10,000 கி.மீ. ஓடும் உறுதி... ஆனால் பராமரிப்பு செலவு ரொம்ப கம்மி... அசத்தும் கியா சோனெட் SUV!
கியா நிறுவனத்தின் கியா சோனெட் (Kia Sonet SUV) கார் இந்தியாவில் விற்கப்படும் SUV கார்களில் பராமரிப்பு செலவு மிகக் குறைவாக ஆகும் கார் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த காரை வாங்கிய வாடிக்கையாளர்களிடம் நடந்திய கருத்துக்கணிப்பில் இருந்து இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கியா நிறுவனத்தின் கியா சோனெட் (Kia Sonet SUV) கார் இந்தியாவில் விற்கப்படும் SUV கார்களில் பராமரிப்பு செலவு மிகக் குறைவாக ஆகும் கார் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த காரை வாங்கிய வாடிக்கையாளர்களிடம் நடந்திய கருத்துக்கணிப்பில் இருந்து இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Kia Sonet SUV டீசல் காரின் பராமரிப்பு செலவு சந்தையில் இருக்கும் இதே போன்ற மற்ற கார்களை விட 14 சதவீதம் குறைவாகவே உள்ளது. பெட்ரோலில் இயங்கும் மாடலிலும் Kia Sonet SUV காரின் பராமரிப்புச் செலவு மற்ற கார்களை விட 16 சதவீதம் குறைவு தான். இந்தக் காரின் ஒட்டுமொத்த செலவு டீசல் மாடலில் 10 சதவீதம் வரை குறைவு பெட்ரோல் மாடலில் 4 சதவீதம் வரை குறைவு.
ஆண்டுக்கு குறைந்தது 10,000 கிலோமீட்டர் பயணிக்கும் Kia Sonet கார்களின் உரிமையாளர்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் காரின் டீசல் மாடல் இதே போன்ற பிற மாடல்களைக் காட்டிலும் அதிக மைலேஜ் கொடுக்கும் காராகவும் இருக்கிறது. பெட்ரோல் காரின் மைலேஜ் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது.
கியா சோனேட் பெட்ரோல், டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. டீசல் காரில் 1.5 லிட்டர் என்ஜின் இருக்கிறது. 360 டிகிரி கேமரா, ADAS, பின்புற பார்க்கிங் சென்சார், ஆட்டோ எமெர்ஜென்சி பிரேக் என சிறப்பான பாதகாப்பு வசதிகள் உள்ளன.
பெட்ரோல் என்ஜின் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.7.79 லட்சம் முதல் ரூ.13.89 லட்சம் வரை உள்ளது. டீசல் என்ஜின் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.9.95 லட்சம் முதல் ரூ.14.89 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது.
கியா சோனேட் கார் டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி ப்ரெஸ்ஸா, மஹிந்திரா XUV 300, நிசான் மேகனைட் போன்ற கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது..