நவம்பர்; இந்தியாவில் வருகின்றது ஹோண்டாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?
Honda Electric Scooter : பிரபல கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் இந்த மாதம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுகிறது.
Honda Activa Electric
Honda Motorcycle & Scooter India (HMSI) நிறுவனம், வரவிருக்கும் தங்களுடைய மின்சார இரு சக்கர வாகனத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ஆக்டிவா" எலக்ட்ரிக் அறிமுகம் குறித்த யுகங்களை தூண்டியுள்ளது என்றே கூறலாம். வருகின்ற நவம்பர் 27ம் தேதி இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், பிரபலமான ஆக்டிவா பிராண்டின் கீழ் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையை வலுவாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. "வாட்ஸ் அஹெட்" என்ற ஸ்லோகன் இப்பொது ஹோண்டா நிறுவனத்தால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.
கார், பைக் விபத்துக்குப் பின் இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி?
Honda
ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கான தனது மின்சார வாகன (EV) திட்டங்களை சீராக முன்னெடுத்து வருகிறது. கடந்த ஆண்டு காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் மோட்டார்கள், பேட்டரி பேக்குகள், சார்ஜர்கள் மற்றும் கட்டுப்படுத்திகள் போன்ற முக்கிய EV பாகங்கள் மீது அந்நிறுவனத்தால் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், காப்புரிமைகளில் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் என்னவாக இருக்க முடியும் என்பதற்கான வடிவமைப்பு கூறுகள் அடங்கும். இதில் ஃப்ளோர்போர்டின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையான பேட்டரி பேக் மற்றும் பின் சக்கரத்தை இயக்கும் ஹப் மோட்டார் ஆகியவை அடங்கும்.
honda activa
இந்த ஹப் மோட்டார் செட்டப் அதிக பயன்பாட்டு-மையப்படுத்தப்பட்ட, இடைப்பட்ட ஸ்கூட்டரைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில், ஹோண்டாவின் எதிர்கால EVகள், பரந்த பேட்டரி-மாற்று நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படும் மாற்றக்கூடிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Honda Activa Scooter
ஹோண்டாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் "பிளாட்ஃபார்ம் ஈ" எனப்படும் புதிய பிரத்யேக பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும். இது பல்வேறு பேட்டரி கட்டமைப்புகளுடன் கூடிய மாடல்களின் வரம்பை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா எலக்ட்ரிக், இந்திய சந்தையில் ஹோண்டாவின் அறிமுக EV ஆக எதிர்பார்க்கப்படுகிறது. இது "மிட்-ரேஞ்ச்" நிலையான-பேட்டரி வடிவமைப்பிற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றக்கூடிய பேட்டரி அமைப்புடன் கூடிய இரண்டாவது EV மாடலும் தயாராக உள்ளது. இந்திய சந்தையில் சுமார் 1 முதல் 1.2 லட்சம் என்ற விலையில் இது அறிமுகமாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேனிட்டி வேன் தான் வேணும்; கேரவனுக்கு நோ சொல்லும் நடிகர்கள் - ஏன் தெரியுமா?