MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பைக் சந்தையில் புதிய போட்டி.. எந்த பைக் முன்னிலை தெரியுமா? முழு ரிப்போர்ட்

பைக் சந்தையில் புதிய போட்டி.. எந்த பைக் முன்னிலை தெரியுமா? முழு ரிப்போர்ட்

மார்ச் 2026-ல் இந்திய 150-200cc பைக் சந்தை 29% வளர்ச்சி கண்டுள்ளது. ஹோண்டா யூனிகார்ன், யமஹா மற்றும் ஹீரோவின் மாடல்களும் குறிப்பிடத்தக்க விற்பனையைப் பதிவு செய்துள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 26 2026, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
150 200cc பைக் விற்பனை
Image Credit : social media

150-200cc பைக் விற்பனை

இந்திய இருசக்கர வாகன சந்தையில் 150cc முதல் 200cc வரையிலான மோட்டார்சைக்கிள் பிரிவு, 2026 மார்ச் மாதத்தில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 1.89 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, ​​சுமார் 29 சதவீதம் உயர்வு உள்ளது. நகர்ப்புற மற்றும் புறநகர் பயனர்களிடையே தினசரி பயணத்துக்கும், சிறந்த செயல்திறனுக்கும் இந்த செக்மென்ட் மீது ஆர்வம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பல்சர் விற்பனை உயர்வு
Image Credit : stockPhoto

பல்சர் விற்பனை உயர்வு

இந்த வளர்ச்சியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் தொடர்ச்சி முக்கிய பங்காகியுள்ளது. மார்ச் 2026-ல் மட்டும் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகி, சந்தையில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிக வேகமான வளர்ச்சியைக் காட்டுகிறது. குறிப்பாக, பல்சர் 180 மாதலின் மீள்பிரவேசம் விற்பனையை மேலும் தூண்டியதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

36
அப்பாச்சி பைக் விற்பனை
Image Credit : tvs

அப்பாச்சி பைக் விற்பனை

இதே நேரத்தில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி வரிசை இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. சுமார் 47 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி, நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. விளையாட்டுத்தன்மை கொண்ட வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் காரணங்களாக உள்ளன.

46
2026 மார்ச் பைக் ரிப்போர்ட்
Image Credit : honda

2026 மார்ச் பைக் ரிப்போர்ட்

மூன்றாவது இடத்தில் ஹோண்டாவின் யூனிகார்ன் உள்ளது. நம்பகத்தன்மை மற்றும் சௌகரியமான ஓட்ட அனுபவம் காரணமாக, இந்த மாடல் தொடர்ந்து விற்பனையில் நிலைத்தன்மையைக் காட்டுகிறது. மேலும், யமஹா நிறுவனத்தின் FZ, MT-15, R15 போன்ற மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. புதியதாக அறிமுகமான XSR மாடலும் ஆரம்ப கட்டத்தில் நல்ல பதிலைப் பெற்றுள்ளது.

56
மிட் செக்மென்ட் பைக்
Image Credit : our own

மிட் செக்மென்ட் பைக்

மற்றொரு முக்கிய அம்சமாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அட்வென்ச்சர் வகை பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருவதை இது வெளிப்படுத்துகிறது. KTM நிறுவனத்தின் 200 ட்யூக் மாடலும் விற்பனையில் உயர்வு கண்டுள்ளது, குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் இந்த விருப்பம் அதிகரித்து வருகிறது.

66
விலைக் குறைப்பு
Image Credit : Google

விலைக் குறைப்பு

மாறாக, சில மாடல்களில் விற்பனை சரிவு காணப்படுகிறது. குறிப்பாக ஹோண்டாவின் சில மாடல்கள் மற்றும் சுசூகியின் ஜிக்சர் வரிசை எதிர்பார்த்த அளவு விற்பனையை எட்டவில்லை. மொத்தத்தில், 150-200சிசி பிரிவில் நிறுவனங்களுக்கிடையேயான போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது; வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கவர புதிய அம்சங்கள் மற்றும் விலைக் குறைப்பு முக்கிய பங்கேற்பு என நிபுணர்கள் கருதுகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பைக்குகள்
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVS Raider 125: டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் 4 புதிய வசதிகள்! டிராக்ஷன் கன்ட்ரோல் முதல் Type-C சார்ஜிங் வரை!
Recommended image2
எத்தனை வருஷமானாலும் உங்க பைக் புதுசாக ஜொலிக்க வேண்டுமா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!
Recommended image3
வெறும் 0.81 வினாடியில் 96 கி.மீ வேகம்: காற்றில் பறந்து சாகசம் செய்யும் டெஸ்லா கார்!
Related Stories
Recommended image1
ராயல் என்ஃபீல்டு விற்பனை விவரம்: எந்த பைக் அதிகம் விற்றது தெரியுமா?
Recommended image2
பைக்னு ஒன்னு வங்குனா இந்த பைக் வாங்கனும்..! மைலேஜ்ஐ அள்ளி கொடுக்கும் Bajaj CNG பைக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved