இந்தியாவில் அதிகம் விற்கும் டாப் SUVகள் லிஸ்ட் இதோ.. விற்பனை தாறுமாறு
ஜூலை மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான SUVகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்திய கார் சந்தையில் SUVகளின் மீதான வரவேற்பை இந்தப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையான SUVகள்
இந்திய கார் சந்தையில் SUV மாடல்களுக்கு எப்போதுமே வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக சப்-காம்பாக்ட் SUV (3.8 முதல் 4 மீட்டர்) பிரிவு மிக அதிகமாக விற்பனையாகி வருகிறது. ஜூலை மாத விற்பனைப் பட்டியலில், மீண்டும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா முதலிடத்தை பிடித்துள்ளது.
மாருதி பிரெஸ்ஸா SUV விற்பனை
கடந்த மாதம் மட்டும் 14,065 யூனிட்கள் விற்பனையாகி, பிரெஸ்ஸா SUV வாடிக்கையாளர்களின் முதல் விருப்பமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் அதே மாதத்தை ஒப்பிடும்போது, விற்பனையில் 4.16% குறைவு. ரூ.8.69 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த SUV, இன்று விற்பனை முன்னணியில் தொடர்கிறது.
சுசுகி ஃப்ராங்க்ஸ் விற்பனை
இரண்டாவது இடத்தை மாருதி சுசுகி ஃப்ராங்க்ஸ் பிடித்துள்ளது. மொத்தம் 12,872 யூனிட்கள் விற்பனையாகி, 17.82% வளர்ச்சி கண்டுள்ளது. டாடா நெக்ஸான் மூன்றாவது இடத்தில் உள்ளது; 12,825 யூனிட்கள் விற்பனையாகினாலும், 7.75% சரிவு உள்ளது. நான்காவது இடத்தில் டாடா பஞ்ச் 10,785 யூனிட்கள் விற்பனையுடன் தன்னைக் நிலைநிறுத்தியுள்ளது.
ஹூண்டாய் வென்யூ SUV விற்பனை
ஐந்தாவது இடத்தில் ஹூண்டாய் வென்யூ உள்ளது; மொத்தம் 8,054 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. பின்னர் கியா சொனெட் 7,627 யூனிட்கள் விற்பனையுடன் ஆறாவது இடத்தைப் பெற்றது, ஆனால் அதன் வருடாந்திர விற்பனையில் 19% சரிவு ஏற்பட்டது. மஹிந்திரா XUV3OO 7,238 யூனிட்கள் விற்பனையுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர்
மற்ற SUVகளில், ஹூண்டாய் எக்ஸ்டர் (5,075 யூனிட்கள்), ஸ்கோடா குஷாக் (3,377 யூனிட்கள்) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (1,687 யூனிட்கள்) இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களிடம் SUV பிரிவின் மீதான அதிக ஆர்வத்தை காட்டுகின்றன.