குறைந்த விலை டாடா கார் 6 ஏர்பேக் உடன் வரப்போகுது.. இந்தியாவின் கேம் சேஞ்சர் கார்
2026 டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் சாலை சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. புதிய டிசைன், 360 டிகிரி கேமரா போன்ற கூடுதல் அம்சங்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் இந்த மாடல் 2026-ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலை டாடா கார்
இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் ஹாட்ச்பேக் கார்களில் ஒன்றாக உள்ள டாடா டியாகோ, தற்போது புதிய அவதாரத்தில் வரத் தயாராகிறது. 2026 டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் சாலை சோதனைகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிய டிசைன், கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் இந்த மாடல் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதி அல்லது இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய லுக்கில் டாடா டியாகோ
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாட்ச்பேக் பிரிவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அப்டேட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அப்டேட் செய்யப்பட்ட டியாகோ மாடலுக்குப் பிறகு, இது மூன்றாவது ஃபேஸ்லிஃப்ட் ஆகும். இதன் மூலம் சந்தையில் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்த டாடா முயற்சி செய்கிறது.
டியாகோ ஃபேஸ்லிஃப்ட் டெஸ்டிங்
சோதனைக்காக ஓட்டப்பட்ட காரின் புகைப்படங்கள் முழுவதும் கவர் செய்யப்பட்டிருந்தாலும், பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும் தெரிகிறது. முன்புறத்தில் புதிய ஹெட்லைட்கள், எல்இடி இன்டிகேட்டர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பம்பர், கிரில் போன்றவை இடம்பெற வாய்ப்பு உள்ளது. இதனால் கார் மேலும் நவீன தோற்றத்தை பெறும் என கூறப்படுகிறது.
டாடா டியாகோ புதிய வெர்ஷன்
பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இருக்காது எனினும், புதிய அலாய் வீல்கள் சேர்க்கப்படலாம். பின்னால் புதிய LED டெய்ல் லைட்கள் மற்றும் சிறிய டிசைன் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. உள் அமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட், ரியர் ஈசி வென்ட்ஸ் போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம். மேலும், பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் மேம்பட்ட சவுண்ட் சிஸ்டமும் கிடைக்கலாம்.
6 ஏர்பேக்களுடன் வரும் டியாகோ
பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக், ESC, TPMS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் பகுதியில் பெரிய மாற்றங்கள் இல்லை; தற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG விருப்பம் தொடரும். மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் வசதிகளும் இருக்கும். அறிமுகத்திற்குப் பிறகு மாருதி சுசூகி ஸ்விப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் போன்ற கார்களுடன் இது போட்டியிடுகிறது.

