புதிய லுக்கில் பல்சர் 150 பைக் வந்தாச்சு.. விலை, அம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ
இந்தியாவின் விருப்பமான பைக்கான பஜாஜ் பல்சர் 150, புதிய நிறங்கள், கிராபிக்ஸ், LED ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் போன்ற அப்டேட்களுடன் மீண்டும் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

புதிய பஜாஜ் பல்சர் 150
புதிய ஆண்டை வரவேற்கும் முன்பே, இந்திய இருசக்கர வாகன சந்தையில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் வகையில் பஜாஜ் பல்சர் 150 (Bajaj Pulsar 150) புதிய அவதாரத்தில் அறிமுகமாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய இளைஞர்களின் விருப்பமான பைக்காக இருக்கும் பல்சர் 150, இப்போது சிறிய ஆனால் கனிசமான மாற்றங்களுடன் சந்தைக்கு வந்துள்ளது. இந்த அப்டேட்டுடன், பைக்கின் விலையும் சற்று மாற்றம் பெற்றுள்ளது. 2026 மாடல் ஆண்டு (MY2026) வரிசையின் ஒரு பகுதியாக இந்த புதிய பல்சர் 150 அப்டேட் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பைக் 4 விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய பல்சர் 150 விலை
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,08,772 முதல் ரூ.1,15,481 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோற்றத்துடன், ஸ்போர்ட்டி எளிமையான வடிவமைப்பு வழங்கும் 150cc பைக்காக பல்சர் 150 தொடர்ந்து நிலைத்திருக்கிறது. வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்தாலும், புதிய நிறங்கள் மற்றும் கிராபிக்ஸ் பைக்கிற்கு ஒரு மாடர்ன் லுக் வழங்கப்படுகின்றன. இதன் முக்கிய அப்டேடாக LED ஹெட்லைட் மற்றும் LED இன்டிகேட்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பைக்கின் தோற்றத்தை மட்டுமல்ல, இரவு நேர பயணங்களில் சிறந்த ஒளி வசதியையும் வழங்குகிறது. 17-இன்ச் அலாய் வீல்கள், முன்புற டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் பழையபடி தொடர்கின்றன.
பஜாஜ் புதிய பைக்
இன்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் 149.5சிசி ஒற்றை சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு, 13.8 bhp பவர் மற்றும் 13.25 Nm டார்க் வழங்குகிறது. சராசரியாக 45 முதல் 50 kmpl வரை மைலேஜ் தரக்கூடிய பைக்காக இது விளங்குகிறது. 150cc கம்யூட்டர் பைக் பிரிவில், பல்சர் 150, Honda CB Unicorn 150 மற்றும் TVS Apache RTR 160 போன்ற பைக்குகளுடன் போட்டியிடுகிறது. பல ஆண்டுகளாக இந்த பைக், அதன் திடமான தோற்றம், நம்பகமான இன்ஜின் மற்றும் விலைக்கேற்ற மதிப்பு காரணமாக இன்றும் வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறுகிறது.

