MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Ola S1: ரூ.1 லட்சம் கூட இல்ல.. 176 கி.மீ ரேஞ்ச்.. மிரட்டலான அம்சங்களுடன் ஓலா S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Ola S1: ரூ.1 லட்சம் கூட இல்ல.. 176 கி.மீ ரேஞ்ச்.. மிரட்டலான அம்சங்களுடன் ஓலா S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Ola Electric S1 X: இந்தியாவில் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஓலா S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 176 கி.மீ ரேஞ்ச் கொடுக்கிறது. இந்த ஸ்கூட்டர் குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 23 2026, 06:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஓலா S1 X 3kWh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Image Credit : Gemini AI

ஓலா S1 X 3kWh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

நமது நாட்டில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பலரும் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். அதிக ரேஞ்ச், அதே சமயம் பட்ஜெட் விலையில் இருக்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்கள் தேடி வருகின்றனர். இதற்கு ஓலா S1 X 3kWh ஒரு நல்ல தேர்வாக உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ₹97,381. ஒரே சார்ஜில் 176 கி.மீ. IDC ரேஞ்ச், 123 kmph டாப் ஸ்பீடு கொடுக்கிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, நேவிகேஷன், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற ஸ்மார்ட் அம்சங்களும் உள்ளன. எரிபொருள் செலவைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சரியான பட்ஜெட் ஸ்கூட்டர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
 ரூ.1 லட்சத்துக்குள் சக்திவாய்ந்த ஸ்கூட்டர்
Image Credit : Google

ரூ.1 லட்சத்துக்குள் சக்திவாய்ந்த ஸ்கூட்டர்

ஓலா S1 X 3kWh மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹97,381. இந்த விலையில் கிடைக்கும் அம்சங்களும், ரேஞ்சும் இந்த செக்மென்டில் இதை தனித்துவமாக்குகிறது. குறைந்த பட்ஜெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சூப்பர் சாய்ஸ்.

Related Articles

Related image1
License Free E Scooter: லைசன்ஸ் தேவையில்லை, ரிஜிஸ்ட்ரேசன் கிடையாது.! வெறும் ரூ.69000க்கு e ஸ்கூட்டர்
Related image2
Scooters vs Bikes Mileage: பைக் மாதிரி ஸ்கூட்டர் ஏன் மைலேஜ் கொடுப்பதில்லை? இன்ஜினுக்குள் ஒளிந்திருக்கும் 'அந்த' ரகசியம்!
35
 ஒரே சார்ஜில் 176 கி.மீ போகலாம்
Image Credit : Google

ஒரே சார்ஜில் 176 கி.மீ போகலாம்

ஓலா நிறுவனத்தின்படி, S1 X 3kWh ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 176 கி.மீ. வரை IDC ரேஞ்ச் கிடைக்கும். தினமும் அலுவலகம் செல்பவர்கள் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதில் 3kWh லித்தியம்-அயன் பேட்டரியை பொருத்தியிருக்கிறார்கள். தினசரி நகரப் பயன்பாட்டிற்கு இது மிகவும் ஏற்றது.
45
123 kmph வரை டாப் ஸ்பீடு
Image Credit : OLA

123 kmph வரை டாப் ஸ்பீடு

ஓலா S1 X 3kWh மாடலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் டாப் ஸ்பீடு. இந்த ஸ்கூட்டி மணிக்கு 123 கி.மீ. வேகத்தில் செல்லும். அதிக வேகம் விரும்பும் இளைஞர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பிடிக்கும். உங்களுடைய தினசரி பயணம் 30 முதல் 50 கி.மீ. வரை இருந்தால், இந்த ஸ்கூட்டர் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
55
அலுவலகம் செல்பவர்களுக்கு ஏற்றது
Image Credit : our own

அலுவலகம் செல்பவர்களுக்கு ஏற்றது

அலுவலகம், கல்லூரி செல்பவர்களுக்கு இந்த ஸ்கூட்டர் ஒரு சிறந்த பயண அனுபவத்தைக் கொடுக்கும். இதன் அதிக ரேஞ்ச் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு, தினசரி பயணங்களை சுலபமாக்குகிறது. பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது.

இந்த ஸ்கூட்டரில் ஏராளமான வசதிகள் கொட்டிக்கிடக்கின்றன‌  ஓலா S1 X மாடலில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, நேவிகேஷன் சப்போர்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோட்ஸ், ஸ்மார்ட் கனெக்டிவிட்டி போன்ற பல நவீன அம்சங்கள் உள்ளன. இந்த வசதிகள் பயணத்தை இன்னும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றுகின்றன. பெட்ரோல் விலை உயர்வால் சிரமப்படுபவர்களுக்கு ஓலா S1 X ஒரு அருமையான மாற்று ஆகும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மின்சார ஸ்கூட்டர்
ஆட்டோ செய்திகள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bike Seat: பைக் பின் சீட் ஏன் உயரமா இருக்கு தெரியுமா? ஸ்டைலுக்காக இல்ல.. உயிரைக் காக்கும் ரகசியம்!
Recommended image2
Honda : பிரெஸ்ஸா, நெக்ஸான் கார்களுக்கு ஆப்பு வைக்க... ஹோண்டா களமிறக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி!
Recommended image3
679 கிமீ ரேஞ்ச், பனோரமிக் சன்ரூஃப், அட்டகாசமான வசதிகளுடன்.. இந்தியாவின் டாப் 7-சீட்டர் EV கார்கள்!
Related Stories
Recommended image1
License Free E Scooter: லைசன்ஸ் தேவையில்லை, ரிஜிஸ்ட்ரேசன் கிடையாது.! வெறும் ரூ.69000க்கு e ஸ்கூட்டர்
Recommended image2
Scooters vs Bikes Mileage: பைக் மாதிரி ஸ்கூட்டர் ஏன் மைலேஜ் கொடுப்பதில்லை? இன்ஜினுக்குள் ஒளிந்திருக்கும் 'அந்த' ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved