பிப்ரவரியில் அதிகம் பேர் வாங்கிய கார் எது தெரியுமா? 19,430 யூனிட்கள் விற்று சாதனை!
பிப்ரவரி 2026 மாத கார் விற்பனைத் தரவுகள் வெளியாகியுள்ளது. சந்தையில் அதிகமாக விற்பனையாகும் மாடல்கள் எவை என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். அதனை இங்கு விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்கும் கார்
புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் சந்தையில் அதிகமாக விற்பனையாகும் மாடல்கள் எவை என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். பிப்ரவரி 2026 மாத விற்பனைத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்திய கார் சந்தையில் டாடா நெக்ஸான் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி சுசுகி ப்ரெஸ்ஸா போன்ற பிரபல மாடல்களை கூட பின்னுக்கு தள்ளி நெக்ஸான் முன்னிலை பெற்றுள்ளது.
டாடா நெக்ஸான்
பிப்ரவரி மாதத்தில் டாடா நெக்ஸான் மொத்தம் 19,430 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக மாருதி சுசுகி டிசைர் 19,326 யூனிட்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் டாடா பஞ்ச் 18,748 யூனிட்களுடன் திகழ்கிறது. எஸ்யூவி மற்றும் காம்பாக்ட் கார்களுக்கு தொடர்ந்து அதிகமான வரவேற்பு இருப்பதை இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன.
ஹூண்டாய் க்ரெட்டா
நான்காவது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா 17,938 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. ஐந்தாவது இடத்தை மாருதி சுசுகி ப்ரெஸ்ஸா 17,863 யூனிட்களுடன் பிடித்துள்ளது. இதனால் எஸ்யூவி பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது என்பது தெளிவாகிறது. விலையும், மைலேஜும், அம்சங்களும் இணைந்த மாடல்கள் தான் அதிகமாக விற்பனையாகின்றன.
மாருதி சுசுகி எர்டிகா
முதல் ஐந்து இடங்களைத் தொடர்ந்து, மாருதி சுசுகி எர்டிகா 17,807 யூனிட்களுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. மாருதி வேகன் ஆர் 14,885 யூனிட்களுடன் ஏழாம் இடத்திலும், ஸ்விஃப்ட் 14,833 யூனிட்களுடன் எட்டாம் இடத்திலும் உள்ளது. இவை ஹேட்ச்பேக் பிரிவில் இன்னும் வலுவான நிலையை உள்ளது.
மாருதி பலேனோ
ஒன்பதாவது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ 14,665 யூனிட்களுடன் இடம்பிடித்துள்ளது. பத்தாவது இடத்தில் மாருதி பலேனோ 14,632 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. மொத்தத்தில் பார்த்தால், எஸ்யூவி மற்றும் காம்பாக்ட் மாடல்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாங்க திட்டமிடுவோர் இந்த விற்பனை தரவுகளை கருத்தில் கொள்ளலாம்.

