TATA: டாடா கார்கள் வாங்க சூப்பர் சான்ஸ்; ரூ.1 லட்சம் விலை குறைப்பு; 'மெகா' தள்ளுபடி!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க இப்போது சூப்பர் சான்ஸ் கிடைத்துள்ளது. டாடாவின் முன்னணி கார்களுக்கு அதிரடியாக விலை குறைப்பு செய்யப்படுள்ளது.

TATA: டாடா கார்கள் வாங்க சூப்பர் சான்ஸ்; ரூ.1 லட்சம் விலை குறைப்பு; 'மெகா' தள்ளுபடி!
இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. டாடா மோட்டார்ஸ் கார்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ளதால் விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகிறது. டாடா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பிரபலமான கார்களுக்கு அதிரடி தள்ளுபடியை வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதமும் டாடாவின் பல்வேறு மாடல் கார்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
டாடா கார்களுக்கு தள்ளுபடி
அதாவது டாடாவின் டியாகோவில் தொடங்கி அனைத்து பெட்ரோல் / சிஎன்ஜி வகை கார்களுக்கும் ரூ.75,000 வரை தள்ளுபடி அறிவிக்கபட்டுள்ளது. ரூ.5.99 லட்சத்தில் இருந்து தொடங்கும் டிகோர் பெட்ரோல் / சிஎன்ஜி வகைகள் மொத்தம் ரூ.45,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் நுகர்வோர் தள்ளுபடி ரூ.30,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.15,000 ஆகும்.
டாடா ஆல்ட்ரோஸ் பெட்ரோல் / சிஎன்ஜி மற்றும் டீசல் வகை மாடல்களுக்கு மொத்தம் ரூ.65,000 தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. இதில் ரூ.50,000 நுகர்வோர் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆகும். அதிகப்பட்சமாக ஆல்ட்ரோஸ் பெட்ரோல் ரேசர் மாடலுக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதில் நுகர்வோர் தள்ளுபடி ரூ.85,000மும், எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.15,000மும் ஆகும்.
விலை ரொம்ப கம்மி.. பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடனே வாங்குங்க!
டாடா கார்களுக்கு விலை குறைப்பு
டாடா நெக்ஸான் பெட்ரோல் / சிஎன்ஜி மற்றும் டீசல் வகை கார்களுக்கு ரூ.45,000 தள்ளுபடி சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ரூ.35,000 நுகர்வோர் தள்ளுபடியும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அடங்கும். நடுத்தர அளவிலான எஸ்யூவி மாடல்களான டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.50,000 நுகர்வோர் தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆகும்.
டாடா பன்ச்
MY25 மாடல்கள் MY25 மாடல்களுக்கான தள்ளுபடி சலுகைகள் ஒப்பீட்டளவில் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை குறைவாக உள்ளன. டியாகோவின் அனைத்து வகைகளுக்கும் ரூ.25,000 தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. அதே வேளையில் டியாகோவின் அடிப்படை XE மாடலுக்கு எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. Altroz பெட்ரோல் / CNG மற்றும் டீசல் வகைகள் ரூ.35,000 தள்ளுபடி சலுகையுடன் கிடைக்கின்றன. குறைந்தபட்சமாக டாடா பன்ச் கார்களுக்கு ரூ.25,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த மாடலுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை இல்லை.
Kia Syros: நடுத்தர மக்கள் வாங்கும் விலை; வாரி வழங்கும் மைலேஜ்; கியாவின் சூப்பர் கார்!