மிரட்டலான Flying Flea C6 ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ராயல் என்ஃபீல்டு Flying Flea C6 என அழைக்கப்படும் தனது எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இத்தாலியின் மிலன் நகரில் அறிமுகம் செய்துள்ளது. இது ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.
Royal Enfield Flying Flea C6 electric motorcycle
ராயல் என்ஃபீல்டு தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இத்தாலியின் மிலன் நகரில் அறிமுகம் செய்துள்ளது. Flying Flea C6 என அழைக்கப்படும், இது ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். இது மார்ச் 2026 க்குள் விற்பனைக்கு வரும். Flying Flea என்பது ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான புதிய துணை நிறுவனமாகும். இதைத் தொடர்ந்து S6 ஸ்கிராம்பிளர் என்ற பைக்கும் தயாரிப்பில் உள்ளது.
Royal Enfield Flying Flea C6 electric motorcycle
Flying Flea இரண்டாம் உலகப் போரின் போது ராயல் என்ஃபீல்டு உருவாக்கிய பழைய மோட்டார் சைக்கிளை முன்மாதிரியாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. லோ-ஸ்லங் பாபர் மோட்டார்சைக்கிள் பாணியைக் கொண்ட இது ரேக்-அவுட் மற்றும் கர்டர்-ஸ்டைல் ஃபோர்க் கொண்டுள்ளது. இது 1940 களில் பிரபலமாக இருந்த சஸ்பென்ஷன் பாணியாகும். இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஒரு அலுமினிய சட்டத்துடன், வட்ட வடிவ ஹெட்லைட், டெயில்-லைட் மற்றும் எல்.ஈ.டி இண்டிகேட்டர்களை பெற்றுள்ளது.
Royal Enfield Flying Flea C6 electric motorcycle
இதில் ஒரு வட்ட வடிவ TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது வேகம், பயண தூரம், பேட்டரி, ரேஞ்ச் உள்பட பல்வேறு விவரங்களைக் கொடுக்கிறது. இது நேவிகேஷன் டிஸ்ப்ளேவுடன் புளூடூத் இணைப்பையும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களில் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஐந்து ரைடிங் முறைகள் என மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய முதல் ராயல் என்ஃபீல்டு பைக் இதுவாகும்.
Royal Enfield Flying Flea C6 electric motorcycle
Flying Flea C6 அலுமினிய சட்டத்தைக் கொண்டிருப்பது, பட்ஜெட்டுக்கு ஏற்ற EV சந்தையில் மிகவும் அரிதானதாகும். இந்த அலுமினிய சட்டத்திற்குள் ஒரு மெக்னீசியம் பேட்டரி கவர் உள்ளது. பேட்டரி பேக் பற்றிய எந்த விவரங்களையும் ராயல் என்ஃபீல்டு வெளியிடவில்லை. இது 5kWh ஐ விட பெரிய பேட்டரி பேக்கைப் பெறும் எனக் கருதப்படுகிறது. ஒரு முழு சார்ஜில் 150-200 கிமீ வரையிலான ரேஞ்ச் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Royal Enfield Flying Flea C6 electric motorcycle
C6 குறுகிய டயர்களைக் கொண்டுள்ளது. இது நகர்ப்புற சூழல்ககளுக்கு ஏற்றதாக இருக்கும். ரோலிங் ரெசிஸ்டன்ஸைக் குறைப்பதன் மூலம் ரேஞ்சை அதிகரிக்க உதவுகிறது. டயர்கள் இரு பக்கங்களிலும் உள்ள 10-ஸ்போக் அலாய் வீல்களுக்கு மத்தியில் இ-மோட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
Flying Flea C6
இது இரு பக்கமும் டிஸ்க் பிரேக்குகளைப் பெற்றுள்ளது. ஒரே ஒரு தனி இருக்கையைக் கொண்டுள்ளது. பின்னால் அமர்ந்து செல்பவருக்கான பில்லியன் இருக்கையை ஆப்ஷனாக வழங்கும் அல்லது இரட்டை இருக்கைகளுடன் மற்றொரு வேரியண்ட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.