MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மைலேஜும் வேணும், மாஸான லுக்கும் வேணுமா? கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1.5 லட்சத்திற்குள் டாப் 5 பைக்குகள்!

மைலேஜும் வேணும், மாஸான லுக்கும் வேணுமா? கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1.5 லட்சத்திற்குள் டாப் 5 பைக்குகள்!

கல்லூரி மாணவர்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், சிறந்த மைலேஜ், அசத்தலான ஸ்போர்ட்டி லுக் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு கொண்ட ரூ. 1.5 லட்சத்திற்குட்பட்ட டாப் 5 பைக்குகளின் மைலேஜ், இன்ஜின் விவரங்கள், எக்ஸ்-ஷோரூம் விலை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 24 2026, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கல்லூரி மாணவர்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?
Image Credit : x

கல்லூரி மாணவர்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?

கல்லூரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு பைக் என்பது வெறும் போக்குவரத்து சாதனம் மட்டுமல்லாமல், அவர்களின் ஸ்டைல் மற்றும் தனித்துவத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. அதே நேரத்தில், பெற்றோர்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கக்கூடிய விலையிலும், அன்றாட பாக்கெட் மணியைச் சேமிக்கும் வகையில் சிறந்த மைலேஜ் தரும் வகையிலும் பைக்குகள் அமைவது அவசியமாகிறது.

அந்த வகையில், இந்திய சந்தையில் கல்லூரி மாணவர்களைக் கவரும் வகையில் ரூ. 1.5 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில், சிறந்த தோற்றம் மற்றும் மைலேஜ் கொண்ட டாப் 5 பைக்குகளின் விலை, சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R)
Image Credit : Hero

1. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R)

அதிக விலை கொண்ட 160 சிசி பைக்குகளுக்கு சவால் விடும் வகையில் மிகவும் ஸ்போர்ட்டியான மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்துடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூர்மையான எல்.இ.டி விளக்குகள், ஸ்ப்ளிட் சீட் அமைப்பு. டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு ஏதுவான இலகுவான கட்டமைப்பு.

இன்ஜின் & மைலேஜ்: 125 சிசி இன்ஜின்; ஒரு லிட்டருக்குச் சுமார் 60 கி.மீ வரை மைலேஜ்.

எக்ஸ்-ஷோரூம் விலை: சுமார் ரூ. 95,000 முதல் ரூ. 1.02 லட்சம் வரை.

36
2. டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125)
Image Credit : TVS

2. டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125)

கல்லூரி இளைஞர்கள் மத்தியில் தற்காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் மாடலாக இது உள்ளது. நவீன டிஜிட்டல் டிஸ்ப்ளே, சீட்டுக்கு அடியில் ஸ்டோரேஜ் வசதி மற்றும் தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தம்.

இன்ஜின் & மைலேஜ்: 125 சிசி இன்ஜின்; நகர்ப்புறப் பயணங்களுக்கு உகந்ததுடன், லிட்டருக்குச் சுமார் 55 முதல் 60 கி.மீ வரை மைலேஜ்.

எக்ஸ்-ஷோரூம் விலை: தோராயமாக ரூ. 85,000 முதல் ரூ. 1.05 லட்சம் வரை.

46
3. ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125)
Image Credit : Honda

3. ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125)

அதிகப்படியான ஆடம்பர அலங்காரங்கள் இல்லாமல், தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் நம்பகமான தேர்வாக இது விளங்குகிறது. ஹோண்டாவின் ஸ்மூத் இன்ஜின் மற்றும் நீண்ட தூர பயணங்களின் போது அசதி தராத சௌகரியமான சீட்டிங் அமைப்பு.

இன்ஜின் & மைலேஜ்: 125 சிசி இன்ஜின்; லிட்டருக்குச் சுமார் 60 முதல் 65 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்.

எக்ஸ்-ஷோரூம் விலை: சுமார் ரூ. 87,000 முதல் ரூ. 91,000 வரை.

56
4. பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160)
Image Credit : Bajaj

4. பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160)

மைலேஜுடன் சேர்த்து கூடுதல் வேகம் மற்றும் மஸ்குலர் தோற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்கான பிரீமியம் மாடல். புரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பாதுகாப்புக்கான டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி. கல்லூரி பயணம் மற்றும் வார இறுதி லாங் ரைடுகளுக்கு ஏற்றது.

இன்ஜின் & வேகம்: 160 சிசி இன்ஜின்; மணிக்கு 115 கி.மீ வேகம் வரை செல்லும் திறன்.

மைலேஜ்: லிட்டருக்குச் சுமார் 45 முதல் 50 கி.மீ வரை.

எக்ஸ்-ஷோரூம் விலை: சுமார் ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 1.33 லட்சம் வரை.

66
5. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (Hero Xtreme 160R 4V)
Image Credit : Hero

5. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (Hero Xtreme 160R 4V)

பந்தயக் கள பைக்குகளுக்கு இணையான பவர் மற்றும் கூர்மையான டிசைனை எதிர்பார்ப்பவர்களுக்கான லேட்டஸ்ட் மாடல். புதிய 4-வால்வு இன்ஜின் மூலம் உடனடி பிக்-அப்; நெரிசலான டிராஃபிக்கில் எளிதாகக் கையாள உதவும் எடை குறைவான சேஸிஸ்.

இன்ஜின் & மைலேஜ்: 160 சிசி இன்ஜின்; ஒரு லிட்டருக்குச் சுமார் 45 முதல் 48 கி.மீ வரை மைலேஜ்.

எக்ஸ்-ஷோரூம் விலை: தோராயமாக ரூ. 1.27 லட்சம் முதல் ரூ. 1.36 லட்சம் வரை.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆட்டோ செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra Thar OG: புதிய 3-டோர் மஹிந்திரா தார் காரில் என்னென்ன வசதிகள் இருக்கு? விலை இவ்வளவு கம்மியா?
Recommended image2
Honda QC3: அதிக பொருட்கள் வைக்கலாம்.. 145 கி.மீ ரேஞ்ச்.. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் விலை எவ்ளோ? முழு விபரம்
Recommended image3
கிளட்சுக்கு குட்பை! 36 KM மைலேஜ் தரும் ஆட்டோமேடிக் CNG கார்கள்... விலை இவ்வளவுதானா?
Related Stories
Recommended image1
Honda QC3: அதிக பொருட்கள் வைக்கலாம்.. 145 கி.மீ ரேஞ்ச்.. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் விலை எவ்ளோ? முழு விபரம்
Recommended image2
Mahindra Thar OG: புதிய 3-டோர் மஹிந்திரா தார் காரில் என்னென்ன வசதிகள் இருக்கு? விலை இவ்வளவு கம்மியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved