6 ஏர்பேக்குகள்.. 12.3 இன்ச் பெரிய ஸ்கிரீன்.. இந்த விலைக்கு இவ்ளோ அம்சமா! வேற லெவல் போங்க
கியா இந்தியா தனது 2026 சைரோஸ் மாடலில் புதிய HTK (EX) டிரிம்மை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் இந்த வேரியண்ட், எலக்ட்ரிக் சன்ரூஃப், 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

கியா சைரோஸ் அம்சங்கள்
தென் கொரிய வாகன நிறுவனம் கியா இந்தியா, தனது 2026 சைரோஸ் (Syros) வரிசையில் புதிய HTK (EX) டிரிம்மை சேர்த்து மாடல் தேர்வுகளை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் கிடைக்கிறது. HTK (EX) பெட்ரோல் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.89 லட்சம், அதே நேரத்தில் டீசல் வேரியண்ட் விலை ரூ.10.63 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அம்சங்களுடன் மதிப்பை உயர்த்தும் வகையில் இந்த டிரிம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட HTK (EX) வேரியண்டில் வெளிப்புற வடிவமைப்பில் பல அப்டேட்கள் உள்ளன. இதில் LED DRL, LED ஹெட்லெம்ப், LED டெயில் லேம்ப்கள், மேலும் R16 அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக எலக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டைலான டோர் ஹேண்டில்கள், மற்றும் பிரீமியம் லுக்கை தரும் சிறிய மாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளன.
கியா சைரோஸ் HTK EX விலை
இன்டீரியர் மற்றும் வசதிகள், 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக்கலாக சரிசெய்யவும் மடிக்கவும் ORVMs, மற்றும் சென்சார் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்புக்காக EBD உடன் ABS, ESC, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 6 ஏர்பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் உட்பட 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
என்ஜின் தேர்வாக, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (120bhp/172Nm) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (116bhp/250Nm) என்ற இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. அனைத்து வேரியண்ட்களிலும் 6-ஸ்பீட் மேனுவல் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. பெட்ரோலில் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக், டீசலில் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் விருப்பமாக கிடைக்கும். தற்போது சைரோஸ் விலை ரூ.8.67 லட்சம் முதல் ரூ.15.94 லட்சம் வரை உள்ள நிலையில், இது டாடா நெக்ஸான், ஸ்கோடா குஷாக், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

