MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Small EV With Long Range: காரா இது... கரண்ட் பாக்ஸா? 310 கி.மீ. ரேஞ்சுடன் களமிறங்கிய குட்டி EV..

Small EV With Long Range: காரா இது... கரண்ட் பாக்ஸா? 310 கி.மீ. ரேஞ்சுடன் களமிறங்கிய குட்டி EV..

Suzuki e-Sky EV: சிறிய அளவு... ஆனால் அம்சங்களில் செம மாஸ்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கி.மீ. வரை செல்லும் திறனுடன், காரிலிருந்தே மின்சாரம் எடுக்க உதவும் V2L வசதியுடன் சுஸுகியின் புதிய e-Sky EV ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது.

3 Min read
Author : Asianet News
Published : Aug 31 2026, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிறிய ரக EV கார்..
Image Credit : Asianet News

சிறிய ரக EV கார்..

மின்சார கார் சந்தையில் சுஸுகி நிறுவனம் தனது புதிய குட்டி எலெக்ட்ரிக் காரான e-Skyயை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கி.மீ. வரை செல்லும் திறன், V2L வசதி உள்ளிட்ட பல நவீன அம்சங்களுடன் இந்த சிறிய கார் கவனம் ஈர்த்துள்ளது.

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸுகி, மின்சார வாகனப் பிரிவில் தனது அடுத்த முக்கிய நகர்வை மேற்கொண்டுள்ளது. முன்னதாக Vision e-Sky என்ற கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், தற்போது உற்பத்திக்கு தயாராகும் நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகர சாலைகளுக்கு ஏற்ற குட்டி கார்!

e-Sky பார்ப்பதற்கு சிறிய காராக இருந்தாலும், நகர்ப்புற பயன்பாட்டை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் நீளம் 3,395 மி.மீ., அகலம் 1,475 மி.மீ. மற்றும் உயரம் 1,625 மி.மீ. ஆகும். இதன் எடை சுமார் 1,030 கிலோ. 2,460 மி.மீ. வீல்பேஸ் மற்றும் 4.4 மீட்டர் திருப்ப ஆரம் கொண்டிருப்பதால், நெரிசலான நகரச் சாலைகளிலும் குறுகிய இடங்களிலும் காரை எளிதாக இயக்க முடியும்.

அதாவது, பெரிய கார்களுக்கு இடமில்லாத சிறிய பார்க்கிங் இடங்களிலும் இந்த குட்டி EV எளிதாக பொருந்தும் என்பதே இதன் முக்கிய பலம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கெய் காரை நினைவூட்டும் வடிவமைப்பு
Image Credit : Asianet News

கெய் காரை நினைவூட்டும் வடிவமைப்பு

e-Sky-யின் வடிவமைப்பு ஜப்பானில் பிரபலமான ‘Kei Car’ மாடல்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

உயரமான பாடி, நீண்ட வீல்பேஸ், சதுர வடிவ ஹெட்லேம்ப்கள், ‘C’ வடிவ LED விளக்குகள், கருப்பு நிற கான்ட்ராஸ்ட் கூரை, சதுர வீல் ஆர்ச்கள் மற்றும் செங்குத்தான டெயில் லேம்ப்கள் ஆகியவை காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.

சிறிய வெளிப்புற அளவுக்குள் அதிக கேபின் இடத்தை வழங்கும் வகையிலும் இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கி.மீ.!

e-Sky-யின் மிகப்பெரிய ஹைலைட் அதன் 310 கி.மீ. வரை செல்லும் பயண வரம்பு தான்.

முன்னதாக வெளியிடப்பட்ட Vision e-Sky கான்செப்ட் மாடலில் 270 கி.மீ. ரேஞ்ச் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாடலில் 310 கி.மீ. வரை ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தினசரி அலுவலகப் பயணம், நகருக்குள் சுற்றுப்பயணம் மற்றும் வழக்கமான குடும்பப் பயன்பாடுகளுக்கு சார்ஜ் பற்றிய கவலை குறைய வாய்ப்புள்ளது.

எனினும், பேட்டரி திறன், மோட்டார் சக்தி மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும் சுஸுகி இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.

34
காரிலிருந்தே கரண்ட் எடுக்கலாம்!
Image Credit : Asianet News

காரிலிருந்தே கரண்ட் எடுக்கலாம்!

e-Sky-யில் இடம்பெற்றுள்ள மற்றொரு சுவாரசியமான வசதி V2L (Vehicle-to-Load).

எளிமையாக சொன்னால், காரின் பேட்டரியில் சேமிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை வெளிப்புற சாதனங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உதாரணமாக, கேம்பிங் செல்லும்போது லேப்டாப், சிறிய மின் சாதனங்கள் உள்ளிட்டவற்றை இயக்க இந்த வசதி உதவும்.

மின்சாரம் இல்லாத நேரங்களில் அவசர தேவைக்காக தற்காலிக மின்சார ஆதாரமாகவும் காரின் பேட்டரியை பயன்படுத்த முடியும்.

குட்டி காருக்குள் பெரிய டெக்னாலஜி!

சிறிய அளவு கொண்ட கார் என்பதால் தொழில்நுட்ப வசதிகளில் சுஸுகி எந்த சமரசமும் செய்யவில்லை.

e-Sky-யில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கனெக்டட் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கனெக்டட் நேவிகேஷன் வசதி, காரில் மீதமுள்ள பேட்டரி சார்ஜ் மற்றும் போக்குவரத்து நிலவரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பயண வழிகளை பரிந்துரைக்க உதவும்.

44
எப்போது விற்பனைக்கு வரும்?
Image Credit : Asianet News

எப்போது விற்பனைக்கு வரும்?

சுஸுகி e-Sky, 2026-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் ஜப்பானின் ஷிஜுவோகா மாகாணத்தில் உள்ள சுஸுகி ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவுக்கு வருமா?

இதுதான் இந்திய வாடிக்கையாளர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.

தற்போதைய நிலையில், e-Sky காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து சுஸுகி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த கார் ஜப்பானின் ‘Kei Car’ விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், ஜப்பானில் விற்பனை செய்யப்படும் அதே வடிவத்தில் இந்தியாவுக்கு வரும் என்று உறுதியாக கூற முடியாது.

ஆனால், சிறிய அளவு, 310 கி.மீ. வரை ரேஞ்ச், V2L வசதி மற்றும் நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவை இந்திய சந்தையிலும் கவனம் ஈர்க்கக்கூடிய அம்சங்களாக உள்ளன.

எனவே, சுஸுகி எதிர்காலத்தில் இந்தியாவுக்காக இதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சிறிய எலெக்ட்ரிக் காரை உருவாக்குமா? என்பதுதான் தற்போது ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாக உள்ளது.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
ஆட்டோ செய்திகள்
ஆட்டோ
உயர் ரக மின்சார கார்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
லைட் வெயிட், 125சிசி இன்ஜின்: ரூ.90,000-க்குள் கிடைக்கும் 5 கெத்தான லோ-சீட் ஸ்கூட்டர்கள்!
Recommended image2
90's விண்டேஜ் தோற்றம், நவீன டெக்னாலஜி: ரூ.1.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 மாஸ் ரெட்ரோ பைக்குகள்!
Recommended image3
ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்: சிட்டி டிரைவிங்கிற்கு எது பெஸ்ட்?
Related Stories
Recommended image1
EV Car: வெறும் 10 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்..! 1100 கி.மீ. போகும் புதிய எலக்ட்ரிக் கார்!
Recommended image2
EV Car: மின்சார கார் வாங்கப்போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved