30000 சம்பளம் வாங்கினாலும் இந்த காரை ஈசியா வாங்கலாம்! MG Comet EV
இப்போதெல்லாம் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு. ஆனா, விலை அதிகம்னு நெனப்போம். குறைஞ்ச விலையில் கிடைக்கிற ஒரு நல்ல காரைப் பத்தி இப்பப் பாக்கலாம்.

எம்ஜி கமெட் ஈவி
குறைந்த பட்ஜெட்டில் நல்ல எலக்ட்ரிக் கார் வேணும்னா எம்ஜி கமெட் EV நல்ல சாய்ஸ். பாதுகாப்பு, டெக்னாலஜின்னு நிறைய அப்டேட்ஸ் இருக்கு. அடிப்படை விலை 7 லட்சத்துல இருந்து ஆரம்பம். ஃபீச்சர்ஸ், விலைனு ஃபுல் டீடெய்ல்ஸ் இங்க இருக்கு.
எம்ஜி கமெட் EV விலை, ஃபைனான்ஸ்
ஷோரூம் விலை 7 லட்சத்துல இருந்து ஆரம்பம். ஆன் ரோடு 7.30 லட்சத்துல இருந்து 8 லட்சம் வரைக்கும். ஊருக்குத் தகுந்த மாதிரி ஆன் ரோடு விலை மாறும். ஒரு லட்சம் டவுன் பேமெண்ட் கொடுத்தா போதும். மீதி 6.30 லட்சம் லோன்ல எடுத்துக்கலாம். 9.8% வட்டி. 5 வருஷ லோன்னா, மாசம் 13,400 ரூபா EMI. மொத்தம் 5 வருஷத்துல 8 லட்சம் கட்டணும்.
ஃபீச்சர்ஸ் எப்படி இருக்கு?
எம்ஜி கமெட் EV, நகரத்துல ட்ராஃபிக்குள்ள ஓட்டறதுக்கு ரொம்ப ஈஸி. சின்ன டிசைன், ஸ்மூத் டிரைவிங், குறைஞ்ச மெயின்டனன்ஸ்னு நிறைய நல்லது இருக்கு.
முக்கியமான ஃபீச்சர்ஸ்
பேட்டரி: 17.3 kWh லித்தியம் அயன்
ரேஞ்ச்: ஒரு ஃபுல் சார்ஜ்ல 230 கி.மீ
மோட்டார் பவர்: 41.4 PS (30 kW), 110 Nm டார்க்
சார்ஜிங் டைம்: 0–100% சார்ஜ் ஆக 7 மணி நேரம் (AC)
டிரைவிங் மோட்ஸ்: Eco, Normal, Sport
பாதுகாப்பு அம்சங்கள்
எம்ஜி கமெட் EV-ல பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துருக்காங்க. டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா & சென்சார், ABS + EBD சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரிவர்ஸ் அசிஸ்டண்ட் சிஸ்டம், பவர் ஃபோல்டிங் ORVMs, LED DRLs & LED டெயில் லேம்ப்ஸ், டூயல் 10.25-இன்ச் ஸ்க்ரீன், வாய்ஸ் கமாண்ட், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, இன்டர்நெட் கனெக்டட் கார் டெக்னாலஜி (i-Smart) எல்லாம் இருக்கு.