- Home
- Auto
- புது கார் வாங்க ஐடியா இருக்கா? மாருதி ஃப்ராங்க்ஸ் காரின் விலையில் அதிரடி தள்ளுபடி! உடனே வாங்குங்க!
புது கார் வாங்க ஐடியா இருக்கா? மாருதி ஃப்ராங்க்ஸ் காரின் விலையில் அதிரடி தள்ளுபடி! உடனே வாங்குங்க!
புதிய ஜிஎஸ்டி விதிகளின் காரணமாக, மாருதி சுசுகி தனது பிரபல காம்பாக்ட் எஸ்யூவி ‘ஃப்ராங்க்ஸ்’ காரின் விலையில் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.1.11 லட்சம் வரை சேமிக்கலாம்.

மாருதி சுசுகி ஃப்ராங்க்ஸ்
புதிய ஜிஎஸ்டி விதிகளின் காரணமாக, மாருதி சுசுகி தனது பிரபல காம்பாக்ட் எஸ்யூவி ‘ஃப்ராங்க்ஸ்’ காரின் விலையில் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் அதிகபட்சம் ரூ.1.11 லட்சம் வரை சேமிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை மாடல்களில், 1.2 சிக்மா மாடல் ரூ.65,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ.6.94 லட்சத்திற்கு கிடைக்கிறது.
மாருதி கார் தள்ளுபடி
மேலும் 1.2 டெல்டா மாடல் ரூ.7.72 லட்சத்திற்கும் (ரூ.73,000 குறைவு), 1.2 டெல்டா ஏடி ரூ.8.18 லட்சத்திற்கும் (ரூ.77,000 குறைவு) விற்பனை செய்யப்படுகிறது. டெல்டா+ மாடல்கள் முறையே ரூ.8.09 லட்சம் மற்றும் ரூ.8.55 லட்சத்தில் கிடைக்கிறது. சிஎன்ஜி வெர்சன்களிலும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், 1.2 சிஎன்ஜி சிக்மா ரூ.7.81 லட்சத்திற்கும் (ரூ.73,000 குறைவு), 1.2 சிஎன்ஜி டெல்டா ரூ.8.59 லட்சத்திற்கும் (ரூ.81,000 குறைவு) விற்பனை செய்யப்படுகிறது.
ஜிஎஸ்டி புதிய விதிகள்
கூடுதலாக, டெல்டா+ (O) வெர்சன்களிலும் ரூ.76,000 முதல் ரூ.81,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. டர்போ சார்ந்த மாடல்களிலும் பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 1.0 டர்போ எம்ஹெச்வி டெல்டா+ ரூ.84,000 குறைக்கப்பட்டு ரூ.8.96 லட்சத்தில் கிடைக்கிறது. ஜீட்டா மாடல்கள் ரூ.9.72 லட்சம் (ரூ.91,000 குறைவு) மற்றும் ரூ.11 லட்சம் (ரூ.1.03 லட்சம் குறைவு) விலையில் விற்கப்படுகின்றன.
பண்டிகை சலுகை கார்கள்
உயர்ந்த ரக ஆல்ஃபா மாடல்கள் கூட வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சேமிப்பை வழங்குகின்றன. 1.0 டர்போ எம்ஹெச்வி ஆல்ஃபா ரூ.10.56 லட்சம் (ரூ.99,000 குறைவு), ஆல்ஃபா ஏடி ரூ.11.84 லட்சம் (ரூ.1.11 லட்சம்) குறைவு விலையில் கிடைக்கிறது. இதன் மூலம், பண்டிகை காலத்தில் காரை வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு மாருதி ஃப்ராங்க்ஸ் நல்ல தேர்வாக மாறியுள்ளது.