- Home
- Auto
- Maruti Brezza: ரூ.11,000 கொடுத்தா போதும்.. மாருதி சுசுகி பிரெஸ்ஸா புதிய ஃபேஸ்லிஃப்ட் வாங்க புக்கிங் தொடக்கம்!
Maruti Brezza: ரூ.11,000 கொடுத்தா போதும்.. மாருதி சுசுகி பிரெஸ்ஸா புதிய ஃபேஸ்லிஃப்ட் வாங்க புக்கிங் தொடக்கம்!
Maruti Brezza: மாருதி சுசுகி பிரெஸ்ஸா புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தில் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்கான முதல் டீசரை வெளியிட்டுள்ள மாருதி சுசுகி, ரூ.11,000 டோக்கன் தொகையுடன் முன்பதிவையும் தொடங்கியுள்ளது.

ரூ.11,000 முன்பதிவு தொடக்கம்
மாருதி சுசுகி தனது புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.11,000 டோக்கன் தொகையை செலுத்தி நிறுவனத்தின் இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரீனா விற்பனை மையங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்த புதிய மாதலின் விலை ஜூலை 23 அன்று அறிவிக்கப்பட உள்ளது. அதன்பிறகு வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் வழங்கும் பணியும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி.. 20 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக் உடன் வரும் கார் வாங்க ஆஃபர் அறிவிப்பு
வெளிப்புறத்தில் புதிய தோற்றம்
வெளியிடப்பட்ட முன்னோட்டக் காட்சியின் அடிப்படையில், பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்புறம் மற்றும் பின்புற வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அலாய் சக்கரங்கள், மேம்படுத்தப்பட்ட எல்.ஐ.டி. விளக்குகள் உள்ளிட்ட அழகியல் மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வாகனத்திற்கு மேலும் நவீன தோற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேபினில் கூடுதல் வசதிகள்
உள்ளகத்தில் புதிய நிற அமைப்பு, மேம்படுத்தப்பட்ட தொடுதிரை தகவல் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பு உள்ளிட்ட பல புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதோடு, பயணிகளின் வசதியை அதிகரிக்கும் கூடுதல் அம்சங்களும் இந்த மாடலில் சேர்க்கப்படலாம்.
27 கி.மீ மைலேஜ் முதல் சன்ரூஃப் வரை.. பட்ஜெட்டில் வாங்குபவர்களுக்கு இந்த 3 கார்கள்
புதிய இன்ஜின் வருமா? போட்டியாளர்கள் யார்?
இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் அறிமுகமாகலாம் என்றும், அது 5 வேக கைமுறை அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து மாருதி சுசுகி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
முழுமையான விவரங்கள் விலை அறிவிக்கப்படும் நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த புதிய பிரெஸ்ஸா, கியா சோனெட், டாடா நெக்சான், மகிந்திரா எக்ஸ்.யு.வி. 3எக்ஸ்ஓ, ஹூண்டாய் வென்யூ, ஸ்கோடா கைலாக் மற்றும் கியா சைரோஸ் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

