MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Kia Syros: நடுத்தர மக்கள் வாங்கும் விலை; வாரி வழங்கும் மைலேஜ்; கியாவின் சூப்பர் கார்!

Kia Syros: நடுத்தர மக்கள் வாங்கும் விலை; வாரி வழங்கும் மைலேஜ்; கியாவின் சூப்பர் கார்!

கியா நிறுவனம் கியா சிரோஸ் எஸ்யூவி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை என்ன? என்னென்ன சிறப்பம்சங்கள்? உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
| Updated : Feb 04 2025, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kia Syros: நடுத்தர மக்கள் வாங்கும் விலை; வாரி வழங்கும் மைலேஜ்; கியாவின் சூப்பர் கார்!

Kia Syros: நடுத்தர மக்கள் வாங்கும் விலை; வாரி வழங்கும் மைலேஜ்; கியாவின் சூப்பர் கார்!

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கு ஏற்ப வாகன பெருக்கமும் அதிகமாகி விட்டது. நாட்டில் கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு புதிய ரக கார்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கியா நிறுவனம் கியா சிரோஸ் (kia syros) எஸ்யூவி மாடல் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த மாடலின் இன்ஜினை பொறுத்தவரை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிரோஸ் எஸ்யூவி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் சுமார் 18.1 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கியா சிரோஸ் எஸ்யூவி

கியா சிரோஸ் எஸ்யூவி

சிரோஸ் எஸ்யூவி 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மாடலிலும் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் உள்ளன. ஒரு லிட்டர் டீசல் போட்டால் சுமார் 20.75 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. கியா சிரோஸ் எஸ்யூவி மாடல் காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்தவித குறையும் இல்லை. இந்த மாடலின் அனைத்து வேரியண்ட்டிலும் 6 ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மிக முக்கியமாக இந்த மாடலில் அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள LEVEL-2 ADAS பாதுகாப்பு அம்சம் பிளைன்ட் வியூ மானிட்டர், லேன் கிப் அசிஸ்ட், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தால் கார் தானாக நிற்கும் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை கொடுக்கிறது.

விலை ரொம்ப கம்மி.. பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடனே வாங்குங்க!
 

34
கியா சிரோஸ் விலை

கியா சிரோஸ் விலை

இது மட்டுமின்றி வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு போனை கனெக்ட் செய்யும் ஹர்மன் கார்டன் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டிரினிட்டி பனோரமிக் டிஸ்ப்ளே பேனல், 5 இன்ச் கிளைமேட் கன்ட்ரோல், இரட்டை-பேன் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய சிறப்பம்சங்களையும் வழங்குகிறது. HTK, HTK+ உள்பட பல்வேறு வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. கிளேசியர் ஒயிட் பேர்ல், ஸ்பார்க்லிங் சில்வர், பியூட்டர் ஆலிவ், இன்டென்ஸ் ரெட், ஃப்ரோஸ்ட் ப்ளூ, அரோரா பிளாக் பேர்ல், இம்பீரியல் ப்ளூ மற்றும் கிராவிட்டி கிரே ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 

44
கியா சிரோஸ் சிறப்பம்சங்கள்

கியா சிரோஸ் சிறப்பம்சங்கள்

கியா சிரோஸ் காரின் விலையை பொறுத்தவரை இந்த மாடலின்  HTK MT என்ற ஆரம்பட்ட வேரியண்ட் ரூ.8,99,900 என நடுத்தர மக்களும் வாங்கும் வகையில் உள்ளது. இந்த மாடலின் HTX+ என்ற டாப் வேரியண்ட் விலை ரூ.16.99 லட்சம் ஆகும். நடுத்தர விலையில் அனைத்து அம்சங்களுடன் கூடிய ஒரு காரை தேடுபவர்களுக்கு கியா சிரோஸ் பொருத்தமான தேர்வாக இருக்கும்.

மாருதி சுசுகி இ-விட்டாரா முன்பதிவு தொடங்கியது.. டோக்கன் தொகை எவ்வளவு?

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கியா சிரோஸ்
இந்தியா
SUV (விளையாட்டு பயன்பாட்டு வாகனம்)
குறைந்த விலை கார்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா.. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Recommended image2
Tata Nexon Offer: ரூ.75,000 வரை ஆஃபர்.. டாடா நெக்ஸான் எஸ்யூவி வாங்க சூப்பர் சான்ஸ்!
Recommended image3
TVS Price Hike: டிவிஎஸ் ஸ்கூட்டர் விலை திடீர் உயர்வு! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved