இந்தியாவில் கனெக்டட் கார் டிரெண்ட்.. கியா தான் லீடர்.. விற்பனை எவ்வளவு தெரியுமா?
கியா இந்தியா இந்திய சாலைகளில் 5,00,000 கனெக்டட் கார்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கனெக்டட் வேரியண்ட்கள் விற்பனையில் 40% பங்குடன் முன்னிலை வகிக்கின்றன.

கியா கனெக்டட் கார்
இந்திய சந்தையில் கனெக்டெட் கார்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கியா இந்தியா ஒரு முக்கிய சாதனையை தெரிவித்துள்ளது. இந்திய சாலைகளில் தற்போது 5,00,000 கனெக்டெட் கார்கள் என்ற மயில்கல்லை நிறுவனம் எட்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் கியாவின் இன்டெலிஜென்ட் மொபிலிட்டி அமைப்பை பெரிய அளவில் ஏற்றுக்கொண்டதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், கனெக்டெட் வேரியண்ட்கள் தற்போது நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனையில் சுமார் 40% பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியா செல்டோஸ்
இந்த சாதனையில் கியா செல்டோஸ் பங்காகியுள்ளது. மொத்த கனெக்டெட் கார் விற்பனையில் சுமார் 70% வரை செல்டோஸ் மாடலின் பங்களிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சோனெட் மற்றும் காரன்ஸ் போன்ற மாடல்களும் இந்த இலக்கை அடைய உதவியுள்ளன. இதன் மூலம், கியா வழங்கும் கனெக்டிவிட்டி வசதிகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருப்பது தெரிய வருகிறது. கனெக்டெட் அம்சங்களின் அனுபவத்தில் திருப்தி அடையும் வாடிக்கையாளர்கள் மீண்டும் கியா கார்களையே தேர்வு செய்வதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கியா காரென்ஸ் கனெக்ட்
பயணத்தை பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்றும் வகையில், கியா தனது புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. கனெக்டெட் காரில் புதுப்பிக்கப்பட்ட நெவிகேஷன், சீரான இணைப்பு, மற்றும் OTA வசதிகள் முக்கியமாக பயன்படுத்தப்படும் அம்சங்களாக உள்ளன. கியாவின் முக்கிய வசதிகள், தொழிற்சாலை தரத்திலேயே மென்பொருளை ஓவர்தி ஏர் (OTA) முறையில் அப்டேட் செய்யும் திறன், ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ் மூலம் வாகன சோதனை, மேலும் டிஜிட்டல் கீ 2.0 வழியாக ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மூலம் காரை அணுகும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.
360 வியூ மானிட்டர்
மேலும், 360 டிகிரி காட்சியை நேரலையில் பார்க்க உதவும் சரவுண்ட் வியூ மானிட்டர் போன்ற வசதிகளும் பாதுகாப்பை உயர்த்துகின்றன. இதனிடையே, கியா இந்தியா தனது எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் கனெக்டெட் தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. EV பிரிவில் 100% கனெக்டெட் கார் பரவல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘டிரைவ் கிரீன்’ போன்ற இன்டராக்டிவ் அம்சங்கள் மற்றும் 7.4kW, 11kW ஆப்ஷன்களுடன் வரும் ஸ்மார்ட் ஹோம் சார்ஜர்கள் போன்ற வசதிகள், EV வாடிக்கையாளர்களுக்கான அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

