ரூ.49,999 முதல் கிடைக்கும் ஓலா ஸ்கூட்டர், பைக்.. பண்டிகை பம்பர் சலுகை
ஓலா எலக்ட்ரிக், 'Ola Muhurat Mahotsav' என்ற பண்டிகை கால சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 1 வரை, இந்த சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா முஹூர்த்த மஹோற்சவம்
இந்தியாவின் பண்டிகை சீசனுக்கு வித்தியாசமான சலுகையுடன் ஓலா எலக்ட்ரிக் களம் இறங்கியுள்ளது. ‘Ola Celebrates India’ என்ற சிறப்பு பிரச்சாரத்தின் கீழ் ‘Ola Muhurat Mahotsav’ எனும் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓலா S1 மின்சார ஸ்கூட்டர்களும், Roadster X மின்சார மோட்டார் சைக்கிள்களும் வெறும் ரூ.49,999 முதல் கிடைக்கின்றன. இந்த சலுகை செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 1 வரை மொத்தம் ஒன்பது நாட்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
ஓலா எலக்ட்ரிக் சலுகை
சலுகை காலத்தில் குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு வரும். "முதலில் வரும் பயனாளருக்கு முன்னுரிமை" அடிப்படையில் விற்பனை நடைபெறும். ஒவ்வொரு நாளும் வாகனங்களை பதிவு செய்யும் முஹூர்த்த நேரம் ஓலா நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் அறிவிக்கப்படும். இதில் S1 X (2kWh) ஸ்கூட்டர் மற்றும் Roadster X (2.5kWh) பைக் ஆகியவை தலா ரூ.49,999-க்கு கிடைக்கும். அதிக திறன் கொண்ட S1 Pro+ (5.2kWh) ஸ்கூட்டர் மற்றும் Roadster X+ (9.1kWh) பைக் ஆகியவை ரூ.99,999-க்கு வழங்கப்படும்.
ஓலா ஸ்கூட்டர் சலுகை
இதற்குப் பிறகு, ஓலா தனது வழக்கமான மாடல்களைத் தொடர்ந்து விற்பனை செய்கிறது. அதில் S1 Pro+ (5.2kWh, 4kWh) ரூ.1,69,999 மற்றும் ரூ.1,51,999-க்கு, S1 Pro (4kWh, 3kWh) ரூ.1,37,999 மற்றும் ரூ.1,20,999-க்கு கிடைக்கிறது. பொதுமக்களுக்கான S1 X+ (4kWh) ரூ.1,11,999-க்கு, மேலும் S1 X வரிசை (2kWh, 3kWh, 4kWh) ரூ.81,999 முதல் ரூ.1,03,999 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரோட்ஸ்டர் பைக் விலை குறைப்பு
மோட்டார் சைக்கிள் வகைகளில் Roadster X (2.5kWh, 3.5kWh, 4.5kWh) ரூ.99,999 முதல் ரூ.1,24,999 வரை, Roadster X+ (4.5kWh) ரூ.1,27,499-க்கு விற்பனையில் உள்ளது. புதிய 4680 Bharat Cell பேட்டரி தொழில்நுட்பத்துடன் வரும் S1 Pro+ (5.2kWh) ரூ.1,69,999-க்கும், Roadster X+ (9.1kWh) ரூ.1,89,999-க்கும் கிடைக்கும். இவை நவராத்திரி முதல் வாடிக்கையாளர்களிடம் சென்று சேரும். கூடுதலாக, 2026 ஜனவரி மாதம் முதல் S1 Pro Sport என்ற புதிய ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரும் ரூ.1,49,999 விலையில் அறிமுகமாகிறது.