- Home
- Auto
- Maruti : கிரெட்டாவுக்கு செக்! விக்டோரிஸ் கார் விலையை அதிரடியாக குறைத்த மாருதி - இப்போ இன்னும் சீப்!
Maruti : கிரெட்டாவுக்கு செக்! விக்டோரிஸ் கார் விலையை அதிரடியாக குறைத்த மாருதி - இப்போ இன்னும் சீப்!
Maruti Victoris Price Drop : மாருதி சுஸுகி தனது பிரபலமான மிட்-சைஸ் SUV-யான 'விக்டோரிஸ்' காரின் டாப்-எண்ட் பெட்ரோல் வேரியன்ட்களின் விலையை குறைத்துள்ளது. விற்பனையை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Maruti Victoris Price Drop
இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான ஹூண்டாய் கிரெட்டாவுக்கு நேரடிப் போட்டி கொடுக்கும் வகையில், மாருதி சுஸுகி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. தனது மிட்-சைஸ் SUV மாடலான ‘விக்டோரிஸ்’ காரின் குறிப்பிட்ட பெட்ரோல் வேரியன்ட்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகபட்சமாக ரூ.39,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கம்பெனி அறிவித்துள்ளது.
எந்த வேரியன்ட்கள் விலை குறைந்துள்ளது?
இந்த விலை குறைப்பு, பெட்ரோல் இன்ஜின் கொண்ட டாப்-எண்ட் வேரியன்ட்களான ZXi (O) மற்றும் ZXi Plus (O) மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த இரண்டு வேரியன்ட்களின் மேனுவல் (MT) மற்றும் ஆட்டோமேட்டிக் (AT) கியர்பாக்ஸ் கொண்ட மொத்தம் நான்கு மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சதவீதக் கணக்கில் பார்த்தால், ZXi (O) பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் மீது அதிகபட்சமாக 2.76% விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ZXi (O) பெட்ரோல் ஆட்டோமேட்டிக் விலையில் 2.49% மற்றும் ZXi Plus (O) பெட்ரோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களின் விலையில் 2.46% குறைக்கப்பட்டுள்ளது.
எந்த மாடல்களின் விலை மாறவில்லை?
விக்டோரிஸ் காரின் பேஸ் மற்றும் மிட் வேரியன்ட்களான LXi, VXi, ZXi மற்றும் ZXi Plus நார்மல் (நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்) பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஃபிரன்ட்-வீல் டிரைவ் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவை அனைத்தும் பழைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும். அதோடு, CNG மற்றும் அதிக மைலேஜ் தரும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல்களின் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
மாருதி சுஸுகி இந்த முடிவை எடுத்தது ஏன்?
தற்போது பெரும்பாலான ஆட்டோமொபைல் கம்பெனிகள் கார்களின் விலையை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாருதி சுஸுகி தனது அதிக டிமாண்ட் உள்ள SUV காரின் விலையைக் குறைத்திருப்பது மார்க்கெட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, விக்டோரிஸ் கார், இந்தியாவில் C-செக்மென்ட் மிட்-சைஸ் SUV பிரிவில் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது. இருந்தாலும், பண்டிகைக் காலத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்களை மேலும் ஈர்க்கவும், இந்த செக்மென்ட்டில் தனது பிடியை இன்னும் வலுப்படுத்தவும் கம்பெனி இந்த யுக்தியை பயன்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
விக்டோரிஸ் காருக்குப் போட்டியாளர்கள் யார்?
இந்திய மார்க்கெட்டில் மாருதி விக்டோரிஸ் காருக்குப் பலமான போட்டியாளர்கள் உள்ளனர். இது ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர், மாருதியின் மற்றொரு மாடலான கிராண்ட் விட்டாரா, டாடா சியரா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற கார்களுக்கு நேரடிப் போட்டியாக உள்ளது. வரும் நாட்களில் நிசான் டெக்டான் காரும் இந்த செக்மென்ட்டில் நுழைய இருப்பதால், போட்டி இன்னும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

