும் கிடைத்துள்ளது.
டாடா நெக்சான்
இந்திய கார்துறையில் டாடா மோட்டார்ஸ் தற்போது வேகமாக உயர்ந்து, மருதி சுசுகிக்கு அடுத்த நிலையில் உள்ளது. நவம்பர் 2025ல் ஹூண்டாய் மற்றும் மஹிந்திராவை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் முக்கிய பங்கை வகிப்பது நெக்சான் மாடலே. பேட்ரோல், டீசல், CNG, மின்சார (EV) என பல்வேறு பவர் டிரெயின்களில் இது கிடைக்கிறது. நெக்சானை வாங்க விரும்புவோருக்கு வெறும் மாதம் ரூ.10,000 இஎம்ஐல் வீட்டிற்கு கொண்டு செல்ல வசதி உள்ளது.
நெக்சான் விலை
டாடா நெக்சான் பேஸ் மாடலின் ஆன்-ரோடு விலை சுமார் ரூ.9 லட்சத்திலிருந்து, டாப் மாடல் ரூ.16 லட்சம் வரை செல்கிறது. பேஸ் மாடலை வாங்கினால் இஎம்ஐ குறைவாக இருக்கும். உதாரணமாக ரூ.3 லட்சம் டவுன் பேமெண்ட் கொடுத்து, ரூ.6 லட்சம் கடனை 10% வட்டி விகிதத்தில் 7 ஆண்டுகளுக்கு எடுத்தால் மாத தவணை சுமார் ரூ.10,000 ஆகும்.
நெக்சான் அம்சங்கள்
நெக்சானின் முக்கிய அம்சங்களில் வசதியான சஸ்பென்ஷன், நெடுஞ்சாலை வேகத்திலும் உறுதியான ஸ்டேபிலிட்டி, ஆறு ஏர்பேக்குகள், உயர்தர பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை அடங்கும். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி என மூன்று எஞ்சின்களும் சிறந்த கட்டுமானத்தை வழங்குகின்றன. இதனால் நீண்ட பயணங்களிலும் நெக்சான் நல்ல அனுபவத்தை தருகிறது.
நெக்சான் பேஸ் மாடல்
பேஸ் மாடலான Smart Plus இல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 118 bhp சக்தி வழங்குகிறது. அதன் ARAI மைலேஜ் சுமார் 17.44 kmpl. இதில் LED ஹெட்லாம்புகள், ஆறு ஏர்பேக்குகள், ESP, மேனுவல் கியர்பாக்ஸ் போன்ற முக்கிய அம்சங்கள் தரப்பட்டுள்ளன. விலைப்பரிமாணத்தில் பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் முன்னிலைப்படுத்திய நல்ல தேர்வாக இது திகழ்கிறது.

