- Home
- Auto
- Cheapest EV Scooter: நடுத்தர மக்களின் கனவு நனவாகப்போகுது! சூப்பர் ரேஞ்ச், மிரட்டலான லுக்.. மார்க்கெட்டுக்கு வந்தாச்சு!
Cheapest EV Scooter: நடுத்தர மக்களின் கனவு நனவாகப்போகுது! சூப்பர் ரேஞ்ச், மிரட்டலான லுக்.. மார்க்கெட்டுக்கு வந்தாச்சு!
நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டையும், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் மனதில் கொண்டு, Avon E-Star Dx எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் பிரபலமாகியுள்ளது. இதன் விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தற்போதைய சூழலில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் நடுத்தர மக்கள் முதல் வசதி படைத்தவர்களும் அனைவரும் எலக்ட்ரிக் வாகனம் பக்கம் திரும்பி வருகின்றனர்.
குறிப்பாக சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கருத்தில் கொண்டு பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வந்தாலும் தற்போது Avon E-Star Dx எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Avon சைக்கிள்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பழமையான பிராண்டுகளில் ஒன்றாகும். இப்போது, இருசக்கர வாகனப் பிரிவிலும், தங்களின் புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதைக் கவரத் தயாராக உள்ளனர். தினசரி அலுவலகம், கல்லூரி அல்லது மார்க்கெட் போன்ற தேவைகளுக்கு ஒரு பட்ஜெட் இ-ஸ்கூட்டரை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Avon E-Star Dx ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.99,689 ஆக வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆன்-ரோடு விலை, பல்வேறு மாநிலங்களில் உள்ள சாலை வரி மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்து சற்று மாறுபடலாம். ஆனால் பொதுவாக, கொல்கத்தாவில் இதன் ஆன்-ரோடு விலை சுமார் ரூ.1,02,530ஆக உள்ளது.

