MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன டாப் 6 கார்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

இந்தியாவில் அட்டர் பிளாப் ஆன டாப் 6 கார்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

இந்தியர்கள் கார்களை போட்டிபோட்டு வாங்கி வருவதால், ஏராளமான புதுப்புது மாடல் கார்கள் அறிமுகமான வண்ணம் உள்ளன. அதில் அட்டர் பிளாப் ஆன 6 கார்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 21 2026, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Top 6 Flopped Cars in India
Image Credit : instagram

Top 6 Flopped Cars in India

இந்தியாவில் கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கார் நிறுவனங்களும் போட்டி போட்டு புதுப் புது மாடல் கார்களை களமிறக்கி வருகின்றன. அதில் மக்களிடையே நன்மதிப்பை பெறும் கார்கள் ஏராளமானது இருந்தாலும், சில கார் மாடல்கள் படுதோல்வியை சந்தித்து மார்க்கெட்டில் ஃபெயிலியர் மாடல் என பெயர் எடுத்தும் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் பிளாப் ஆன 6 கார்களை பற்றி இங்கே காணலாம்.

27
மஹிந்திரா நுவா ஸ்போர்ட் (Mahindra NuvoSport)
Image Credit : instagram

மஹிந்திரா நுவா ஸ்போர்ட் (Mahindra NuvoSport)

மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்திய 7 சீட்டர் கார் இது. இதில் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொடுக்கப்பட்டு இருந்தது. 1000 bhp ஹார்ஸ் பவர், 250 NM டார்க் உடன் அதிதிறன் கொண்ட வண்டியாக இது அறிமுகமானாலும், இந்த கார் மக்களை கவரத் தவறியதற்கான முக்கிய காரணம் அதன் டிசைன் தான். அதனால் இந்த கார் பிளாப் ஆனது.

Related Articles

Related image1
ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?
Related image2
மாருதி ஆல்டோ விலையில் 7 சீட்டர் கார்..! மிரள விடும் Nissan Graviteன் அம்சங்கள்..
37
டாடா போல்ட் (Tata Bolt)
Image Credit : instagram

டாடா போல்ட் (Tata Bolt)

டாடா நிறுவனம் என்றாலே தரமான கார்களை தயாரிக்கும் என்கிற நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்த டாடா போல்ட் கார் தான் இந்த பிளாப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த கார் 1.2 லிட்டர் இஞ்ஜின் உடன் பெட்ரோல் மற்றும் டீசலிலும் வந்தது. கிட்டத்தட்ட 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரக்கூடிய இந்த கார் பிளாப் ஆனதற்கு முக்கிய காரணம், இந்த கார் T போர்டில் அதிகளவில் ஓடியதால், இதை ஓன் போர்டில் வாங்க நிறைய பேர் யோசித்தார்கள். அதனால் பிளாப் ஆனது.

47
மிட்சுபிசி சீடியா (mitsubishi cedia)
Image Credit : instagram

மிட்சுபிசி சீடியா (mitsubishi cedia)

மிட்சுபிசி நிறுவனம் 2 லிட்டர் இஞ்ஜின் உடன் அறிமுகப்படுத்திய கார் தான் சீடியா. இதில் 114 bhp ஹார்ஸ் பவர் மற்றும் 175 NM டார்க்கும் கொடுத்திருந்தார்கள். இந்த கார் பிளாப் ஆனதற்கு அந்த சமயத்தில் அவர்களின் போட்டியாக வந்த ஹோண்டா சிட்டி கார் தான். அதன் சேல்சுக்கு இந்த கார் ஈடுகொடுக்கவில்லை.

57
ஃபியட் அர்பன் கிராஸ் (Fiat Urban Cross)
Image Credit : instagram

ஃபியட் அர்பன் கிராஸ் (Fiat Urban Cross)

1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலுமே அறிமுகமான இந்த கார், 140 bhp ஹார்ஸ் பவர், 210 NM டார்க் உடன் வந்தது. இது ஒரு தரமான வண்டியாக இருந்தபோதிலும், சர்வீஸ் நெட்வொர்க் சரியில்லாத காரணத்தால் இந்த கார் பிளாப் ஆனது.

67
டேட்சன் கோ ப்ளஸ் (Datsun Go+)
Image Credit : instagram

டேட்சன் கோ ப்ளஸ் (Datsun Go+)

இது ஒரு 7 சீட்டர் கார், இதில் 1.2 லிட்டர் இஞ்ஜின் கொடுத்திருந்தார்கள். இந்த கார் பிளாப் ஆனதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், டேட்சன் கோ என்கிற 5 சீட்டர் கார் ஒன்றை அதற்கு முன்னர் லாஞ்ச் செய்திருந்தார்கள். அதில் செவன் சீட்டர் கொண்டு வருகிறேன் என முடிவெடுத்து அதில் எக்ஸ்ட்ரா பிட்டிங் ஒட்ட வைத்தது போல் ஒரு காரை கொண்டு வந்தார்கள். டிசைன் சரியில்லாததால் இந்த கார் பிளாப் ஆனது.

77
ரெனால்ட் கேப்சர் (Renault Captur)
Image Credit : instagram

ரெனால்ட் கேப்சர் (Renault Captur)

நல்ல டிசைன் மற்றும் எக்கச்சக்க வசதிகளுடன் கொண்டுவரப்பட்ட கார் தான் இந்த ரெனால்ட் கேப்சர். இதன் தோல்விக்கு முக்கிய காரணம் இதன் விலை தான். அதிக வசதிகளுடன் இருந்ததால் அதிக ரேட்டுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் மார்க்கெட்டில் இதற்கு மவுசு இல்லாமல் போனது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார் செய்தி
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கொட்டி கிடக்கும் நவீன அம்சங்கள்.! மாருதி சுசுகி இ-விட்டாராவின் முழு விலை பட்டியல்!
Recommended image2
குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 சூப்பரான ஆட்டோமேட்டிக் கார்கள்.!
Recommended image3
6 ஏர்பேக் முதல் சன்ரூப் வரை.. இந்த 3 மாடல்கள் மிஸ்ஸாகக்கூடாது!
Related Stories
Recommended image1
ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?
Recommended image2
மாருதி ஆல்டோ விலையில் 7 சீட்டர் கார்..! மிரள விடும் Nissan Graviteன் அம்சங்கள்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved