பேமிலி கார் வாங்க சரியான நேரம்.. ஸ்கோடா குஷாக்கில் ரூ.65,828 வரை விலை குறைப்பு
புதிய ஜிஎஸ்டி 2.0 வரி நடைமுறையால், ஸ்கோடா குஷாக்கின் விலை ரூ.65,828 வரை குறைந்துள்ளது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் இந்த விலைக்குறைப்பால், குஷாக்கின் ஆரம்ப விலை ரூ.10.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா குஷாக் விலை குறைவு
புதிய ஜிஎஸ்டி 2.0 வரி நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, கார் வாடிக்கையாளர்களுக்கான நன்மைகளை ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 22 முதல் அமலாகும் இந்த புதிய வரி முறையின் கீழ், பல்வேறு கார்களின் விலைகள் குறையும். குறிப்பாக, ஸ்கோடா குஷாக் மாடலில் அதிகபட்சம் ரூ.65,828 வரை விலைக் குறைப்பு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், குஷாக்கின் ஆரம்ப விலை ரூ.10.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி 2.0 கார் விலை
முன்னதாக, குஷாக் மீது 45% வரி (28% ஜிஎஸ்டி + 17% செஸ்) விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செஸ் வரி நீக்கப்பட்டு, 40% ஜிஎஸ்டி மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் குஷாக்கை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த விலை குறைப்பு, நடுத்தர குடும்பங்களுக்கு குஷாக்கை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாறும்.
ஸ்கோடா குஷாக் அம்சங்கள்
ஸ்கோடா குஷாக்கில் இரண்டு வகையான டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் வழங்கப்பட்டுள்ளன. 1.0 லிட்டர் எஞ்சின் 115 bhp பவரையும் 178 Nm டார்க்கையும் வழங்குகிறது. அதேசமயம், 1.5 லிட்டர் எஞ்சின் 150 bhp பவருடன் 250 Nm டார்க்கையும் வழங்குகிறது. இரண்டிலும் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி உள்ளது.
குறைந்த விலை எஸ்யூவி
அம்சங்களைப் பார்க்கும்போது, 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிஃபையர், சன்ரூஃப், எல்இடி ஹெட்லெம்ப்கள், வயர்லெஸ் சார்ஜர், கூல்டு குளோவ் பாக்ஸ் போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், குஷாக்கு பிரீமியம் வாடிக்கையாளர்களை கவர்கிறது.
குஷாக் பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்களிலும் குஷாக்கு முன்னிலை வகிக்கிறது. ஆறு ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), பார்க்கிங் சென்சார் ஆகியவை தரப்பட்டுள்ளன. கூடுதலாக, 360 டிகிரி கேமரா, உயரம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, 3.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. விலை குறைப்பு அம்சங்கள் அதிகரித்திருப்பதால், குஷாக்கு வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகும் வாய்ப்பு அதிகம்.