டாடா, கியாவுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் மாருதி: அதிரடி விலை குறைப்பில் பிரெஸ்ஸா கார்
இந்தியாவில் மிகவும் பிரபலமான பிரெஸ்ஸா காரின் விலையை மாருதி நிறுவனம் அதிரடியாகக் குறைத்து புதிதாக வெளியிட உள்ளதால் மாருதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Brezza
Affordable Maruti Brezza: தற்போதைய மாருதி பிரெஸ்ஸா இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யூவி. கடந்த மாதம் 17,000க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் டெல்லியில் பிரெஸ்ஸாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.34 லட்சத்தில் தொடங்குகிறது. ஆனால் இப்போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
ஊடக அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களின்படி, நிறுவனம் பிரெஸ்ஸாவை இன்னும் மலிவு விலையில் உருவாக்கப் போகிறது. இதற்காக அதன் இயந்திரத்தில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆண்டு புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களை அறிமுகப்படுத்தியது. இரண்டு மாடல்களும் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினைப் பெறுகின்றன, அதே எஞ்சின் புதிய பிரெஸ்ஸாவை இயக்கும்.
Brezza
சிறிய எஞ்சினில் பிரெஸ்ஸா
தற்போது, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிரெஸ்ஸாவை இயக்குகிறது. இதன் காரணமாக அதன் விலை மற்ற எஸ்யூவிகளை விட சற்று அதிகமாக உள்ளது. தற்போது பிரெஸ்ஸாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.34 லட்சம் முதல் ரூ.13.98 லட்சம் வரை உள்ளது. பெரிய எஞ்சின் காரணமாக இந்த வாகனத்தின் விலை அதிகமாகவே உள்ளது. ஆனால் இதில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் சேர்க்கப்பட உள்ளது. இதன் காரணமாக, அதன் விலை கணிசமாகக் குறையும். புதிய எஞ்சின் சக்தி வாய்ந்ததாக இருப்பதுடன், அதிக மைலேஜையும் அளிக்கும்.
Brezza
எவ்வளவு செலவாகும்?
புதிய எஞ்சினுடன் கூடிய புதிய பிரெஸ்ஸாவின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.7.49 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மைலேஜ் 22-23 kmpl வரை செல்லும். அத்தகைய சூழ்நிலையில், புதிய பிரெஸ்ஸா, தற்போதுள்ள மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகியவற்றுக்கு எச்சரிக்கை மணியாக மாறலாம்.
Brezza
பாதுகாப்பு அம்சங்கள்
புதிய பிரெஸ்ஸா சிறிய எஞ்சினை பெறுவதோடு மட்டும் அல்லாமல் அதில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த வாகனத்தில் 6 ஏர் பேக்குகள், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய ஈபிடி, 360 டிகிரி சரவுண்ட் வியூ, பிளைண்ட் வியூ மிரர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ ஹோல்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.
இம்முறை ADAS லெவல் 2 பாதுகாப்பு அம்சமும் சேர்க்கப்படலாம் என நம்பப்படுகிறது. சந்தையில் அதன் பிடியை வலுப்படுத்த, மாருதி சுஸுகி ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினிலும் வேலை செய்து வருகிறது.. புதிய டர்போ கிட் கொண்ட கார்களில் 1.2 லிட்டர் Z12 E பெட்ரோல் எஞ்சினை மாருதி விரைவில் அறிமுகப்படுத்தலாம்.