- Home
- Auto
- 36.47 கி.மீ மைலேஜ் தரும் மாருதி ஆட்டோமேட்டிக் CNG கார்கள்: பட்ஜெட்டுக்கு ஏற்ற பெஸ்ட் சாய்ஸ் எது?
36.47 கி.மீ மைலேஜ் தரும் மாருதி ஆட்டோமேட்டிக் CNG கார்கள்: பட்ஜெட்டுக்கு ஏற்ற பெஸ்ட் சாய்ஸ் எது?
எரிபொருள் செலவைக் குறைக்கும் ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்க திட்டமிடுபவர்களுக்காக மாருதி சுஸூகியின் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ ஆகிய 3 பிரபல கார்களின் விவரங்களை பற்றி பார்போம்.

சிறந்த CNG ஆட்டோமேட்டிக் கார்கள்
3 மாருதி மாடல்கள் எரிபொருளைச் சேமிக்கும் ஒரே ஃபார்முலா, கூடவே ஒரு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன். இவற்றில் இந்த தீபாவளிக்கு உங்கள் காரேஜை அலங்கரிக்க இதில் எந்த கார் தகுதியானது? விலை, பாடி ஸ்டைல், வசதிகள் மற்றும் பயன்பாடு என பல விஷயங்களில் மாறுபடுவதால் இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்வது அத்தனை சுலபமல்ல. இந்த தீபாவளிக்கு ஒரு சிறந்த ஆட்டோமேட்டிக் CNG காரை வாங்க நீங்கள் முடிவு செய்திருந்தால், உங்கள் பணத்திற்கு எது சரியான தேர்வாக இருக்கும் என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift CNG)
கறைந்த ஆரம்ப விலையிலும், அதிக வேரியண்ட் தேர்வுகளுடனும் கிடைக்கும் மிகவும் சிக்கனமான ஹேட்ச்பேக் மாடல் இதுவாகும்.
எஞ்சின் & கியர்பாக்ஸ் - 1.2-லிட்டர் Z-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் | 5-ஸ்பீடு AMT
ARAI மைலேஜ் - 35.34 கி.மீ/கிலோ
டிரைவிங் ரேஞ்ச் (தோராயமாக) - 300 கி.மீ (CNG-யில் மட்டும்)
டேங்க் கொள்ளளவு - 55 லிட்டர் (CNG) / 37 லிட்டர் (பெட்ரோல்)
வேரியண்ட் & விலை விவரங்கள் (எக்ஸ்-ஷோரூம்):
VXi CNG AMT - ரூ. 7.92 லட்சம்
VXi (O) CNG AMT - ரூ. 8.18 லட்சம்
ZXi CNG AMT - ரூ. 8.86 லட்சம்
சிறப்பம்சம் - இந்த மூன்றிலும் மிகக் குறைந்த ஆரம்ப விலையில் (ரூ. 7.92 லட்சம்) கிடைப்பதுடன், வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு 3 வேரியண்ட்களை வழங்குகிறது.
மாருதி டிசையர் (Maruti Dzire CNG)
அதிக மைலேஜ், சிறந்த டிரைவிங் ரேஞ்ச் மற்றும் கூடுதல் பூட் ஸ்பேஸ் விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற காம்பேக்ட் செடான் மாடல்.
எஞ்சின் & கியர்பாக்ஸ் - 1.2-லிட்டர் Z-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் | 5-ஸ்பீடு AMT
ARAI மைலேஜ் - 36.47 கி.மீ/கிலோ (மிக அதிக மைலேஜ்)
டிரைவிங் ரேஞ்ச் (தோராயமாக) - 310 கி.மீ (CNG-யில் மட்டும்)
டேங்க் கொள்ளளவு - 55 லிட்டர் (CNG) / 37 லிட்டர் (பெட்ரோல்)
வேரியண்ட் & விலை விவரங்கள் (எக்ஸ்-ஷோரூம்):
VXi CNG AMT - ரூ. 8.53 லட்சம்
ZXi CNG AMT - ரூ. 9.53 லட்சம்
சிறப்பம்சம் - ஒரு கிலோ CNG-க்கு 36.47 கி.மீ வரை அதிகபட்ச மைலேஜையும், 310 கி.மீ வரை நீண்ட டிரைவிங் ரேஞ்சையும் வழங்குகிறது.
மாருதி பலேனோ (Maruti Baleno CNG)
கூடுதல் சொகுசு வசதிகள், கம்பீரமான தோற்றம் மற்றும் அகலமான இடவசதி கொண்ட பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல்.
எஞ்சின் & கியர்பாக்ஸ் - 1.2-லிட்டர் Z-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் | 5-ஸ்பீடு AMT
ARAI மைலேஜ் - 34.47 கி.மீ/கிலோ
டிரைவிங் ரேஞ்ச் (தோராயமாக) - 290 கி.மீ (CNG-யில் மட்டும்)
டேங்க் கொள்ளளவு - 55 லிட்டர் (CNG) / 37 லிட்டர் (பெட்ரோல்)
வேரியண்ட் & விலை விவரங்கள் (எக்ஸ்-ஷோரூம்):
Delta CNG AMT - ரூ. 8.32 லட்சம்
Zeta CNG AMT - ரூ. 9.32 லட்சம்
சிறப்பம்சம் - ஸ்விஃப்ட்டை விட கூடுதல் வசதிகளுடனும், டிசையரின் ஆரம்ப விலையை விடக் குறைந்த விலையிலும் (ரூ. 8.32 லட்சம்) பிரீமியம் அனுபவத்தைத் தருகிறது.








