MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Mahindra Thar OG: புதிய 3-டோர் மஹிந்திரா தார் காரில் என்னென்ன வசதிகள் இருக்கு? விலை இவ்வளவு கம்மியா?

Mahindra Thar OG: புதிய 3-டோர் மஹிந்திரா தார் காரில் என்னென்ன வசதிகள் இருக்கு? விலை இவ்வளவு கம்மியா?

Mahindra Thar OG : மஹிந்திரா நிறுவனம் தங்களது புதிய 3-டோர் தார் OG மாடலை அறிமுகம் செஞ்சிருக்காங்க. பெட்ரோல், டீசல்னு ரெண்டு இன்ஜின் ஆப்ஷன்களோட வர இந்த காரோட டெலிவரி 2026 அக்டோபர் 11-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 23 2026, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
3 டோர் மஹிந்திரா தார்
Image Credit : Mahindra

3-டோர் மஹிந்திரா தார்

மஹிந்திரா நிறுவனம் தங்களது புதிய 3-டோர் தார் OG (Thar OG) மாடலை இந்திய மார்க்கெட்ல அதிகாரப்பூர்வமா அறிமுகம் செஞ்சிருக்காங்க. இந்த காரோட எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.32 லட்சத்துல இருந்து தொடங்குது. பழைய தார் மாடலுக்குப் பதிலா தான் இந்த புது மாடல் வந்திருக்கு. AXT, LXT, ZXTனு மொத்தம் 3 வேரியண்ட்கள்ல இந்த புதிய தார் ஒரிஜின் கிடைக்கும். இந்த காருக்கான டெலிவரி 2026 அக்டோபர் 11-ம் தேதி முதல் தொடங்கும்னு சொல்லிருக்காங்க. நவம்பர் 30-ம் தேதிக்குள்ள டெலிவரி செய்யப்படுற கார்களுக்கு மட்டும்தான் இந்த அறிமுக விலை பொருந்தும்.

Mahindra New SUV: டாடா பஞ்ச்சுக்கு போட்டியாக வரும் பேபி ஸ்கார்பியோ... மஹிந்திராவின் மாஸ் சம்பவம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பெட்ரோல் மாடல்களின் விலை
Image Credit : Mahindra

பெட்ரோல் மாடல்களின் விலை

புதிய தார் ஒரிஜின் LXT பெட்ரோல் ரியர்-வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் மாடலோட விலை ரூ.14.77 லட்சம். 4-வீல் டிரைவ் (4WD) மேனுவல் மாடலுக்கு ரூ.15.60 லட்சமும், 4-வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.17.23 லட்சமும் விலை நிர்ணயம் செஞ்சிருக்காங்க. ZXT ரியர்-வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் மாடலோட விலை ரூ.16.09 லட்சம். இதோட 4-வீல் டிரைவ் மேனுவல் மாடலுக்கு ரூ.16.60 லட்சமும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.17.75 லட்சமும் எக்ஸ்-ஷோரூம் விலையா இருக்கு.

டீசல் வேரியண்ட்கள்

1.5 லிட்டர் டீசல் ரியர்-வீல் டிரைவ் மேனுவல் AXT வேரியண்ட்டோட விலை ரூ.10.32 லட்சம். LXT மாடலுக்கு ரூ.12.99 லட்சம் விலை வச்சிருக்காங்க. 2.2 லிட்டர் டீசல் ரியர்-வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் LXT மாடலுக்கு ரூ.16.49 லட்சமும், 4-வீல் டிரைவ் மேனுவலுக்கு ரூ.16.43 லட்சமும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.18.00 லட்சமும் விலை நிர்ணயம் செஞ்சிருக்காங்க. ZXT 1.5 லிட்டர் டீசல் ரியர்-வீல் டிரைவ் மேனுவல் மாடலோட விலை ரூ.13.99 லட்சம். 2.2 லிட்டர் டீசல் ரியர்-வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.17.49 லட்சமும், 4-வீல் டிரைவ் மேனுவலுக்கு ரூ.17.49 லட்சமும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.18.99 லட்சமும் விலை இருக்கு.

34
மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள்
Image Credit : Mahindra

மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள்

இந்த கார்ல 1.5 லிட்டர் D117 CRDe டீசல் இன்ஜின் கொடுத்திருக்காங்க. இது 117 HP பவரையும் 300 Nm டார்க் திறனையும் கொடுக்கும். 2.2 லிட்டர் D22 mHawk டீசல் இன்ஜின் 150 HP பவரையும் 330 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 2.0 லிட்டர் G20 TGDi mStallion டர்போ பெட்ரோல் இன்ஜின் 160 HP பவரையும் 330 Nm டார்க் திறனையும் கொடுக்கும். ரியர்-வீல் டிரைவ், 4-வீல் டிரைவ்னு ரெண்டு கான்ஃபிகரேஷன்கள்லயும் பல இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்குது.

ஆஃப்-ரோடு திறனில் மாற்றங்கள்

4-வீல் டிரைவ் மாடல்கள்ல எலக்ட்ரானிக் லாக்கிங் டிஃபெரன்ஷியல், மட், சாண்ட், ஸ்னோனு பல டெரெய்ன் மோடுகள் கொடுத்திருக்காங்க. குறிப்பிட்ட ரியர்-வீல் டிரைவ் மாடல்கள்ல டெரெய்ன் அசிஸ்ட் வசதியும் இருக்கு. புதிய M-Glide 4G பிளாட்ஃபார்ம் இந்த காரை இன்னும் வலிமையாக்கியிருக்கு. வாட்ஸ் லிங்க் வசதியோட பென்டாலிங்க் ரியர் சஸ்பென்ஷனும், ZXT மாடல்ல ஃப்ரீக்வென்சி டிபென்டன்ட் டாம்பிங் வசதியும் இருக்கு. பழைய ஹைட்ராலிக் சிஸ்டத்துக்குப் பதிலா இப்போ எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் கொடுத்திருக்காங்க.

44
டிசைன் மற்றும் ஃபீச்சர்களில் புதுமை
Image Credit : Mahindra

டிசைன் மற்றும் ஃபீச்சர்களில் புதுமை

புதுசா டிசைன் செய்யப்பட்ட கிரில், C-வடிவ DRLகளுடன் கூடிய LED ஹெட்லேம்ப்கள், புதிய பம்பர்கள், 19 இன்ச் அலாய் வீல்கள்னு டிசைன்ல பல முக்கிய மாற்றங்கள் செஞ்சிருக்காங்க. ZXT வேரியண்ட்ல 10.25 இன்ச் HD டச்ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், ரியர் வியூ கேமரா, பிரண்ட் பார்க்கிங் சென்சார்கள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல்னு பல சூப்பரான ஃபீச்சர்கள் இருக்கு.

பாதுகாப்புக்கும் முக்கியத்துவம்

புதிய தார் கார்ல பாதுகாப்பு வசதிகளையும் நல்லா மேம்படுத்தியிருக்காங்க. ZXT மாடல்ல 6 ஏர்பேக்குகள், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ESP 9.3, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் இருக்கு. AXT வேரியண்ட்ல டூயல் ஏர்பேக்குகள், ESP, முன்பக்க டிஸ்க் மற்றும் பின்பக்க டிரம் பிரேக்குகள் ஸ்டாண்டர்டா கிடைக்குது.

Best Diesel Cars Under Rs 10 Lakh: ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்குள்.. கிடைக்கும் டாப் 5 சிறந்த டீசல் கார்கள் இதுதான்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகிந்திரா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Honda QC3: அதிக பொருட்கள் வைக்கலாம்.. 145 கி.மீ ரேஞ்ச்.. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் விலை எவ்ளோ? முழு விபரம்
Recommended image2
கிளட்சுக்கு குட்பை! 36 KM மைலேஜ் தரும் ஆட்டோமேடிக் CNG கார்கள்... விலை இவ்வளவுதானா?
Recommended image3
Tata Aeris: டிசையர், ஹூண்டாய் ஆராவுக்கு தண்ணி காட்டப்போகும் டாடா ஏரிஸ்.. இந்திய மக்கள் வெயிட்டிங்
Related Stories
Recommended image1
Mahindra Offer: 20 நிமிட சார்ஜ், 656 கிமீ ரேஞ்ச்.. இந்த காருக்கு ரூ.1.40 லட்சம் வரை தள்ளுபடி
Recommended image2
Mahindra 7 Seater SUV: 7 சீட்டர் கார் வாங்க காத்திருக்கிறீர்களா? மஹிந்திராவின் புதிய மாடல்கள் ரெடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved