ஏழைகளுக்கு அம்பானியின் பரிசா? வெறும் ரூ.14,999 ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டியா?
Fact Check: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் நிறுவனங்கள் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ரூ.14,999ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டியை வழங்குவது போன்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Jio Electric Scooter
ஜியோ சமீபத்தில் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது, இது இந்திய சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டியின் விலை, அம்சங்கள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு செயல்முறை உள்ளிட்ட பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பரவும் செய்தியில், ஸ்கூட்டர் சிக்கனமாக இருப்பது மட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jio Electric Scooter
வரம்பு
மேலும் ஜியோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பல கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டிருக்கும். இது ஒரு சக்திவாய்ந்த மின்சார மோட்டார் கொண்டிருக்கும், இது அதிக வேகத்தில் இயங்க உதவும். இது தவிர, ஸ்கூட்டியில் லித்தியம் அயன் பேட்டரி இருக்கும், இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 முதல் 100 கிமீ வரை செல்லும். நகரங்களில் தினசரி பயணத்திற்கு இந்த ஸ்கூட்டர் சிறந்ததாக இருக்கும் என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
Jio Electric Scooter
விலை
ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டியின் விலை சுமார் ரூ.14,999 முதல் ரூ.17,000 வரை இருக்கும். சந்தையில் கிடைக்கும் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இந்த விலை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இந்த மலிவு விலையின் காரணமாக, இந்த ஸ்கூட்டர் இளம் வாடிக்கையாளர்களுக்கும் முதல் முறையாக ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும் என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
Jio Electric Scooter
ஆன்லைன் முன்பதிவு
இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு முற்றிலும் இலவசம் மற்றும் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும், அவர்கள் தங்கள் ஸ்கூட்டியை டெலிவரி செய்ய அருகிலுள்ள ஜியோ ஸ்டோரில் காட்டலாம் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
Jio Electric Scooter
வெளியீட்டு தேதி
ஜியோவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025ல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 14,999க்கு எலக்ரிக் ஸ்கூட்டர் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது தொடர்பாக நிறுவனம் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. மேலும் இந்த தகவல்களை ஜியோ நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.