MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • கார்களுக்கு ஆஃபர்களை அள்ளிவீசிய டாடா... ஏப்ரல் மாதத்தில் இத்தனை சலுகைகளா?

கார்களுக்கு ஆஃபர்களை அள்ளிவீசிய டாடா... ஏப்ரல் மாதத்தில் இத்தனை சலுகைகளா?

புதிய டாடா கார் வாங்க திட்டமா? ஏப்ரல் 2026-ல் நெக்ஸான், ஹாரியர், சஃபாரி மாடல்களுக்கு ruu.50,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. முழு விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 16 2026, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tata Cars Offer April 2026
Image Credit : Google

Tata Cars Offer April 2026

புதுசா கார் வாங்க பிளான் இருக்கா? அப்போ இதுதான் உங்களுக்கு சரியான நேரம். நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், தனது கார்களுக்கு தற்போது அசத்தலான தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகிறது. 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நெக்ஸான், டியாகோ ஹேட்ச்பேக், ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி போன்ற மாடல்களுக்கு நீங்கள் எளிதாக தள்ளுபடிகளைப் பெறலாம். எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

24
டாடா நெக்ஸான், டியாகோ கார்களுக்கான தள்ளுபடிகள்
Image Credit : social media

டாடா நெக்ஸான், டியாகோ கார்களுக்கான தள்ளுபடிகள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது குறிப்பிட்ட 2026 மாடல் கார்களுக்கு கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் என இரண்டு சலுகைகளையும் வழங்குகிறது. டாடா நெக்ஸான் எஸ்யூவி-யின் குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு மொத்தம் ரூ.25,000 வரை சலுகை கிடைக்கிறது. இதில் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும். அதேபோல, டாடா டியாகோ ஹேட்ச்பேக் காருக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி உள்ளது. இதில் ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும். ஆனால், இந்த ஆஃபர் அடிப்படை XE வேரியன்ட்டுக்கு பொருந்தாது. டாடா கர்வ் எஸ்யூவி மாடலுக்கு மொத்தம் ரூ.50,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.30,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும்.

Related Articles

Related image1
Tata Intra EV: டாடா-வின் புதிய எலக்ட்ரிக் பிக்கப்! சிங்கிள் சார்ஜில் 211 கி.மீ. ரேஞ்ச்!
Related image2
குறைந்த விலை டாடா கார் 6 ஏர்பேக் உடன் வரப்போகுது.. இந்தியாவின் கேம் சேஞ்சர் கார்
34
டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் சலுகை
Image Credit : Google

டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் சலுகை

பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் டாடா அல்ட்ராஸ் ஒரு பிரபலமான கார். 2026 ஏப்ரல் மாதம் வரை, இந்த காருக்கு வாடிக்கையாளர்களுக்கு ரூ.30,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.15,000 நேரடி தள்ளுபடி மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும். இந்தியாவில் அல்ட்ராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.6.30 லட்சத்தில் இருந்து ரூ.10.51 லட்சம் வரை உள்ளது. இது ஹூண்டாய் i20, மாருதி சுஸுகி பலேனோ போன்ற கார்களுக்கு நேரடி போட்டியாக விளங்குகிறது.

44
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரிக்கு போனஸ்
Image Credit : tata motors

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரிக்கு போனஸ்

நீங்கள் ஒரு பெரிய எஸ்யூவி வாங்க விரும்பினால், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்களுக்கு ரூ.35,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும். மேலும், இந்த மாதம் சில மாடல்களுக்கு எந்த தள்ளுபடியும் இல்லை. புதிய டாடா சியரா மற்றும் பிரபலமான பஞ்ச் எஸ்யூவி ஆகியவை இதில் அடங்கும்.

குறிப்பு : இங்கே கொடுக்கப்பட்டுள்ள தள்ளுபடி விவரங்கள், பல்வேறு தளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் மாநிலம், நகரம், டீலர்ஷிப், ஸ்டாக், காரின் நிறம் மற்றும் வேரியன்ட்டைப் பொறுத்து மாறலாம். அதாவது, உங்கள் ஊரில் உள்ள டீலர்ஷிப்பில் இந்த தள்ளுபடி அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அதனால், கார் வாங்குவதற்கு முன்பு, உங்கள் அருகில் உள்ள டாடா டீலரை நேரில் அணுகி சரியான தள்ளுபடி மற்றும் மற்ற விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாடா கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fortuner Rivals: ஃபார்ச்சூனர் ஆட்டத்துக்கு முடிவு கட்ட வரும் 2 புதிய SUV-கள்!
Recommended image2
ரஜினி முதல் விஜய் வரை.. 2026-ல் நம்ம ஊரு ஸ்டார்களின் டாப் 5 'காஸ்ட்லி' கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!
Recommended image3
Electric Bike Conversion: உங்க பழைய பெட்ரோல் பைக்கை எலக்ட்ரிக் பைக்கா மாத்தலாம்! செலவும் ரொம்ப கம்மி
Related Stories
Recommended image1
Tata Intra EV: டாடா-வின் புதிய எலக்ட்ரிக் பிக்கப்! சிங்கிள் சார்ஜில் 211 கி.மீ. ரேஞ்ச்!
Recommended image2
குறைந்த விலை டாடா கார் 6 ஏர்பேக் உடன் வரப்போகுது.. இந்தியாவின் கேம் சேஞ்சர் கார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved