MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் வரப்போகுது: 400 கி.மீ வரை பயணிக்கலாம்!

ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் வரப்போகுது: 400 கி.மீ வரை பயணிக்கலாம்!

தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், தற்போது அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆடை முதல் பெட்ரோல் வரை ஜியோ பிராண்ட் இல்லாத துறைகளே இல்லை. இந்நிலையில், ஜியோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு துறையிலும் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 28 2025, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ரிலையன்ஸ் ஜியோ எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு துறையில் கால் பதிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இ-பைக் தினசரி பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ரிலையன்ஸ் நிறுவனம் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் சில அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வைரலாகி வருகின்றன. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்

ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்

ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் அதிக மைலேஜுடன் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த சைக்கிள் முழு பேட்டரி சார்ஜிங்கில் 400 கிலோமீட்டர் வரை செல்லும் என்று செய்திகள் வந்துள்ளன. எலக்ட்ரிக் சைக்கிள் பிரிவில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்படலாம் என்று தகவல். மேலும், இந்த சைக்கிள் பேட்டரியை வெறும் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
 

34
எலக்ட்ரிக் சைக்கிள்

எலக்ட்ரிக் சைக்கிள்

அதுமட்டுமின்றி, இந்த சைக்கிளில் ரிமூவபிள் பேட்டரி கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 250 வாட்ஸ் முதல் 500 வாட்ஸ் ரிமூவபிள் பேட்டரி கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், வசதியான ரைடுக்கு இதில் ஸ்மூத் ஆக்சிலரேஷன் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எக்கோ, நார்மல், ஸ்போர்ட் போன்ற மோட்ஸ்களை வழங்கியுள்ளனர். ஃபாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் 3 முதல் 5 மணி நேரத்திலும், நார்மல் சார்ஜிங்கில் 6 முதல் 8 மணி நேரத்திலும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

44
ஜியோ சைக்கிள் அம்சங்கள்

ஜியோ சைக்கிள் அம்சங்கள்

அதேபோல், இதில் எல்இடி லைட், ஸ்பீடுடன் பேட்டரி லெவலை காட்டும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஜிபிஎஸ், புளூடூத், மொபைல் ஆப் ஒருங்கிணைப்புடன் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. விலை விவரங்களை பொறுத்தவரை, இந்த எலக்ட்ரிக் சைக்கிள் சுமார் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சைக்கிள் சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல். இந்த செய்திகளில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

ரூ.9 ஆயிரம் முன்பணம்; ஒரே சார்ஜில் 165 கிமீ தரும் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
WagonR: வெறும் ரூ.2.25 லட்சத்தில் மின்சார காராக மாறிய பழைய வேகன்ஆர்! 110 கி.மீ பயணிக்குமா?
Recommended image2
டாடா அல்ட்ராஸ் முதல் கியா சோனெட் வரை: ரூ. 10 லட்சத்திற்குள் கிடைக்கும் 5 சிறந்த டீசல் கார்கள்!
Recommended image3
மழைக்காலத்தில் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும்? சூப்பரான டிப்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved