MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Budget Family Car: விலை ரூ.5 லட்சம் + மைலேஜ் 34 கிமீ.. பல வருஷமா மிடில் கிளாஸின் ஃபேவரைட் இந்த கார் தான்!

Budget Family Car: விலை ரூ.5 லட்சம் + மைலேஜ் 34 கிமீ.. பல வருஷமா மிடில் கிளாஸின் ஃபேவரைட் இந்த கார் தான்!

Budget Family Car: கார் வாங்கும்போது பெரும்பாலான குடும்பங்கள் முதலில் பார்க்கும் விஷயங்கள் மூன்றுதான். குறைந்த விலை, அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவு. இந்த 3 அம்சங்களையும் ஒரே காரில் வழங்கி வரும் மாடல்களில் முக்கியமானது மாருதி சுஸுகி வேகன் ஆர்.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 13 2026, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்திய குடும்பங்களின் ஃபேவரைட் கார்
Image Credit : Maruti Suzuki

இந்திய குடும்பங்களின் ஃபேவரைட் கார்

மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனை மீண்டும் எல்லாரையும் திரும்பி பார்க்க வச்சிருக்கு. 2024 ஜூன் மாசத்துல மட்டும் 16,952 யூனிட்கள் விற்பனையாகி இருக்கு. இது போன வருஷம் இதே மாசத்தை விட 31% அதிகம். இப்போ எஸ்யூவி கார்கள் தான் டிரெண்ட்ல இருந்தாலும், ஹேட்ச்பேக் செக்மென்ட்ல வேகன் ஆர் தனக்கான இடத்தை கெட்டியா பிடிச்சிருக்கு. இந்த விற்பனை மூலமா, அந்த மாசத்துல அதிகம் விற்பனையான கார்கள் பட்டியல்ல நாலாவது இடத்தையும் பிடிச்சிருக்கு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மக்கள் மத்தியில் குறையாத வரவேற்பு
Image Credit : MARUTI SUZUKI, FREEPIK

மக்கள் மத்தியில் குறையாத வரவேற்பு

1999-ல் இந்திய மார்க்கெட்டுக்கு வந்த வேகன் ஆர், காலத்துக்கு ஏத்த மாதிரி பல மாற்றங்களோட வந்துட்டே இருக்கு. ஒவ்வொரு புது வெர்ஷன்லயும் டிசைன், பாதுகாப்பு, வசதிகள், பெர்ஃபாமன்ஸ்னு எல்லாத்தையும் அப்டேட் பண்ணி, வாடிக்கையாளர் தேவைக்கு ஏத்த மாதிரி மேம்படுத்தியிருக்காங்க. சிட்டிக்குள்ள தினமும் ஓட்டுறதுக்கு வசதியான சைஸ், உள்ளே நல்ல இடவசதி, சூப்பரான டிரைவிங் அனுபவம், அதிக மைலேஜ் காரணமா, குடும்பங்கள் மத்தியிலயும், வேலைக்கு போறவங்க மத்தியிலயும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கு.

மாதம் முழுக்க வெறும் 9 கார்கள் விற்பனை! ஆனாலும் ஏன் பலர் பாராட்டுகிறார்கள்?

Related Articles

Related image1
Best Selling MPV: 16,111 கார்கள் விற்பனை.. இன்னோவா, கேரன்ஸை முந்திய கார் இதுவா?
Related image2
Hyundai: மாதம் முழுக்க வெறும் 9 கார்கள் விற்பனை! ஆனாலும் ஏன் பலர் பாராட்டுகிறார்கள்?
35
விலை மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள்
Image Credit : maruti suzuki

விலை மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள்

வேகன் ஆர் காரோட ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.99 லட்சம். இதோட டாப் வேரியன்ட் விலை ரூ.6.95 லட்சம் வரைக்கும் போகுது. LXi, VXi, ZXi, ZXi+ அப்படின்னு நாலு வேரியன்ட்கள்ல இந்த கார் கிடைக்குது. இதுல 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 67 PS பவரையும், 89 Nm டார்க்கையும் கொடுக்குது. அதே சமயம், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 90 PS பவரையும், 113 Nm டார்க்கையும் கொடுக்குது. இந்த ரெண்டு இன்ஜின்களுக்குமே 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருக்கு. சில குறிப்பிட்ட வேரியன்ட்கள்ல AMT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் ஆப்ஷனா இருக்கு. குறைஞ்ச செலவுல பயணிக்க விரும்புறவங்களுக்காக CNG வேரியன்ட்டும் விற்பனைல இருக்கு.

45
மைலேஜ் எவ்வளவு தருது?
Image Credit : Maruti Suzuki

மைலேஜ் எவ்வளவு தருது?

மைலேஜ் விஷயத்துலயும் வேகன் ஆர் ஒரு நல்ல பேரை சம்பாதிச்சிருக்கு. 1 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் ஒரு லிட்டருக்கு 24.35 கிலோமீட்டர் மைலேஜ் தருது. அதே AMT வேரியன்ட் 25.19 கிலோமீட்டர் வரைக்கும் மைலேஜ் கொடுக்குது. 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் 23.56 கிலோமீட்டரும், AMT வேரியன்ட் 24.43 கிலோமீட்டரும் மைலேஜ் தருது.

55
சிஎன்ஜி மைலேஜ்
Image Credit : maruti suzuki

சிஎன்ஜி மைலேஜ்

இதுவே சிஎன்ஜி வேரியன்ட்னா, ஒரு கிலோ கேஸ்ல 33.47 கிலோமீட்டர் வரைக்கும் போகும்னு கம்பெனி சொல்லுது. குறைஞ்ச விலை, குறைவான பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ், நம்பகத்தன்மை போன்ற காரணங்களால, பட்ஜெட்ல ஒரு நல்ல கார் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு வேகன் ஆர் இன்னைக்கும் ஒரு சூப்பர் சாய்ஸா இருக்கு.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி
குறைந்த விலை கார்
குடும்ப கார்கள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Selling MPV: 16,111 கார்கள் விற்பனை.. இன்னோவா, கேரன்ஸை முந்திய கார் இதுவா?
Recommended image2
Numeros n-First: ஒரே சார்ஜில் 109 கி.மீ.. ரூ.80,000 கூட இல்ல.. மிரட்டலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Recommended image3
Hyundai: மாதம் முழுக்க வெறும் 9 கார்கள் விற்பனை! ஆனாலும் ஏன் பலர் பாராட்டுகிறார்கள்?
Related Stories
Recommended image1
Best Selling MPV: 16,111 கார்கள் விற்பனை.. இன்னோவா, கேரன்ஸை முந்திய கார் இதுவா?
Recommended image2
Hyundai: மாதம் முழுக்க வெறும் 9 கார்கள் விற்பனை! ஆனாலும் ஏன் பலர் பாராட்டுகிறார்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved