ஜனவரியில் விலை உயரும்.. டிசம்பர் தள்ளுபடி மழை.. ரூ.4 லட்சம் விலை குறைப்பு
ஜீப் இந்தியா தனது கிராண்ட் செரோக்கி பிரிமியம் எஸ்யூவிக்கு டிசம்பர் மாதம் முழுவதும் ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த சொகுசு எஸ்யூவியை ஜனவரி மாத விலை உயர்வுக்கு முன் வாங்குவது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

டிசம்பர் கார் ஆஃபர்கள்
டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில், கார் நிறுவனங்கள் வருட இறுதி தள்ளுபடிகளை குவித்து வழங்குகின்றன. அந்த வரிசையில், ஜீப் இந்தியா தனது பிரிமியம் எஸ்யூவி மாடலான கிராண்ட் செரோக்கிக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் முழுவதும் இந்த சொகுசு எஸ்யூவிக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜீப்பின் இந்த அதிரடி, வருட இறுதி கார் வாங்குவோருக்கான சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது.
ரூ.4 லட்சம் தள்ளுபடி
முந்தைய ரூ.63 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.59 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே பிரீமியம் லுக்குடன், சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் ஆஃப்-ரோடு திறன் கொண்ட ஒரு SUV வாங்க நினைப்பவர்களுக்கு இது கோல்டன் டைம். மேலும் ஜனவரியில் விலை உயர்வு இருக்கும் என டீலர்கள் எதிர்பார்ப்பதால், டிசம்பர் ஒரு சரியான டீல் என நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய மாடல் கூர்மையான வடிவமைப்பு, எட்டு ஏர்பேக்குகள், 360° கேமரா போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ஜீப் செரோக்கி தள்ளுபடி
காரின் வெளிப்புற வடிவமைப்பு ஜிப்பின் சிக்னேச்சர் ஸ்டைலை மேலும் நவீனமாக. 7-ஸ்லாட் கிரில், ஷார்ப் எல்இடி டிஆர்எல்கள், வலிமையான பம்பர் ஆகியவை SUV தனிச்சிறப்பை மேலும் திகழவைக்கின்றன. பக்கவாட்டில் சதுர வீல் ஆர்ச்கள், பல்கட் கிலாடிங் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்கள் தரத்தை காட்டுகின்றன. உள்ளே லெதர் சீட்கள், வென்டிலேஷன், ஆம்பியன்ட் லைட்டிங், 9-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 1,076 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட வசதிகள் பிரீமியம் ஃபீல் தருகின்றன. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 270 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க்கை வழங்குகிறது.
கிராண்ட் செரோக்கி விலை குறைவு
ஜீப்பின் ஆஃப்-ரோட் மரபு காரணமாக செரோக்கியின் திறன் தனித்துவமாக உள்ளது. 215 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 10.25 இன்ச் பேசஞ்சர் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் நீண்ட பயணங்களிலும், கடினமான நிலத்திலும் நிம்மதியளிக்கும். ஆனால், தள்ளுபடி விவரங்கள் நகரம், டீலர், வேரியண்ட், ஸ்டாக் போன்றவற்றைப் பொறுத்து மாறக்கூடும். எனவே, உண்மையான சலுகை தகவல்களை அறிய அருகிலிருக்கும் ஜீப் டீலரை தொடர்பு கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

