- Home
- Auto
- Car Buying Tips: 10 லட்சம் கொடுத்து கார் வாங்குறீங்களா? 2 வருஷம் வெயிட் பண்ணா கார் ஓசியில கிடைக்கும்!
Car Buying Tips: 10 லட்சம் கொடுத்து கார் வாங்குறீங்களா? 2 வருஷம் வெயிட் பண்ணா கார் ஓசியில கிடைக்கும்!
Car Buying Tips: உங்க கையில இப்போ 10 லட்சம் ரூபாய் இருக்கா? உடனே கார் வாங்காம ஒரு 2 வருஷம் பொறுமையா இருந்தா, அந்த காரை நீங்க கிட்டத்தட்ட இலவசமாவே வாங்கலாம். அது எப்படின்னு பார்க்கலாம்.

10 லட்சத்தை காருக்கு கொடுக்காம முதல்ல முதலீடு பண்ணுங்க
உங்க கையில 10 லட்சம் ரூபாய் இருக்குன்னு வெச்சுப்போம். உடனே கார் வாங்காம, நல்ல லாபம் தர்ற ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ல (Equity Mutual Fund) ஒரு 2 வருஷத்துக்கு முதலீடு பண்ணுங்க. ஈக்விட்டி ஃபண்டுகள்ல சராசரியா 12% லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. இந்த கணக்குப்படி பார்த்தா, 2 வருஷம் கழிச்சு உங்க 10 லட்சம் ரூபாய் சுமார் 12.5 லட்சமா மாறியிருக்கும். எந்த வேலையும் செய்யாமலே உங்க பணம் 2.5 லட்சம் ரூபாய் அதிகரிச்சிருக்கும்.
இப்போ கார் வாங்குங்க..
ரெண்டு வருஷம் கழிச்சு உங்ககிட்ட இருக்கிற 12.5 லட்சத்தையும் அப்படியே எடுக்க வேண்டியதில்லை. அதை சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) மூலமா முதலீடு பண்ணுங்க. அதாவது, மாசம் மாசம் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கலாம். மீதி பணம் முதலீட்டிலேயே இருக்கும். இப்போ 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் வாங்குறீங்கன்னு வெச்சுப்போம். 7 வருஷத்துக்கு லோன் போட்டா, மாச EMI சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரும்.
இங்கதான் அசலான பிளான் ஆரம்பமாகுது
மாசம் மாசம் உங்க SWP-ல இருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுத்து EMI கட்ட யூஸ் பண்ணுங்க. உங்க கைக்காசு வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் போட்டா போதும். அதாவது, EMI முழுசையும் நீங்க கட்டல, உங்க முதலீடு உங்களுக்கு உதவி செய்யுது. மாசம் 20 ஆயிரம் எடுத்தா பணம் சீக்கிரம் காலியாகிடுமேன்னு பலருக்கும் ஒரு சந்தேகம் வரும். ஆனா, அங்கதான் காம்பவுண்டிங் (Compounding) மேஜிக் நடக்குது.
காம்பவுண்டிங் மேஜிக் இதுதான்
SWP மூலமா நீங்க மாசம் மாசம் பணம் எடுத்தாலும், மீதி பணம் மார்க்கெட்ல முதலீட்டில்தான் இருக்கும். அதுக்கு தொடர்ந்து லாபம் கிடைச்சுக்கிட்டே இருக்கும். இதுக்கு பேர்தான் காம்பவுண்டிங். ஒரு தோராயமான கணக்குப்படி பார்த்தா, 12.5 லட்சத்தை முதலீடு செஞ்சு, 7 வருஷத்துக்கு மாசம் 20,000 ரூபாய் எடுத்தாலும், கடைசியில உங்ககிட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் வரைக்கும் பேலன்ஸ் இருக்கும். மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து இது மாறலாம். நீங்க காரும் ஓட்டியாச்சு, கையில கணிசமான பணமும் மிச்சம் இருக்கு!
3 வருஷம் வெயிட் பண்ணா இன்னும் செம லாபம்
ரெண்டு வருஷத்துக்கு பதிலா மூணு வருஷம் வெயிட் பண்ணா நிலைமை இன்னும் சூப்பரா இருக்கும். ஏன்னா, உங்க முதலீட்டுக்கு கூடுதலா ஒரு வருஷம் காம்பவுண்டிங் லாபம் கிடைக்கும். இதனால EMI-க்கு தேவையான பணத்தை உங்க முதலீடே முழுசா பார்த்துக்கும். உங்க பாக்கெட்ல இருந்து போற பணம் இன்னும் குறையும். கார் வாங்குறது தப்பில்லை. ஆனா, கொஞ்சம் பொறுமையா இருந்தா பெரிய அளவுல பணத்தை மிச்சப்படுத்தலாம்.
இந்த பிளான் யாருக்கு செட் ஆகும்? யாருக்கு ஆகாது?
கையில 10 லட்சம் ரூபாய் ரெடியா வெச்சிருக்கவங்களுக்கு மட்டும்தான் இந்த பிளான் செட் ஆகும். பர்சனல் லோன் வாங்கி மியூச்சுவல் ஃபண்ட்ல போடுறது ரொம்ப தப்பான முடிவு. லோன் வட்டியும், மார்க்கெட் ரிஸ்க்கும் சேர்ந்து பெரிய நஷ்டத்தை கொடுத்துடும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. வருஷா வருஷம் 12% லாபம் கியாரண்டின்னு யாரும் சொல்ல முடியாது. இது ஒரு புரிதலுக்கான தோராயமான கணக்குதான். முதலீடு செய்றதுக்கு முன்னாடி உங்க நிதி ஆலோசகரை கேட்டு முடிவு பண்ணுங்க.





