இந்தியர்கள் அதிகம் வாங்கிய எலக்ட்ரிக் கார் எது தெரியுமா? ரேட்டை கேட்டா நீங்க வாங்கிடுவீங்க
2025-ல் 46,735 யூனிட்கள் விற்பனையாகி, இந்தியாவின் அதிகம் விற்பனையான எலக்ட்ரிக் காராக எம்ஜி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதன் இன்டெலிஜென்ட் CUV வடிவமைப்பு, நீண்ட தூர பேட்டரி தேர்வுகள் ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்
2025 ஆம் ஆண்டு JSW MG Motor India நிறுவனத்திற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்த ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை MG Windsor EV கைப்பற்றியது. ஒரே ஆண்டில் 46,735 யூனிட்கள் விற்பனையாகி, இதுவரை எந்த ஒரு இவி மாதலும் எட்டாத சாதனையை இந்த கார் பதிவு செய்துள்ளது. மாதத்திற்கு சராசரியாக 4,000 யூனிட்கள் விற்பனையானது, இந்திய வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொண்டு வருவதை தெளிவாகக் காட்டுகிறது.
எம்ஜி வின்ட்சர்
ஆண்டின் இறுதிக்காலத்தில் விற்பனை வேகம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், MG Windsor EV விற்பனை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி ஒரே ஒரு மாதலில் மட்டுமல்ல, முழு பிராண்டிலும் எதிரொலித்தது. 2025 ஆம் ஆண்டில் JSW MG Motor India-வின் மொத்த இவி விற்பனை 111 சதவீதம் உயர்ந்தது. அதே நேரத்தில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனையும் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதனால், MG Windsor EV, நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய தூணாக மாறியுள்ளது.
ஜேஎஸ்வி எம்ஜி மோட்டார்
MG Windsor EV-க்கு கிடைக்கும் வரவேற்பு மெட்ரோ நகரங்களுடன் முடிவடையவில்லை. இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளிலும் இந்த காருக்கு வலுவான தேவை உள்ளது. சிறிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் இவிகளை நம்பகமான, பயனுள்ள தேர்வாக பார்க்கத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது. செடான் போல சௌகரியமும், எஸ்யூவி போல வலிமையும் இணைந்த வடிவமைப்பால், MG Windsor EV இந்தியாவின் முதல் இன்டெலிஜென்ட் CUV எனப்படுகிறது.
எம்ஜி வின்ட்சர் விலை
இந்த காரின் ஏரோகிளைடு டிசைன், விசாலமான பின் இருக்கை வசதி, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் 15.6 இன்ச் கிராண்ட்வியூ டச் ஸ்கிரீன் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்கள். 38 kWh பேட்டரி மூலம் 332 கி.மீ வரை, 52.9 kWh பேட்டரி (ப்ரோ வேரியண்ட்) மூலம் 449 கி.மீ வரை பயணிக்க முடியும். மேலும், Battery-as-a-Service (BaaS) மாடல் மூலம், ஆரம்ப விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது, இந்த காரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

