MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 1,160 சிசி எஞ்சின், 158 எச்பி பவர், ரேடார் பாதுகாப்பு: இந்தியாவில் களமிறங்கும் 2027 டிரையம்ப் டைகர் 1200 பைக்!

1,160 சிசி எஞ்சின், 158 எச்பி பவர், ரேடார் பாதுகாப்பு: இந்தியாவில் களமிறங்கும் 2027 டிரையம்ப் டைகர் 1200 பைக்!

158 எச்பி பவர், ரேடார் வசதி மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் சீட் உடன் புதிய டிரையம்ப் டைகர் 1200 பைக்! இந்தியாவில் எப்போது அறிமுகம்? பைக்கின் எஞ்சின் பவர், சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை நிலவரம் என்ன?

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 28 2026, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியாவில் களமிறங்கும் 2027 டிரையம்ப் டைகர் 1200 பைக்!
Image Credit : 2027 Triumph

இந்தியாவில் களமிறங்கும் 2027 டிரையம்ப் டைகர் 1200 பைக்!

சர்வதேச பிரீமியம் அட்வென்ச்சர் டூரர் பைக் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் நோக்கில், பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் (Triumph), 2027-ம் ஆண்டுக்கான தனது புதிய 'டைகர் 1200' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் பவர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் ரேடார் அடிப்படையிலான நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுடன் தயாராகியுள்ள இந்த பைக், வரும் மார்ச் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது.

நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்கள் மற்றும் கடினமான சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் ரைடர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல், சக்திவாய்ந்த எஞ்சினுடன் சிறந்த ஓட்டுநர் வசதியையும், உயர் மட்ட பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அதிகரித்த எஞ்சின் செயல்திறன்
Image Credit : 2027 Triumph

அதிகரித்த எஞ்சின் செயல்திறன்

புதிய 2027 டிரையம்ப் டைகர் 1200 பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1,160 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 158 எச்பி (hp) பவரையும், 130 என்எம் (Nm) டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. முந்தைய தலைமுறை மாடலைவிட இதன் பவர் 8 எச்பி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஞ்சினின் சீரான இயக்கத்திற்காக சில முக்கிய பாகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் ஷாப்ட் டிரைவ் (Shaft Drive) தொழில்நுட்பம் இதில் தொடர்கிறது. இது சமதள நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, செங்குத்தான மலைப்பாதைகளிலும் தடங்கலற்ற செயல்திறனை வழங்குகிறது.

34
உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் நவீன சீட் வசதி
Image Credit : 2027 Triumph

உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் நவீன சீட் வசதி

பொதுவாக பெரிய அட்வென்ச்சர் பைக்குகளில் அதிக இருக்கை உயரம் (Seat Height) சவாலாக இருக்கும் சூழலில், அதற்குத் தீர்வாக புதிய டைகர் 1200 பைக்கில் இருக்கை உயரத்தைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பைக் நிற்கும் சமயங்களில், சஸ்பென்ஷன் அமைப்பு செயல்பட்டு இருக்கையின் உயரத்தை 30 மிமீ வரை குறைக்கிறது.

மேலும், கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படும் 'லோ சீட்' (Low Seat) வசதியைப் பயன்படுத்தும்போது, இருக்கை உயரம் அதிகபட்சமாக 790 மிமீ வரை குறையும். இதனால் குறைந்த உயரம் கொண்ட ரைடர்களும் கூட சிக்னல்கள் மற்றும் நிறுத்தங்களில் பைக்கை மிக எளிதாகக் காலூன்றி கையாள முடியும். அத்துடன், வெவ்வேறு வகையான சாலை நிலைகளுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் இதன் சஸ்பென்ஷன் அமைப்பும் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

44
எதிர்பார்க்கப்படும் வேரியண்ட்டுகள் & விலை விவரம்
Image Credit : 2027 Triumph

எதிர்பார்க்கப்படும் வேரியண்ட்டுகள் & விலை விவரம்

சர்வதேச அளவில் டைகர் 1200 ஜிடி புரோ (GT Pro), ஜிடி எக்ஸ்புளோரர் (GT Explorer), ராலி புரோ (Rally Pro) மற்றும் ராலி எக்ஸ்புளோரர் (Rally Explorer) என நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில் ஜிடி புரோ 20 லிட்டர் ஃபியூயல் டேங்க்கையும், ராலி எக்ஸ்புளோரர் 30 லிட்டர் ஃபியூயல் டேங்க்கையும் கொண்டுள்ளன. இவற்றில் ஜிடி புரோ மற்றும் ராலி எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டு மாடல்கள் மட்டுமே இந்தியாவில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான இதன் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், கூடுதல் எஞ்சின் ஆற்றல் மற்றும் ரேடார் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், முந்தைய மாடலை விட இதன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் வெளியாகும் அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பே, இந்திய பிரீமியம் அட்வென்ச்சர் பிரிவில் இந்த பைக் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தைத் தீர்மானிக்கும்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆட்டோ செய்திகள்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(31.2 ov)111/2
Day 2 - Session 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
10-ல் 4 இந்தியர்களின் முதல் தேர்வு எலெக்ட்ரிக் வண்டிதான்; மின்னல் வேகத்தில் வளரும் இ-டூவீலர் புரட்சி!
Recommended image2
120 கி.மீ மைலேஜ்: சூப்பர் எக்கோ டி1 vs வாரிவோ ஏரோ; தினசரி ஆபீஸ் பயணத்திற்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது?
Recommended image3
Top 5 Scooters: இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 5 ஸ்கூட்டர்கள்! செப்டம்பர் 2026 முழு பட்டியல்
Related Stories
Recommended image1
10-ல் 4 இந்தியர்களின் முதல் தேர்வு எலெக்ட்ரிக் வண்டிதான்; மின்னல் வேகத்தில் வளரும் இ-டூவீலர் புரட்சி!
Recommended image2
120 கி.மீ மைலேஜ்: சூப்பர் எக்கோ டி1 vs வாரிவோ ஏரோ; தினசரி ஆபீஸ் பயணத்திற்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved